கட்டுரை – புத்தத்தில் புகுந்தழித்த பார்ப்பனர்கள் … தஞ்சை பெ.மருதவாணன் …

… தஞ்சை பெ.மருதவாணன் … ஃபாகியான் என்ற சீனப் பயணி பின்வருமாறு கூறியிருக்கிறார்:- “புத்தமதத்தைப் பிரச்சாரம் செய்ய தீவிரமாக உழைத்துக் கொண்டிருந்த பெரும் பண்டிதரான ஒருவர் பாடலிபுத்திரத்தில் இருந்தார். மன்னர் அவரைச் சந்திக்கச் செல்லும்போது குருவின் கைகளைத் தொட்டு வணங்குவார்.  உடனே அந்தப் பிராமணர் அங்கிருந்து சென்று தலை முதல் பாதம் வரை தண்ணீரில் தோய குளிப்பது வழக்கம்.” ஒரு புத்த பிட்சுவான பிறகும் பிராமணன் அவனுடைய தீண்டாமையைக் கைவிடவில்லை.  புத்த மதத்தின் எல்லையற்ற மனித நேய […]

மேலும்....

சிறந்த நூலில் இருந்து சில பக்கங்கள்…

பெரியார் – வாசகர் உறவு நூல் குறிப்பு : புத்தகத்தின் பெயர் : ‘ஏன் நமக்கு இத்தனை எதிரிகள்?’ தந்தை பெரியாரின் இதழியல் ஆய்வும் தொகுப்பும் : இரா. சுப்பிரமணி பதிப்பகம் : விடியல் பதிப்பகம் விலை : 1000/- பக்கங்கள் : 800 இதழ்களின் ஆதாரமே வாசகர்கள் தான் என்பதனால் இதழாளர்கள் எப்போதும் வாசகர்களுடனான தமது உறவைப் பேணிப் பாதுகாப்பதில் மிகுந்த கவனம் செலுத்துவதுண்டு. தந்தை பெரியார் மக்களிடம் இயல்பாகவும், எளிமையாகவும் பழகும் பண்புநலன்கள் கொண்டவர் […]

மேலும்....

கட்டுரை – சங்க இலக்கியங்கள் முதல் பாரதியார் கவிதை வரை ‘சனாதனம்’ என்ற சொல் இல்லை!

R. பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ். (சிந்துவெளி ஆய்வாளர்) “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்பது தொல்காப்பிய இலக்கணம். (தொல்.சொல். 157) எல்லாச் சொல்லும் என்று கூறியதில் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்னும் நால்வகைச் சொற்களும் அடங்கும். “இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே.’ (தொல்.எச்ச.1,) என்று பிறமொழிச் சொற்கள் தமிழில் பயின்று வரும் முறை பற்றியும் தொல்காப்பியர் எச்சவியலில் பேசுகிறார். வடசொற்களைத் தமிழில் பயன்படுத்தும் முறை பற்றியும் அவர் தெளிவுபடுத்துகிறார். “வடசொல் […]

மேலும்....

கட்டுரை – சுயமரியாதை இயக்கம் – பெரியார் என்ன சாதித்தார்? கறுப்புப் பெண்கள்

… ஆனந்தி … தமிழர் சமூகத்தை ‘ஜனநாயக’ப் படுத்த பெரியார் உருவாக்கிய சுயமரியாதை இயக்கம் பற்றி மார்க்சிய, மார்க்சியம் சாராத அறிஞர்கள் வரலாற்று ஆய்வுகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். சுயமரியாதை இயக்கம் பற்றி அது திரிபுவாத இயக்கம், பிரிட்டிஷ் ஆதரவு இயக்கம், பிரிவினை இயக்கம், பிராமண எதிர்ப்பு இயக்கம் என்றெல்லாம் கருத்துகள் முன் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த இயக்கம் பெண்கள் விடுதலைக்காக தொய்வில்லாமல் நடத்திய போராட்டம் பற்றியோ, தமிழர் சமுதாயம் முழுதும் பரவிக்கிடந்த ஆண் ஆதிக்க அமைப்பைத் தகர்த்தெறிய மேற்கொண்ட […]

மேலும்....

கட்டுரை – இயற்கையோடு இயைந்த வாழ்வும் பெரியாரியமும் … மு. வெற்றிச்செல்வன் .

… மு. வெற்றிச்செல்வன் … பூவுலகு துகள்களாலானது. நாமும் கூட துகள்களில் பரிணாம வளர்ச்சியில் உருவானவர்கள் தான். பிரபஞ்சம் துகள்கள், விசைகளாலானது. துகள்கள் அனைத்தும் “ஒருண்மை’’ (Singularity) என்னும் நிலையில் இருந்து “பெருவெடிப்பு’’ காரணமாக விரிவடைந்தவை. அதாவது எதுவுமே தனித்தவை இல்லை. இந்தப் பிரபஞ்சத்தில், அனைத்தும் இணைந்தவையே. அனைத்தும் ஒன்றோடு ஒன்று சார்ந்தவையே. துகள்கள் இந்த இயல்பு நிலையில் தான் இயங்குகின்றன. துகள்கள் தன்னுடைய “டி.என்.ஏ’’ கூறுகளாக இருக்கக் கூடிய பெர்மியான்கள், கிராவிட்டான்கள் இவற்றின் உத்தரவுகளுக்கு ஏற்ப […]

மேலும்....