சிந்தனைக் களம் : அரசியல் லாபத்திற்காக ஹிந்து ராஷ்டிரா கூத்து

2022 ஆகஸ்ட் 16-31 2022 சிந்தனைக் களம்

சரவணா இராஜேந்திரன்


கார்ப்பரேட் லாபத்திற்காக ஆட்சியைத் தக்கவைக்கவேண்டும், ஆட்சியாளர்களின் மீதுள்ள கோபத்தைத் திசை திருப்ப ஹிந்துராஷ்டிரா கூத்து நடத்தவேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்படும் மோடி அமித்ஷா கூட்டணியினால் ஹிந்துக்கள் தங்களை அறியாமலேயே படுகுழியில் தள்ளப் படுகிறார்கள்.
முகம்மது பின் காசிம் கி.பி.712ஆம் ஆண்டில் நடந்த போரின்போது இந்திய தீபகற்பத்தின் சிந்து நிலப் பகுதியைக் கைப்பற்றினார். இந்த வெற்றி இந்திய துணைக் கண்டத்தின் வரலாற்றில் பெரிய திருப்புமுனையாக மாறியது. அலெக்சாண்டர் இதே பகுதியை கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் போரஸை வென்று கைப்பற்றி மீண்டும் அவருக்கே திருப்பிக்கொடுத்துவிட்டு தனது நாடு திரும்பினார். அதனால் ரோமன் கலாச்சாரம் ஆழமாகப் படியவில்லை.
ஆனால், முகமது பின் காசிமின் வெற்றியால் இஸ்லாமிய கலாச்சாரம் வேத நாகரிகத்துடன் நெருங்கிய தொடர்பில் வருவதற்கும் இந்திய துணைக் கண்டத்தில் இஸ்லாம் பரவுவதற்கும் வழிவகுத்தது. அவருக்குப் பிறகு சுல்தான்கள் பின்னர் முகலாயர்கள் எனச் சில நூற்றாண்டுகள் இஸ்லாமியப் பேரரசுகளின் கைகளில் இந்திய தீபகற்பப் பகுதி முழுவதும் இருந்த போதும் வரலாற்றில் பெருவாரியான மதமோதல் பதிவுகள் இல்லை. ஆங்கிலேயர்களின் வருகை கிழக்கிந்திய கம்பெனி கைகளில் இருந்து விக்டோரியா மகாராணியின் ஆட்சியின் கீழ் வந்த பிறகு இங்கே மத மோதல்கள் உருவாகின்றன.

அந்த மத மோதல்கள் கொடுத்த வடுக்களால் இந்தியா ஒரு சமயச் சார்பற்ற ஜனநாயகக் குடியரசாக மாறுவதற்கான ஒரு காரணமாக அமைந்தது. 1945ஆம் ஆண்டி-லிருந்து 2014ஆம் ஆண்டுவரை இந்தியா மதச்சார்பற்ற அனைத்து தரப்பினருக்குமான நாடாக இருந்தது. 2014ஆம் ஆண்டு தனது அமோக தேர்தல் வெற்றிக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் ஆற்றிய முதல் உரையில் இஸ்லாமியர்களின் ஆட்சி இருந்த அந்த நூற்றாண்டுகளைப் பற்றிக் குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்தார். வரலாற்றின் பக்கங்களை நினைவுகூர்ந்த அவர், இந்த நூற்றாண்டுகளை அடிமைத்தனத்தின் காலம் என்று வர்ணித்தார். 1200 ஆண்டுகால அடிமை மனநிலை நம்மை வாட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியா ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்த 200 ஆண்டுகளை மட்டுமே இந்தியா அடிமைத்தளையில் இருந்த காலம் என்று வரலாற்றாசிரியர்கள் எப்போதும் கூறி வந்தனர்.ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான ஹிந்துத்துவ குழுக்களின் கருத்து இந்தியர்கள் 1200 ஆண்டுகளாக அடிமைகளாக இருந்தனர் என்ற மோடியின் கருத்துடன் ஒத்துப்போனது.
இதில் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் முஸ்லிம் ஆட்சியும் இருந்தது.

