சளைக்காத சமூக நீதிப் போராளி சரத் யாதவ்

– வை. கலையரசன் சமூக நீதியில் மிக ஆழமான, அழுத்தமான ஈடுபாட்டைக் கொண்டு சமரசம் இல்லாமல் போராடிய சமூகநீதிப் போராளி சரத் யாதவ். மத்தியப் பிரதேசத்தில் பாபாய் என்னும் கிராமத்தில் ஒரு வேளாண் குடும்பத்தில் 1.7.1947அன்று பிறந்தவர். பொறியியல் பட்டம் பெற்றதுடன், தங்கப் பதக்கமும் பெற்றவர். மாணவர் பருவத்திலேயே அரசியலில் ஈடுபட்டவர். காந்தியவாதியான ஜெயப்பிரகாஷ் நாராயணனின் நம்பிக்கைக்கு உரியவராகத் திகழ்ந்தவர். 1974ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஜபல்பூர் நாடாளுமன்றத் தொகுதியின் இடைத் தேர்தலில் கல்லூரி மாணவரான […]

மேலும்....

மருத்துவம் : மரணம்(3)

மருத்துவர் இரா. கவுதமன் உணவை மறுக்கின்ற நிலை இறந்து கொண்டிருக்கின்றவருக்கு ஏற்படும். கழிவு உறுப்புகள் செயலிழப்பு: உணவு செரித்தல் குறைவதாலும், தண்ணீர் உடலின் உள்ளே செல்லாததாலும் மரணத்தின் பிடியில் உள்ளளவர்களுக்கு ஆரம்ப நிலையில் “மலச்சிக்கல்’’ ’ (Constipation) ஏற்படும். ஆனால் மரணம் நிகழும் பொழுது இடுப்புச் சதைகள், சிறுநீர்ப் பைகள், குடல் பகுதிகள் முழுமையாக இளகி விடுவதால் எந்த விதக் கட்டுப்பாடும் இன்றி சிறுநீர், மலம் முழுவதுமாக வெளியேறிவிடும். தோல், தசைகள் தொய்வு: படுத்த படுக்கையாக நீண்ட […]

மேலும்....

பூம்புகாரின் தொன்மை

பூம்புகார் துறைமுக நகரம் 15000 ஆண்டுகள் பழமையானது என்று பாரதிதாசன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் கண்டுபிடித்துள்ளனர். தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனமும் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனமும் அரசுகளுக்கிடையேயான காலநிலை மாற்றத்திற்கான அமைப்பும் இணைந்து நடத்திய பூம்புகார்க்கு அருகேயான கடல்சார் ஆராய்ச்சிகளின் கண்டுபிடிப்பும் இதை உறுதி செய்கின்றது. இதுவரை பூம்புகாரின் பழைமை என்பது 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றே நம்பப்பட்டு வந்தது. ஆனால், தற்போதைய கண்டுபிடிப்பின்படி (15,000) பதினைந்தாயிரம் ஆண்டுகள் பழைமையானது எனத் தெரிய வருகிறது. பூம்புகார் துறைமுகம் […]

மேலும்....

கட்டுரை : இலவசங்கள் அவமானமா?

– வி.சி.வில்வம் தமிழர்கள் கல்வி பறிக்கப்பட்டு, வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டு, வருவாய் இன்றி வறுமையில் உழன்றனர். எல்லாம் தலையெழுத்து என்றும், வெந்ததைத் தின்று விதி வந்தால் சாகலாம் என்றும் வாழ்ந்திருந்தார்கள்! தமிழர்களின் இந்த மோசமான வாழ்வுக்கு ஆரியம் காரணமாக இருந்து வந்தது! இதன் விளைவாக உருவானதே பார்ப்பனர் அல்லாதார் அமைப்பு! பார்ப்பனியத்துடன் முட்டி மோதி தமிழர்களை முன்னுக்கு கொண்டு வர நீதிக்கட்சி தொடங்கி திராவிட இயக்கத் தலைவர்கள் அனைவரும் முடிவுக்கு வந்தனர்! தமிழ்நாட்டிற்குப் பிழைக்க வந்த பார்ப்பனர்கள் […]

மேலும்....

கவிதை : அறிவுலகம் போற்றும் தலைவர் அண்ணா!

– பேராசிரியர் முனைவர் கடவூர் மணிமாறன் அறிவுலகம் போற்றுகிற அறிஞர் அண்ணா அய்யாவின் பெருந்தொண்டர்; இனத்தை நாட்டை நெறிசார்ந்த பாதையிலே அழைத்துச் செல்லும் நேர்மைக்கோர் இலக்கணமாய்த் திகழ்ந்த ஏந்தல்! செறிவார்ந்த சிந்தனையால் தமிழர் நெஞ்சைச் செதுக்கியவர், புதுக்கியவர் மறுப்பா ருண்டோ? வெறிகொண்ட ஆரியத்தின் செருக்கை வீழ்த்த வீறுடனே களம்காணும் விழிப்பைத் தந்தார்! தென்னாட்டுப் பெர்னாட்சா, காந்தி என்பர்! திராவிடப்பே ரியக்கத்தின் தோன்றல் அய்யா மன்னுபுகழ்ப் பெரியாரின் தலைமை ஏற்றார்; மதிப்புமிகு கலைஞர்க்குத் தலைவர் ஆனார்; கண்ணியத்தைக் கடமையினைக் […]

மேலும்....