Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

திராவிட மாடல் ஆட்சியும் பெண்கள் முன்னேற்றமும்- சரவணா இராஜேந்திரன்

திராவிட இயக்கம், 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தமிழ்நாட்டில் உருவாகி, சமூக நீதி, ஜாதி ஒழிப்பு, பெண்களின் உரிமைகள்,

மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்த ஒரு முக்கியமான
இயக்கமாகும். இயக்கத்தின் முக்கியக் கொள்கைகளில் ஒன்றாகப் பெண்களின் முன்னேற்றம் இருந்தது,

தந்தை பெரியாரின் பிரச்சாரப் பணிகளை விஞ்சி நிற்பது பெண்ணுரிமை சார்ந்த சிந்தனைகளும் செயல்பாடுகளும் ஆகும்.

தொடங்கப்பட்ட 1916ஆம் ஆண்டு முதல், பெண்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தது. நீதிக்கட்சி
1920இல் முதல் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் பெண்களுக்கான வாக்குரிமை வழங்கப்பட்டது. தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம், பெண்களுக்குச் சம உரிமை, கல்வி, மற்றும் சொத்துரிமை வேண்டி போராடியது. இயக்கத்தின் முக்கிய பங்களிப்புகளைக் கொண்டுள்ளது.

தற்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில், பெண்களின் சமூக, பொருளாதார, மற்றும் கல்வி முன்னேற்றத்திற்காகப் பல புரட்சிகர திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

  1. சுயமரியாதைத் திருமணங்கள்:

தந்தை பெரியார் முன்னெடுத்த சுயமரியாதைத்
திருமணங்கள், இதுநாள் வரை இருந்த அடிமை
வர்த்தகம் போன்ற பார்ப்பனிய மதச்சடங்கு
களைக் கொண்ட திருமண முறையை மாற்றி அமைத்து பெண்களும் தங்களின் விருப்பத்தின் அடிப்படையில் திருமணம் செய்ய உரிமை அளித்தன.

  1. கைம்பெண் மறுமணம்:

திராவிட இயக்க இதழ்களில் கைம்பெண் மறுமணத்தை ஆதரிக்கும் கட்டுரைகள் வெளியிடப்பட்டு, பெண்களின் சமூக மறுவாழ்வுக்கு வழிவகுத்தன.

  1. கல்வி மற்றும் வேலைவாய்ப்பு:

நீதிக்கட்சி ஆட்சியில் பெண்களின் கல்வி
விரிவாக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்
பட்டது.

  1. பாரதிதாசனின் பங்களிப்பு:

திராவிட இயக்கத்தின் முக்கிய கவிஞரான
பாரதிதாசன், தனது கவிதைகள் மூலம் பெண் விடுதலையை வலியுறுத்தினார். அவரது படைப்புகள் பெண்களின் உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தின.

  1. திரைப்படங்கள் மற்றும் இலக்கியம்:

திராவிட இயக்கத் தலைவர்களான பேரறிஞர் அண்ணா, கலைஞர் திரைப்படங்கள் மற்றும் இலக்கியங்கள் மூலம் பெண்களின் சமூக நிலையை உயர்த்தும் கருத்துகளைப் பரப்பினர்.

திராவிட இயக்கம் பெண்களின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைத்தது.

மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பெண்களுக்கான திட்டங்கள்

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி, பெண்களின் பொருளாதார சுதந்திரம், கல்வி, மற்றும் பாதுகாப்பிற்காகப் பல புரட்சிகர திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டங்கள், பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதோடு, தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னோடி மாநிலமாக மாற்றியுள்ளன. திராவிட இயக்கத்தின் பெண்கள் முன்னேற்றக் கொள்கைகள்,  தொடர்ந்து வரும் முதலமைச்சர் சமூகநீதியின் சமத்துவநாயகன் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மேலும் வலுப்பெற்று, வருங்கால தலைமுறைகளுக்கு வழிகாட்டும் என்பது உறுதி.

