பார்ப்பான் பிழைப்புக்கு – உயர்வுக்கே இந்து மதச் சடங்குகள்- தந்தை பெரியார்

எங்கள் கருத்து நம் மக்களுக்குப் புதுமையாகவும் தோன்றும்; சில சமயங்களில் கசப்பாகவும் இருக்கலாம். காதணி விழா என்பது காது குத்தி நகை போடுவதாகும். இந்தக் காதணி விழாவானது உலகிலேயே இந்துக்கள் என்று சொல்லப்படும் நமக்குத்தான் ஆகும். எந்த முறையில் நமக்கு இது சம்பந்தப்பட்டு உள்ளது என்றால், மத சம்பந்தமான கருத்தில்தான் ஆகும். உலகில் ஒவ்வொரு மதக்காரர்களுக்கும் ஒவ்வொரு அடையாளமுண்டு. ஆனால், கிறித்துவ மதக்காரர்களுக்குப் பார்த்ததும் கண்டுகொள்ளும் படியான அடையாளம் இருக்காது. இஸ்லாமியர்களுக்குச் சில அடையாளம் இருக்கின்றது. அதுபோலத்தான் […]

மேலும்....

ஒழுக்கம் உண்டாக கடவுளைப் புறக்கணி !- தந்தை பெரியார்

ஒரு குழவிக் கல்லுக்கு 1000 மனைவிகள் இருக்கலாம். 10,000 தாசிகளும் இருக்க லாம்; இருந்தாலும் அதைத் தெய்வம் என்று தொழுவார்கள். நமது முதன் மந்திரியார்(ராஜாஜி) அன்றாடம் போற்றிப் புகழ்ந்துவரும் ராமபிரானின்தந்தை தசரதருக்கோ ஒன்றல்ல ஆயிரமல்ல 60 ஆயிரம் மனைவியர்கள் இருந்தாலும் இராமாயணம் ஒரு பக்தி நூலாகக் கருதப்படும். கீதையை உபதேசித்த கிருஷ்ணனுக்கோ 10 ஆயிரம் மனைவியர்! 1 லட்சம் வைப்பாட்டிகள்.இவ்வளவு மோசமாக இருந்தாலும் கிருஷ்ணனு டைய நடத்தை, இதற்காக கீதை படிப்பவர் யாரும் வெட்கப்பட மாட்டார்கள். ஏன்? […]

மேலும்....

கல்வி வள்ளல் காமராசர் மறைவு : 2.10.1975

இன்றைய காமராசர் ஆட்சியில் நமது நாடு அடைந்த முன்னேற்றம் இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளில் என்றுமே நடந்தது இல்லை. இந்த நாடு உருப்பட வேண்டுமென்றால் இன்னும் பத்து ஆண்டுகளாவது காமராசரை விட்டு விடாமல் பிடித்துக்கொள்ளுங்கள். அவரது ஆட்சி மூலம் சுகமடையுங்கள். காமராசரைப் பயன்படுத்திக் கொள்ள நாம் தவறிவிட்டால் தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு ஆளே சிக்காது. – தந்தை பெரியார் (‘விடுதலை’ 17.7.1961)

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

1940ஆம் ஆண்டும் அதன்பிறகு 1942ஆம் ஆண்டும் கவர்னரும், வைஸ்ராயும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க வருமாறு இரண்டாவது முறையாக வேண்டியும், அதை தந்தை பெரியார் ஏற்க மறுத்து, பதவியைத் துச்சமென உதறித் தள்ளினார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

என்றும் தந்தை பெரியார்..!- வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி

விலங்கிடமிருந்து மனிதனை வேறுபடுத்திக் காட்டுவது பகுத்தறிவு உணர்ச்சி தான். பகுத்தறிவுடன் நடப்பதும், மற்றவர்களை அவ்வழி நடக்கச் செய்வதும், பகுத்தறிவுக் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்வதும், பகுத்தறிவைப் பரப்புவதற்குப் பயணங்கள் மேற்கொள்வதும் அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இன்றைய காலகட்டத்தில் தமிழ்நாட்டில் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்வது என்பது சுலபமான வேலையாக நமக்குத் தெரியலாம். ஆனால், உலக வரலாற்றில் அறிவியல் மனப்பான்மையுடன் செயல்படுவதோ, பகுத்தறிவுடன் தனக்குத் தோன்றிய கருத்துகளை வெளிப்படுத்துவதோ மிகப்பெரிய அளவில் உயிருக்கு அச்சுறுத்தலைக் கொடுக்கும் பணிகளாக இருந்தன. குறிப்பாக, […]

மேலும்....