Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

அக்னி நட்சத்திரம் என்பது அறிவியல் அடிப்படையிலானது இல்லை- அமுதா, சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர்

கத்திரி வெயில் அல்லது அக்னி நட்சத்திரம் என்பது அறிவியல் பூர்வமானது அல்ல; ஜோதிடம் மற்றும் பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு காலகட்டமாகும். இதற்கும் வானிலை அறிக்கைக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை,

சித்திரை மாதம் 15 நாள்கள் அல்லது அதற்கு மேல் நீடிக்கும் என்று பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்படுகிறது, பொதுவாக சித்திரை மாதம் வெப்பமான மாதம் என்பதால் இப்படி பஞ்சாங்கத்தில் கூறியுள்ளனர்.

ஆனால் இதில் குறிப்பிட்டுள்ளது போன்று கடுமையான கோடை என்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் பொருந்தாத ஒன்று ஆகும் கோடையில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழை பொழிவு ஏற்பட்டு இதமான சூழல் நிலவுகிறது ஆகவே கத்திரி வெயில், அக்னி நட்சத்திரம்  அறிவியல் ரீதியாக உறுதி செய்யப்படாதவை ஆகும். வானிலை ஆய்வு மய்யம் மூலமாக நாங்கள் வானிலை முன்னறிவிப்புகளை அறிவியல் அடிப்படையில், வளிமண்டல நிலைகள், காற்றழுத்த மாற்றங்கள், வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் போன்றவற்றை ஆய்வு செய்து வழங்குகிறோம்.

“தமிழ்நாட்டில் மே மாதத்தில் வெப்பநிலை உயர்வது இயல்பு. இது வளிமண்டலத்தில் ஏற்படும் வெப்பச்சலனம் மற்றும் பருவநிலை மாற்றங்களால் நிகழ்கிறது. சென்னை வானிலை ஆய்வு மய்யம் துல்லியமான வானிலை முன்னறிவிப்புகளை வழங்குவதற்காகத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மக்கள் வெப்பத்திலிருந்து பாதுகாப்பாக இருக்க, போதுமான தண்ணீர் குடிப்பது, நிழலில் இருப்பது மற்றும் வெயிலின் உச்சியில் வெளியே செல்வதைத் தவிர்ப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,” m