கவிஞர் கடவூர் மணிமாறனுக்குத் ‘தமிழ்ச்செம்மல்’ விருது

கவிஞர் கடவூர் மணிமாறன் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மரபுக் கவிதைகளை மட்டுமே எழுதி வருபவர். தனித்தமிழ் இயக்க உணர்வாளராகிய இவர் எண்பது நூல்களைப் படைத்துள்ளார். தமிழ்க் கல்லூரிகளில் முறையாக நான்காண்டுகள் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். இங்கிலாந்து, பெல்சியம், செருமனி பிரான்சு, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய அயல்நாடுகளுக்குச் சென்று அங்கெல்லாம் அருந்தமிழை முழங்கியவர். இருநூற்றுக்கும் மேற்பட்ட பன்னாட்டுக் கருத்தரங்குகளில் ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியுள்ளவர். தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் வெளியிட்டு வரும், பல வகுப்புகளுக்கான தமிழ்ப்பாட நூல்களில் […]

மேலும்....

ஒன்றிய அரசு சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்கவேண்டும்!

அனைத்துக் கட்சியினரின் ஆதரவோடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்! ”தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும், இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் வலுப்பெறச் செய்வதற்கு மிக இன்றியமையாத திட்ட மாக சேது சமுத்திரத் திட்டம் விளங்கி வருகின்றது. 1860 ஆம் ஆண்டு 50 இலட்சம் ரூபாயில் Commander Taylor என்பவரால் உருவாக்கப்பட்ட மகத்தான திட்டம் இது. அதன்பிறகு 1955 இல் தமிழ்நாட்டின் சிறந்த நிபுணர் டாக்டர் ஏ. இராமசாமி முதலியார் குழு, 1963 இல் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம், 1964 […]

மேலும்....

சேதுக் கால்வாய்த் திட்டம் குறித்து அ.தி.மு.க.வின் மாறுபட்ட நிலைப்பாடு…

10.5.2001 அன்று அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பின் வருமாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது: “இந்தியத் தீபகற்பத்தைச் சுற்றி இதுவரை தொடர்ச்சியான கப்பல் போக்குவரத்திற்கு ஏற்ற பாதைகள் இல்லை. மேற்கிலிருந்து கடல் வழியாக கிழக்கு நோக்கி கப்பல்கள் செல்ல வேண்டுமானால் இலங்கையைச் சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது. இதற்குத் தீர்வாகத்தான் சேது சமுத்திரத் திட்டம். இத் திட்டத்தின்படி ராமேசுவரத்திற்கும், இலங்கையின் தலை மன்னார்க்கும் இடையில் உள்ள ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்குவரத்திற்குத் தடையாக உள்ள மணல் மேடுகள். (இதுதான் […]

மேலும்....

ராமர் பாலம் என்று பா.ஜ.க.வினரும், சங்பரிவார்களும் கூறுகின்றனரே?

இது ராமன் கட்டின பாலம் என்றும், 17 லட்சத்து 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ராமன் கட்டினான் என்றும் கதைக்கிறார்கள். 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதன் வாழ்ந்தானா என்பதற்கு ஆதாரம் என்ன? அதற்கெல் லாம் அறிவியல் ரீதியாக விளக்கம் அளிக்காமல் ‘நம்பிக்கை’ என்று சொல்லி சொதப்புகிறார்கள். நம்பிக்கை என்பதையெல்லாம் நம்பி கைகட்டிக் கொண்டு வெறுமனே இருக்கமுடியுமா? பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு கடலில் விழுந்தான் என்கிற புராணங்களையெல்லாம் கூட நம்ப முடியுமா? தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையில் இருக்கக்கூடியது […]

மேலும்....

கட்டுரை: அரசியல்வாதிபோல் ஆளுநர் நடந்துகொள்வதா?

கி.வீரமணி கடந்த 9.1.2023 அன்று இவ்வாண்டிற்குரிய தமிழ்நாடு சட்டப்பேரவை முதல் கூட்டத்தில் உரையாற்றித் தொடங்கி வைக்க வந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்கள் நடந்துகொண்ட முறை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் அரசிற்கும், அதன் அமைச்சர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அவமானம் ஏற்படுத்தும்-படியாக அமைந்தது. வழக்கமான மரபுப்படி சட்டப் பேரவைத் தலைவர், செயலாளர் வரவேற்க, அமைச்சரவை தயாரித்த அரசின் கொள்கை உரையை, திட்டங்களை, தமிழ்நாடு அரசின் சாதனைகளை அவையோர்மூலம் நாட்டு மக்களுக்குப் பறைசாற்றுவது ஆளுநர் அறிக்கையாகும். அவர் எழுதிய உரை […]

மேலும்....