பறிக்கப்பட்ட எம்.எஸ்.சுப்புலட்சுமியின் சுயம்!-சாவித்திரி கண்ணன்

சங்கீத மேதைமையில் கேள்விக்கு அப்பாற்பட்டவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி! ஆனால், அவர் ஏன் தான் பிறந்த இசைவேளாளர் குலத்தின் அடையாளத்தை மறைக்க நிர்பந்திக்கப்பட்டார்! பிராமணர்கள் ஏன் அவருக்கு புனித பிம்பத்தைக் கட்டமைத்து, தங்களவராகச் சித்திரித்தனர். டி.எம்.கிருஷ்ணா பேசிய உண்மை சுடுகிறதா..? அலசுவோம்… ‘‘எம்.எஸ்.எஸ். அம்மாவை இழிவாகப் பேசிவிட்டார், அவரது நம்பகத் தன்மையை கேள்விக்கு உள்ளாக்கிவிட்டார்… ஆகவே, டி.எம்.கிருஷ்ணாவிற்கு மியூசிக் அகாதெமியின் சங்கீத கலாநிதி விருதை வழங்கக் கூடாது’’ என முழங்குகிறார்கள் சிலர்! இவர்கள் நீதிமன்றம் சென்று ‘இந்த ஆண்​டுக்கான எம்.எஸ்​.சுப்பு​லட்​சுமி​யின் […]

மேலும்....

இறுதி ஆசை- இரா. அழகர்

இங்க உயர்ஜாதிக்காரங்களுக்கு பிரச்சனைன்னா நம்மை தமிழரா ஒன்னு சேத்து போராடக் கூப்பிடுவாங்க. அதுவே நமக்கு பிரச்சினைனா யாரும் தமிழரா இல்லாம ஜாதியா பிரிஞ்சுடுவாங்க. தனது தாத்தா வீட்டில் நுழைவதைக் கண்ட விக்னேஷ் துள்ளிக் குதித்து ஓடி வந்தான். விக்னேஷ்க்கு வீட்டில் அப்பா, அம்மா, தம்பியைவிட தாத்தாவை ரொம்பப் பிடிக்கும். காரணம், சிறு வயதில் இருந்தே தாத்தாவின் அரவணைப்பிலேயே வளர்ந்ததே காரணம். தன் பேரனின் உற்சாகத்தைக் கண்ட சுடலை என்கிற சுடலையாண்டி வாங்கி வந்த தின்பண்டக் கவரை பேரனிடம் […]

மேலும்....

ஈ.ரோட்டுப் பாசறையில் இணைந்து செல்வோம்! – முனைவர் கடவூர் மணிமாறன்

அசையாத பேரிமயம் பெரியார்! வீணர் அடிபணியாத் தன்மான முரசம் ஆர்த்தார்! விசையொடிந்த தோள்தம்மை வீறு கொள்ள விளக்கங்கள் பலதந்தார்; பழமை வீழ்த்தி வசையாளர் மனம்திருந்தி நன்மை எய்தும் வழிமுறைகள் பகுத்தறிவால் நல்கி மக்கள் இசைபெறவே இருவிழிகள் திறக்கச் செய்த ஈரோட்டுப் பாசறையில் இணைந்து செல்வோம்! பகுத்தறிவின் உயர்மாண்பைப் பரப்பி வந்த பரிதியென நம்அய்யா திகழ்ந்தார்! நூலோர் வகுத்துரைத்த மனுதரும வேத நஞ்சோ வண்டமிழர் வளவாழ்வை அழிக்கும் என்றே மிகத்தெளிவாய் எடுத்துரைத்தார்! தமிழர் வாழ்வின் மேன்மைக்குக் குரல்தந்தார்! மகளிர் […]

மேலும்....

குமரிக்கண்டம் பற்றிய வரைபடங்களும் குற்றம் சுமத்தும் கூட்டமும்

நூல் குறிப்பு நூல் பெயர் : கடலடியில் தமிழர் நாகரிகம் ஆசிரியர் : என். நந்திவர்மன் வெளியீடு :உலகத் தமிழாராய்ச்சி  நிறுவனம், தரமணி, சென்னை. பக்கங்கள் : 116; விலை : ரூ.55/- உருசிய ஆய்வறிஞர் அலைக்சாண்டர் கொந்திராதோவ் எழுதிய The Riddle of Three Oceans (1974) நூலின் தமிழாக்கம் 1981இல் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் வெளியிடப்பட்டது. தமிழின் தாயகம் கடல் கொண்ட குமரிக்கண்டமே என மொழி நூலறிஞர் தேவநேயப் பாவாணர் முழங்கினார். பொள்ளாச்சி […]

மேலும்....

குறள் அறிந்தவர் எழுச்சித் தமிழர்!

1. கே: ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டால், அதை நடைமுறைப்படுத்தாமல் தடுக்க நீதிமன்றம் செல்ல முடியுமா? மக்கள் மன்றம்தான் தீர்வா? -சுதே.தேவேந்திரன்,  தூத்துக்குடி. ப: மக்கள் மன்றமே- எப்போதும்- இறுதித் தீர்ப்புக்கான சரியான இடம்; பற்பல நேரங்களில் உச்ச,  உயர்நீதிமன்றங்களின் போக்கு, ‘அசல் அநியாயம்;  அப்பீலில் அதுவே காயம்’ என்ற கிராமத்துப்  பழமொழியை நினைவூட்டு வதாகவே இருக்கின்றனவே! 2. கே: அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவை அரசியலாக்கிக் கேவலப்படுத்திய ஆனந்தவிகடன் நிறுவனத்திற்கு அறம், […]

மேலும்....