முஸ்லிம் படையெடுப்பிற்கு முன் இந்தியா ஒரு ஹிந்து நாடாக, அந்நிய செல்வாக்கு இல்லாத நாடாக இருந்தது என்பதுதான் . புகழ்பெற்ற வேத காலத்தில் பாரதவர்ஷம், அதாவது ஹிந்துராஷ்டிரம் இருந்ததாக ஆர்.எஸ்.எஸ் மற்றும் அவர்களின் துணை ஹிந்து அமைப்புகள் நம்புகின்றன. ஹிந்துத்வ சித்தாந்த வாதிகளான சாவர்க்கரும் கோல்வால்கரும் ஹிந்து ராஷ்டிரம் என்ற எண்ணம் பழங்காலத் திலிருந்தே இருந்தது என்ற கருத்தைக் கொண்டிருந்தனர். ஹிந்து மதம் குறித்த அமெரிக்க நிபுணர் பேராசிரியர் வெண்டி டோனிகர், பண்டைய இந்தியா ஓர் ஹிந்து தேசமாக இருந்தது என்பதை மறுக்கிறார். அவர், “இந்தியா எப்போதுமே ஓர் ஹிந்து நாடாக இருந்ததில்லை. வேத காலத்தில், துணைக் கண்டத்தின் ஒரு சிறிய பகுதி மட்டுமே வேத நூல்களால் ஆவணப் படுத்தப்பட்ட வழிபாட்டில் சேர்க்கப் பட்டுள்ளது.

அன்றிலிருந்து எப்போதுமே மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள் (பவுத்தம், சமணம், கிறிஸ்துவம், இஸ்லாம்) இருந்து வந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், “ஹிந்து மதம்” என்ற பொதுவான பெயரின் கீழ் பலவிதமான தெய்வங்களும் வழிபடப்பட்டன. மேலும் ஹிந்து மதத்திலேயே பல வகையான வழிபாட்டு முறைகள் இருந்தன. பல அறிஞர்கள் ஹிந்து மதத்தை ‘ஒரே’ மதமாகக் கருதமுடியாது என்று கூறுகின்றனர். பல்வேறு மதங்கள் மற்றும் கலாச்சாரங்கள் இந்தியாவிற்குள் நுழைந்ததால் அவை பல்வேறு வகையான ஹிந்துக்களின் மிகவும் மாறுபட்ட நம்பிக்கைகளை நீர்த்துப்போகச் செய்யாமல், மேம்படுத்தவே செய்தன. எனவே, இந்த முழு வாதமும் முட்டாள்தனமானது,” என்று பேராசிரியர் டோனிகர் கூறுகிறார்.
ஹிந்து தேசம் என்ற எண்ணம் முதலில் எவ்வாறு எழுந்தது? இந்தியா ‘ஹிந்து நாடாக’ மாறுவதற்கான அறிகுறிகள் தென்படுகிறதா? ஹிந்து ராஷ்டிரா என்ற கருத்தை ஊக்குவிக்க வரலாறு மற்றும் கல்வி எவ்வாறு திருத்தப் படுகின்றன? அதில் சிறுபான்மையினரின் நிலை என்னவாக இருக்கும்? இதற்கு அரசியல-மைப்புத் திருத்தங்கள் தேவைப்படுமா? மற்றும் 2024 பொதுத் தேர்தலுக்கான தேர்தல் திட்டமாக இது இருக்குமா? என்பதற்கான பதிலைக் காண்போம்.