  1. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்:

இந்தியாவில் முதன்முறையாக, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகையாக வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை உறுதிச் செய்வதோடு, அவர்களின் குடும்ப நலனை மேம்படுத்துகிறது   – 2023 செப்டம்பர் 15 முதல் செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், பெண்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவுகிறது.

  1. விடியல் பயணத் திட்டம்:

2021இல் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம், பெண்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க உதவுகிறது. இதுவரை 132.91 கோடி பெண்கள் இத்திட்டத்தின் மூலம் பயணித்துள்ளனர், இது அவர்களின் பயணச் செலவைக் குறைத்து, வேலைவாய்ப்பு மற்றும் கல்வி அணுகலை மேம்படுத்தியுள்ளது

  1. புதுமைப்பெண் திட்டம்:

பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரியில் பயிலும்
மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 கல்வி உதவித்
தொகை வழங்கப்படுகிறது. இது பெண்களின் உயர்கல்வி பயிலும் வாய்ப்பை அதிகரித்து, அவர்
களின் தொழில் வாய்ப்புகளை மேம்படுத்துகிறது

  1. மகளிர் சுய உதவிக்குழுக்கள்:

பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.100 கோடி
மதிப்பில் வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்
பட்டுள்ளது. மேலும், இந்தக் குழுக்கள் தயாரிக்கும்
பொருட்களை அரசு பயன்படுத்துவதன் மூலம் அவர்களின் வருவாய் உயர்கிறது

  1. தொழில் முனைவோர் மேம்பாடு:

டான்சிட் திட்டத்தின் மூலம், பெண் தொழில் முனைவோருக்கு ரூ.15 லட்சம் வரை மானிய நிதி வழங்கப்படுகிறது. இது பெண்களைத் தொழில் முனைவோராக மாற்றி, பொருளாதார சுதந்திரத்தை ஊக்குவிக்கிறது

  1. குழந்தைகள் காப்பகங்கள்:

சிப்காட் தொழில் பூங்காக்களில் 17 குழந்தைகள் காப்பகங்கள் தொடங்கப்பட்டு, 3.23 லட்சம் தொழிலாளர்களின் குழந்தைகள் பயன் பெறுகின்றனர். இது வேலைக்குச் செல்லும் பெண்களின் மன அழுத்தத்தைக் குறைத்து, அவர்களின் உற்பத்தித் திறனை மேம்படுத்துகிறது.

  1. அரசு வேலைவாய்ப்பு மற்றும் மகப்பேறு விடுப்பு:

அரசுப் பணிகளில் பெண்களுக்கு 40% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும், அரசு வேலையில் உள்ள பெண்களுக்கு 12 மாத மகப்பேறு விடுப்பு அளிக்கப்படுகிறது, இது அவர்களின் தொழில்முறை மற்றும் குடும்ப வாழ்க்கையைச் சமநிலைப்படுத்த உதவுகிறது

  1. சட்டப் பாதுகாப்பு:

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க, குற்றவியல் சட்டங்களைத் திருத்தும்
முன்வடிவு சட்டப்பேரவையில் அறிமுகப்-படுத்தப்பட்டுள்ளது. இது பெண்களின் பாதுகாப்பை உறுதிச் செய்யும் முக்கிய நடவடிக்கையாகும்

  1. திராவிட மாடல் ஆட்சியின் தனித்தன்மை:

திராவிட மாடல் ஆட்சி, அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதில் பெண்களின் முன்னேற்றம் முக்கிய இடம் வகிக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண்களின் சமூக – பொருளாதார மேம்பாட்டை மனதில் வைத்து ஒவ்வொரு திட்டத்தையும் வடிவமைப்பதாகக் குறிப்பிடுகிறார். இந்தத் திட்டங்கள் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும் முன்மாதிரியாக உள்ளன. m