- கே: ‘நீட்’ தேர்வை விலக்க அல்லது விலக்கு
பெற இப்போதைய சூழலில் சரியான தீர்வாக என்ன செய்ய வேண்டும்?
– வ.மோகன், கல்பாக்கம்.
ப: விடை எளிதானதல்ல. ஒன்றிய பா.ஜ.க. அரசு இதில் பிடிவாதம் காட்டுவதால், இப்போதைய அரசியல் சூழ்நிலை தொடரும் வரை, ஆட்சி மாற்றம்தான் ஒரே வழி; அல்லது உச்சநீதிமன்றம் தமிழ்நாடு ஆளுநர் வழக்கில் ஒரு சரியான தீர்வு கண்டதுபோல், புதிய அணுகுமுறையில் – சட்டப்படி நியாயம் தரும் அளவுக்கு அதன் நீதிப்போக்கு அமைந்தால் சாத்தியம். ஆனால் ஒன்று. அரசியலில் எந்த மாற்றமும் எப்போது ஏற்படும் என்பதை ‘ஆரூடம்’ கணிக்க முடியாது.
- கே: தமிழக அமைச்சர்
கள் பலருக்குப் பயிற்சி வகுப்புகள் நடத்தவேண்டியது கட்டாயம் என்ற கருத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
– த.செந்தில், கோயம்புத்தூர்.
ப: ஆம்; அரசியல் சட்டப்படி உங்கள் விடைக்கு மற்றொரு ‘ஆம்’தான்!
- கே: துணைக் குடியரசுத் தலைவரின் ஒவ்வொரு பேச்சும், செயலும் பாசிச ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளைப் பச்சையாக வெளிக்காட்டுவதோடு, சட்டத்திற்கு எதிராக உள்ளன. அவரைத் தகுதி நீக்கம் செய்ய சட்டப்படி வழியுண்டா?
– கே.மணிமேகலை, காரைக்கால்.
ப: மாநிலங்கள் அவையில் ஏற்கனவே அவர்மீது நம்பிக்கை இல்லை என்று எதிர்க்கட்சியினர் கூறியுள்ள நிலையில், அவர்கள் தீர்மானம் கொண்டு நாட்டுக்கு விளக்க வாய்பேற்படுத்த கூட்டத்தில் இடம் உண்டு.
- கே: ‘நீட்’ தேர்வை விலக்கவே மாட்டோம் என்று உறுதியாகக் கூறும் பா.ஜ.கவுடன், அ.இ.அ.தி.மு.க. கூட்டணி அமைத்தது எந்தத் துணிவில்? மக்கள் எப்படி ஏற்பார்கள்? தெரிந்தே பாழுங்கிணற்றில் விழும் செயல் அல்லவா?
– எஸ்.கோமதி, தஞ்சாவூர்.
ப: பொறுத்துப் பாருங்கள்; தமிழ்நாட்டு மக்கள் பாடம் கற்பிப்பார்கள் என்பது உறுதி.
- கே: அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு அடித்தளம் இடுகிறோம் என்று பிரதமர் கூறியுள்ளதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
– கே.கோபிநாத், வேலப்பன்சாவடி.
ப: தலைசிறந்த நகைச்சுவையாகவே உலகம் பார்க்கும்! வானளாவிய ஆசைக்கு வரைமுறை உண்டா?
- கே: செயற்கை நுண்ணறிவு மனித உழைப்பிற்கு மாற்றாக வளர்ந்து வரும் நிலை ஏற்புடையதா? கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கம் உச்சமடையவும், தொழிலாளர்கள் வேலை, வருவாய் இழக்க நேரிடும் என்ற அச்சம் சரியா? எல்லா தொழில்நுட்பமும் புதிய வேலை வாய்ப்பை உருவாக்கும் என்பது சரியா?
– அ.காமராஜ்,காஞ்சி.
ப: இரண்டும் உண்டு; என்றாலும் அதைக் கையாளும் மாநில அரசுகளும் இதில் சுதந்திரம் அணுகுமுறையில், தமிழ்நாடு போல முடிவு எடுத்து, அதன் மக்கள் உரிமையாக ஆக்க முடியும்.
- கே: அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியைக் கண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பதறுகிறார் என்று எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூறுவது அவரது அச்சத்தை மறைக்கும் முயற்சிதானே?
– பா.பாத்திமா, சுங்கச்சாவடி.
ப: அரசியல் அறியாமைக்கு
வெளிச்சம் போட்டுக்காட்டுவதாகும்!
- கே: இராகுல்காந்தி தேசத்துரோகி என்று பா.ஜ.க. தலைவர் சம்பித் பத்ராவின் குற்றச்சாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?
– த.மிஸ்ரா, பாண்டிச்சேரி.
ப: பா.ஜ.கவின் அரசியலில் யார் அவர்களை விமர்சித்தாலும் அவர்கள் ‘தேசத்துரோகிகள்’ என்பது அவர்களின் அரசியல் அகாராதியாகும். w