‘ஹிந்து ராஷ்டிரா’ என்ற எண்ணம் எப்படி உருவானது. ஆர்.எஸ்.எஸ் தொடங்கப்பட்ட நாளில் இருந்தே, ஹிந்து தேசத்தை மீட்பதில் செயல்பட்டு வருகிறது. ஹிந்துத்துவத்தில் நிபுணரான புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் பேராசிரியர் கிறிஸ்டோஃப் ஜாஃப்ரெலோட் இதை ஒப்புக் கொள்கிறார்.
“சங்பரிவார் தரப்பில் எப்போதும் ஹிந்து ராஷ்டிரத்தை உருவாக்கும் திட்டம் உள்ளது. அவர்கள் சமூகத்தை கீழிருந்து மாற்ற விரும்புகிறார்கள். “சங்கம் (ஆர்எஸ்எஸ்) 1925இல் நிறுவப்பட்டது. அந்த நேரத்தில் ஹிந்துத்துவா சித்தாந்தவாதியான வி.டி. சாவர்க்கர் தனது “ஹிந்துத்வா: ஹூ இஸ் எ ஹிந்து” என்ற நூலில் இதைப் பற்றி எழுதியிருந்தார். இந்த நூலில் சாவர்க்கர் ஹிந்துத்துவ சித்தாந்தத்திற்கான கருத்தியல் கட்டமைப்பை வழங்கியுள்ளார். இப்போது இந்தியாவில் அது அதிகாரத்தில் உள்ளது,” என்கிறார் அவர். “ஹிந்துத்வா என்பது ஹிந்து மதத்தைவிட மேலானது, ஓர் அரசியல் தத்துவமாக ஹிந்து மத நம்பிக்கையுடன் மட்டும் அது நின்றுவிடவில்லை’’ என்று சாவர்க்கர் தெரிவிக்கிறார். அவர் ஹிந்துத்துவத்திற்கு அவசியமான மூன்று மந்திரங்களைக் கொடுத்தார்.

ராஷ்டிரா (தேசம்), ஜாதி (இனம்) மற்றும் சன்ஸ்க்ருதி (கலாச்சாரம்). “இந்தியாவில் பிறந்தாலும்கூட இஸ்லாமியர்களிடமும் கிறிஸ்துவர்களிடமும் இந்த மூன்றும் இருக்கும் எனச் சொல்ல முடியாது’’ என்று அவர் கூறினார். இவ்வாறு வரையறுக்கப்பட்ட ஹிந்துக்கள், தொன்றுதொட்டு இருந்த இந்திய தேசத்தை அமைத்தனர் என்று அவர் குறிப்பிடுகிறார்.
அதிகாராத்தைக் கையில் வைத்திருந்த பார்ப்பனர்கள் மற்றும் அவர்கள் உருவாக்கிய ஹிந்துத்துவ அமைப்புகள் ஹிந்து ராஷ்டிரா என்பதைக் கூறிக்கொண்டு வந்தது என்பது உண்மைதான். ஆனால், மோடியின் ஆட்சியில் தீவிரமடைந்துள்ளது. எடுத்துக்காட்டாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் டெல்லியின் தால்கடோரா உள் விளையாட்டரங்கில், சங்கராச்சாரியாரான சுவாமி நிச்சலானந்த சரஸ்வதி, இந்தியா தன்னை ஹிந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்தியா ஹிந்து நாடாக மாறினால் வேறு 15 நாடுகள் அதைப் பின்பற்றும் என்று அவர் கூறினார். தற்போது இந்தியாவும் நேபாளமும் மட்டுமே ஹிந்து பெரும்பான்மையைக் கொண்ட இரண்டு நாடுகள் ஆகும். ஹிந்து ராஷ்டிரா என்ற பரப்புரைகளின் தீவிரம் அதிகரித்துள்ளது ஹிந்து ராஷ்டிராவிற்கான அடிப்படை வேலைகள் ஆரம்பகட்டத்தில் இருப்பதாகத் தோன்றினாலும், கூட்டாட்சி, மதசார்பின்மை, சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் போன்றவற்றை நீக்குவதற்கு ஒவ்வொரு அரசு அதிகார அமைப்புகள் மெள்ள மெள்ள காவி மயமாக்கப்-பட்டுக்-கொண்டு வருகின்றன. மறு வடிவமைக்கப்-படுகின்றன. நகரங்கள் மற்றும் தெருக்களின் முஸ்லிம் பெயர்கள் நீக்கப்படுகின்றன. நீதித்துறையைத் தவிர எல்லா அமைப்பு-களையும் மோடி அரசு கைப்பற்றியுள்ளது. ஊடகங்கள் அவர்களுக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டுள்ளன. நாடாளுமன்றம் கைப்பற்றப்பட்டது, சுதந்திரக் குரல் முடக்கப்படுகிறது. தன்னாட்சி அமைப்புகளான அமலாக்கத்துறை, சி.பி.அய். மற்றும் வருமானவரித் துறைகள் அரசின் கைப்பாவைகளாகி-விட்டன.ஸீ