பெண்ணால் முடியும்!

மன உறுதியால் லட்சியத்தை வென்ற தாய்! சிறந்த உடல் கட்டமைப்புக்கான (Body Building) தென்னிந்திய அளவிலான போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கும் சங்கீதா வயது 35. இரண்டு பிள்ளைகளுக்கு அம்மா மட்டுமல்ல, அப்பாவும் இவர்தான். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்-பாடியை அடுத்த மேட்டுப் பாளையத்தில் வசித்து வருகிறார். தன்னைப் பற்றிக் கூறுகையில், “பத்தாவது முடிச்ச உடனே கூலி வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டேன். குடும்ப நிலைமை அப்படி. எனக்கு 18 வயசுல கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க. அவரு பேரு பாண்டியன். […]

மேலும்....

சிறுகதை : துளசி

பிரியா கிருஷ்ணன் பாலன் டீக்கடை ஊருக்கு வெளியே எல்லையில் அமைந்திருந்தது. வழக்கமாக இந்நேரம் மில்லிலிருந்து ஆள்களை ஏற்றி வரும் வண்டி வந்திருக்க வேண்டும். 30லிருந்து 40 பேர் பரபரப்பாக இறங்கி, டீயும் பிஸ்கட்டுமாய் இருந்திருக்க வேண்டிய நேரம். ஆனால் இன்று, இதுவரை அதுமாதிரி எதுவும் நடக்கவில்லை. ஸ்டவ்வின் ஃப்ளேமை குறைத்தான். பால் கொதித்துப் போயிருந்தது. அடுத்த 5 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் ஒன்று அவனது கடையை வேகமாகக் கடந்து போனது. 100 மீட்டர் இடைவெளியில் தினசரி வருகிற மில் […]

மேலும்....

நாத்திகப் புரட்சியாளர் தூக்கிலிடப்பட்ட நாள் – மார்ச் 23

இணையில்லா எதிர்காலத்தை இந்தியா இழந்தது! ஆம். அவரைத் தூக்கிலிடத் தீர்மானிக்கப்-பட்ட நாள் (23.03.1931) வந்தது. அன்று மாலை 7:30 மணிக்குத் தூக்கிலிட நேரம் குறித்தனர். பொதுவாக விடியற் காலையில்தான் தூக்கிலிடு-வார்கள். ஆனால், ஆங்கில ஆதிக்கவாத அரசுக்கு அதிலும் அவசரம். தன் மகனைப் பார்க்கத் துடித்த தந்தைக்குக்கூட அனுமதி மறுக்கப்பட்டது. பொழுது இருட்டியது. சிறைக் கதவுகள் அடைக்கப்பட்டன. சிறைக் கண்காணிப்-பாளர்கள், நீதிபதி, காவல் துறைக் கண்காணிப்பாளர்கள் ஓர் அறையில் இருந்தனர். ஏழரை மணியை கடிகார முள் எட்டியது. பகத்சிங், […]

மேலும்....

அண்மைக்கால படங்களில் உங்களுக்குப் பிடித்த படம் எது? ஏன்? – கோகுலவாசன், கடையநல்லூர்

  பிடித்த படம்தானே… சென்னை புத்தகக் காட்சியில் வைக்கப்பட்டிருந்த பெரியார் சிலைக்குப் பக்கத்தில் நின்று காவியுடை அணிந்த சாமியார் எடுத்துக்கொண்ட படம். அதுதான் பிடித்த படம். அதுபோல, நாமம் தரித்த பிராமணர் ஒருவரும் பெரியார் புத்தகங்களை வாங்கிக் கொண்டு அந்த சிலை அருகே படம் எடுத்துக்கொண்டார். உத்தரப்பிரதேச மாடல் அரசியலை இங்கே வளர்க்கலாம் என நினைப்பவர்களின் வியூகத்தைத் தவிடு பொடியாக்கும் வகையில் பெரியாரை 360 டிகிரியில் தமிழ்நாடு உணர்ந்து, புரிந்து கொண்டிருப்பதைக் காட்டும் படங்கள் அவை! நன்றி: […]

மேலும்....

சிந்தனைக் களம் : தட்டிப் பறிக்கப்படும் தமிழர்களின் வேலைவாய்ப்பு!

தமிழ்நாட்டில் தபால்துறை, ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளுக்கு தமிழர்களை விட வட மாநிலத்தினரே அதிக அளவில் தேர்வு செய்யப்படும் அநீதி தொடர்கிறது. அண்மையில் தபால்துறை பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 946 பேரில் 46 பேர் மட்டுமே தமிழர்கள் என்கிற செய்தி  அதிர்ச்சியளிக்கிறது. தபால்துறையில் தமிழ்நாட்டில் பணியாற்ற தபால் உதவியாளர், தபால் பிரிப்பு உதவியாளர் ஆகிய பணிகளுக்கு 946 பேர் கொண்ட தேர்வுப் பட்டியல், பிப்ரவரி 10ஆம் தேதி வெளியிடப்-பட்டது. மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு […]

மேலும்....