எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (115)

– நேயன் 1921 இல், 612 பெண் குழந்தைகள் விதவைகள். அவர்களின் வயது ஒன்றுக்கும் கீழே. இந்தக் குழந்தைகள் அனைவருமே இந்துக்கள், 498 விதவைக் குழந்தைகளின் வயது ஒன்றிலிருந்து இரண்டு வரை. இரண்டிலிருந்து மூன்று வயதுக்குள்ளான விதவைக் குழந்தைகளின் எண்ணிக்கை -_ 1280. மூன்றிலிருந்து நான்கு 2863. நான்கிலிருந்து அய்ந்து 6758. அய்ந்திலிருந்து பத்து 12,016. இவை, மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் புள்ளிவிவரங்கள். உண்மைத் தொகை, இதற்குப் பல மடங்கு அதிகமாக இருந்திருக்கும் என்பதை மிக எளிதாக ஊகிக்கலாம். […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (114)

தமிழர் வழிபாட்டை ஆரிய மயமாக்கிய சதி! நேயன் வேத காலத்தில் ஆரியர்களிடையே கடவுள் வழிபாடு இல்லை. அவர்கள் இயற்கை சக்திகளையே கடவுளராக உருவகப்படுத்தி வழிபட்டனர். அக்னி, வாயு, வருணன், மேகம்(இந்திரன்), ருத்திரன் போன்றவற்றை வழிபட்டனர். வேதத்தில் வரும் ருத்திரன் சிவன் என்று இட்டுக்கட்டிக் கூறுவது தப்பு. சிவன் வழிபாடு ஆண், பெண் உறுப்பு வழிபாட்டின் பரிணாமம். ருத்திரன் என்பது உருவ வழிபாடு இல்லாத காலத்தில் ஆரியர்கள் வணங்கியது. தமிழரின் உறுப்பு வழிபாடு ஆரியர் இந்தியாவிற்குள் நுழைவதற்கு முன்பே […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (113)

வேதத்தில் தமிழ்க் கடவுளா? நேயன் ரவிந்தன் நீலகண்டன், வேதத்தில் தமிழ்க் கடவுள் பற்றிய குறிப்பு இருப்பதாக கீழ்க்கண்டவற்றைக் கூறியுள்ளார். தமிழ்க் கடவுள் என்றாலே அது முருகன் தான். முருகன் குறித்த மிகப் பழமையான தொன்மங்களிலேயே, அவன் சிவந்த மேனியுடையவனாகக் காட்டப்படுகிறான். கல்வெட்டு ஆராய்ச்சியாளரும், மொழியியல் அறிஞருமான ராமச்சந்திரன், ‘கழகக் கந்தனும் பரிஷத் முருகனும்’ எனும் தனது முக்கியமான கட்டுரையில் இவ்வாறு கூறுகிறார் – சேயோன், சிவன் இரண்டுமே சிவந்த நிறத் தெய்வம் என்ற பொருளுடைய சொற்களாகும். நிறத்தில் […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (112)

ஆரியர்கள் படையெடுத்து வந்தவர்களா..? நேயன் ஆரியர்கள் இந்தியாவின் மீது படை யெடுத்து வந்து, தாசர்களையும், தசியுக்களையும் வெற்றி கொண்டு அவர்கள் மீது தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டினார்கள் என்ற கோட்பாட்டை ஆதரிப்பவர்கள் ரிக் வேதத்திலுள்ள சில செய்யுட் பகுதிகளைக் கணக்கிலெடுத்துக் கொள்ளத் தவறிவிடுகிறார்கள். இந்தச் செய்யுள் பத்திகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்தச் செய்யுள்களைக் கருத்திற் கொள்ளாமல், வெளியிலிருந்து வந்து இந்தியாவின் மீது ஆரியர்கள் படையெடுத்தார்கள், இங்குள்ள ஆரியரல்லாத சுதேச குலமரபுக் குழுக்களை வெற்றி கொண்டார்கள் என்ற கோட்பாட்டை […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை III

வேதம் வருணம்  மஞ்சை வசந்தன் ஆரிய இனக்கோட்பாட்டின் மூலவர்கள் தங்கள் கருத்தை நிலைநாட்டும் அளவு மீறின ஆர்வத்தில், தாங்கள் நிரூபிக்க விரும்புவதை எப்படியும் நிரூபித்தாக வேண்டும் என்று அவர்கள் கங்கணம் கட்டிக் கொண்டு இறங்கியிருக்கிறார்கள்; இந்த முயற்சியில் தங்களுக்கு நல்லதென்று தோன்றும் சான்றுகளை வேதங்களிலிருந்து சிரமப்பட்டுப் பொறுக்கியெடுக்க அவர்கள் சிறிதும் தயங்கவில்லை. அனுமானம் என்பது விஞ்ஞானத்துக்கு உப்பு போன்று ஜீவாதாரமானது’ என்று பேராசிரியர் மைக்கேல் ஃபாஸ்டர் ஒரு சமயம் குறிப்பிட்டார். அனுமானமில்லாமல் பயனுள்ள முறையில் எதையும் துருவி […]

மேலும்....