ராஜத்தின் திருமணம் – ஏ.வி.பி.ஆசைத்தம்பி

காலம் கெட்டுப் போய்விட்டதாகவே ஓலமிடுகிறார்கள். கலி வந்து விட்டானாம்! அதனால்தான் எல்லாம் தலை கீழாக நடக்கிறதாம்! பழையகால பத்தாம் பசலிகள் சமயம் கிடைத்த போதெல்லாம் யார் கேட்டாலும் கேட்காவிட்டாலும் இதைப் போல் சொல்லத் தவறுவதில்லை. சாஸ்திரங்களையும் பழைய சம்பிரதாயங்களையும் யாரும் மதிப்பதில்லையே என்று சாம்பசிவ அய்யருக்கு மிகவும் வருத்தம். சாஸ்திரிய சம்பிரதாயம் மறுபடியும் ஜனங்களிடையே பரவ, சில சங்கங்களைக்கூட அய்யர் ஸ்தாபித்தார். இந்தக் காலத்திலே இந்தச் சங்கங்களை யார் மதிப்பார்கள்? அய்யரின் பேச்சைக் கேட்க ஆட்களே இல்லை! […]

மேலும்....

வாருங்கள் அய்ஸ்லாந்து போவோம் !  – சரோ. இளங்கோவன்

பெரியார் பகுத்தறிவு வழியை ஏற்று முன்னேறும் குடும்பம் நாங்கள். வேலை ஓய்வுக்குப் பிறகு எங்கள் குறிக்கோள் பெரியார் மனித நேயத்தை உலகெங்கும் பரப்புவது. எங்கள் உழைப்பிற்கு பரிசு பேரக்குழந்தைகளுடன் உல்லாசப் பயணம் செல்வது என நிறைய இடங்களுக்குச் சென்றுள்ளோம். அந்தப் பயணங்களுள் ஒன்றுதான் அய்ஸ்லாந்து பயணம். எங்கள் பேத்தி மேனகாவிற்கு இளவேனில் கால (spring break) 5 நாள்கள் விடுமுறை. அய்ஸ்லாந்து அது எங்கே உள்ளது? வட அட்லாண்டிக் கடலில் கிரீன்லாந்துக்கும் நார்வேக்கும் இடையே அமைந்துள்ள ஒரு […]

மேலும்....

கருப்புச் சட்டை அணியாத தோழருக்கு ஒரு ரூபாய் தண்டனை! – நேர்காணல்

திராவிடர் கழகத்தின் உறுப்பினராக தாத்தா கருப்பன் அவர்கள், அப்பா முனியாண்டி அவர்கள், இப்போது சின்னத்துரை அவர்கள்! காலம் காலமாக இந்த இயக்கத்தில், குடும்பத்தோடு பணி செய்கிறார்களே, என்ன காரணம்? தனிப்பட்ட பயன்கள் எதுவும் இருக்கிறதா இல்லை பணம் எதுவும் கிடைக்கிறதா? மெழுகுவத்தியின் நிறம் கருப்பு ! எதுவுமில்லை! மாறாக நான்கு பேர் பாராட்டினால், அதே அளவு விமர்சனமும் செய்வார்கள். எதிராளிகளுக்கும் சேர்த்து, பாடுபடுவதே இந்த இயக்கத்தினர் பணி! மெழுகுவத்திகள் தன்னையே உருக்கிக் கொள்ளும்! இவர்கள் கருப்பு நிற […]

மேலும்....

சுயமரியாதைக் காற்று சூறாவளியாய் சுழன்றடிக்கட்டும் ! – கி. தளபதிராஜ்

காங்கிரஸ் நேரடியாகத் தேர்தலில் பங்கேற்காத காலம். சமூகச் சீர்திருத்தம், ஜாதி – தீண்டாமை ஒழிப்பு, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் போன்ற கொள்கைகளில் காங்கிரஸ் உறுதியாக இருக்கும் என நினைத்து, 1919ஆம் ஆண்டில் ஈரோட்டில் தான் வகித்த நகர மன்றத் தலைவர் உட்பட பல பதவிகளையும் உதறித் தள்ளிவிட்டு காங்கிரசில் தன்னை இணைத்துக் கொண்டார் பெரியார். காங்கிரஸ் – சுயமரியாதை இயக்கம் – நீதிக்கட்சி – திராவிடர் கழகம் என எந்த நிலையிலும் அவரது முதன்மையான கொள்கை – குறிக்கோள் […]

மேலும்....

சுயமரியாதை இயக்கம் – ஊடகவியலாளர் கோவி.லெனின்

ஜஸ்டிஸ் என்ற பெயரில் பத்திரிகை நடத்தியதால் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை ‘ஜஸ்டிஸ் பார்ட்டி’ என்று பொதுமக்கள் அழைக்க, அது தமிழில் ‘நீதிக் கட்சி’ என்று பெயர் பெற்றுவிட்டது. திராவிட இயக்கத்தின் மற்றொரு பரிமாணமான சுயமரியாதை இயக்கத்தின் தோற்றம் என்பது ‘குடிஅரசு’ பத்திரிகை தொடங்கப்பட்ட நாளினையே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் இயக்கத்தில் காந்தியின் சீடராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் இருந்த தந்தை பெரியார், கேரள மாநிலம் வைக்கம் மகாதேவ சாமி கோயில் அமைந்துள்ள தெருவில் நடக்க […]

மேலும்....