அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (338)

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் வெள்ளிவிழா! – கி.வீரமணி நாகை மாவட்டம், வேதாரண்யம் ஒன்றியம் கோடியக்கரை முதன்மைச் சாலையில் மறைந்த பெரியார் பெருந்தொண்டர் மு.தங்கவேல் அவர்களால் பெரியார் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட இடத்தில் புதிதாகக் கட்டப்பட்ட பெரியார் படிப்பகம் திறப்பு விழா 31.1.2005 அன்று மாலை 5:00 மணிக்கு நடந்தது. ஒன்றிய தி.க. தலைவர் ஆசிரியர் இரா.ச. சீனிவாசன் தலைமையில் மாவட்ட தி.க. தலைவர்கள் வி.எஸ்.டி. அழகப்பன், வீ. மோகன், ஊராட்சி மன்றத் தலைவர் சுசீலாமுருகன், க. […]

மேலும்....

மே தினமும் பெண் தொழிலாளர்களும் – முனைவர் வா.நேரு

தந்தை பெரியார் அவர்களால் 1930களிலேயே தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுங்கள் என அழைப்பு விடுக்கப்பட்டு ஆண்டுதோறும் நாமெல்லாம் கொண்டாடும் நாள். தொழிலாளர்கள் தினம் கொண்டாட ஆரம்பிக்கப்பட்டு ஒரு நூற்றாண்டுக்கு மேல் ஆகின்றது.தொழிலாளர் என்று நினைக்கும்போது உலகின் சரிபாதியாக இருக்கும் பெண் தொழிலாளர்களின் நிலை என்ன என்பது நினைவுக்கு வருகிறது. எவ்வளவோ உலகில் மாறுதல்கள் ஏற்பட்ட நிலையில் அறிவியல் வளர்ச்சிகளும்,செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய புதிய கண்டுபிடிப்புகளும் வந்து கொண்டிருக்கும் இந்த நாளில் பெண்களுக்கு பணிபுரியும் வாய்ப்புக் கிடைப்பதென்பதே அரிதாகத்தான் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள் – மோடியின் ‘பாச்சா’ பலிக்காது !

1. கே: மோடியின் இஸ்லாமியர் வெறுப்புப் பேச்சு அப்பட்டமான விதிமீறல் என்று தெரிந்தும் தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும் அமைதி காப்பது ஏன்? மோடியைத் தகுதி நீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் என்ன செய்ய வேண்டும்? – அ.ரோசா, சேலம். ப : மக்கள் மன்றத்தின் தீர்ப்பே இறுதி முக்கியத் தீர்வு ஆகும். இடையில் உச்சநீதிமன்றத்திலும் பரிகாரம் தேட முயற்சிக்க வேண்டும். 2. கே: “தாலி பறிக்கப்படும்” என்ற மோடியின் வக்கிர, வன்முறைப் பேச்சுக்கு, பிரியங்கா அளித்துள்ள பொருள் பொதிந்த […]

மேலும்....

மே நாள் மேன்மை – முனைவர் அதிரடி க. அன்பழகன்

உலகின் ஆகச்சிறந்த – பரிணாமத்தின் உச்சநிலை உயிராக இருக்கும் இனம் மனித இனமாகும்.அம்மனித இனம் தோன்றிய காலம்முதல் இன்றுவரை மனித இனத்திலும் – உலக இயற்கையிடத்தும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் எண்ணற்றவை. உலகில் அனைத்தும் மாற்றத்திற்குட்பட்டவை. மாற்றம் ஒன்றே மாறாதது என்ற அறிவியல் உண்மைக்கு அறிவும் – உழைப்பும் அடிப்படை என்றால் அது மிகையில்லை. அறிவார்ந்த உழைப்பே ஆக்கம் தரும். அயரா உழைப்பே அறிவை விரிவு செய்யும். அறிவின் உயர் எல்லையான பகுத்தறிவுதான் இன்றைய உலகின் கற்பனைக்கு எட்டா […]

மேலும்....

சமூகநீதி கிலோ எவ்வளவு ? – வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி

இந்திய வரலாற்றில் அரசமைப்புச் சட்டத்திற்கு நேரெதிரான நடைமுறைகளையும், செயல்பாடுகளையும் தனது பத்தாண்டு கால ஆட்சியில் வெளிப்படையாக அரங்கேற்றியவர் நரேந்திர மோடி. அவர் பதவிப் பிரமாணம் எடுத்தது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் தான்; ஆனால், உள்ளத்தில் அவர் எடுத்துக்கொண்டது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இந்துத்துவக் கொள்கை உறுதிமொழியை. அரசமைப்புச் சட்டத்தின்படி அவரின் உறுதிமொழி அமைந்திருந்தால், விருப்பு வெறுப்பு இன்றி அனைவருக்குமான, அனைத்து இந்திய மக்களுக்குமான பிரதமராக இருந்திருப்பார். ஆனால், அவர் வளர்ந்த ஆரிய பீடமான ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, பிரிவினைவாதக் […]

மேலும்....