செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார்!

செப்பரும் ஈ.கம் செய்த சிதம்பர னாரோ வாழ்வில் ஒப்பிலா ஆற்றல் மிக்கார்; உயர்வழக் கறிஞர் ஆனார்! கப்பிய அடிமைப் போக்கைக் கனன்றுமே களத்தில் நின்றார்! கப்பலை வாங்கி ஓட்டிக் கடியதோர் புரட்சி செய்தார்! செக்கினை இழுத்தார்; கோவைச் சிறையிலே கல்லு டைத்தார்! மக்களின் தலைவர் காந்தி மனத்தினில் நிறைந் திருந்தார்! தக்கபோ ராளி ஆகித் தனித்துவம் பெற்றார்! எல்லாச் சிக்கலும், வளைத்த போதும் சீர்மிக எதிர்த்து வென்றார்! திருக்குறள் ஆய்ந்து கற்றுத் தெளிவுரை விருந்தாய்த் தந்தார்! இரும்புளம் […]

மேலும்....

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்!- முனைவர் கடவூர் மணிமாறன்

அரசர் குடும்பம் தன்னில் பிறந்தவர்; வரலாற் றேட்டில் வாழும் தலைவர்; அன்பினர்; அருளினர் வி.பி. சிங்கோ நன்னெறி பிறழா நயத்தகு நாயகர்! கடமை மறவர்; களங்கம் இல்லார் மடமைப் போக்கை மனத்தில் எண்ணார்! தொண்டறம் தன்னில் தோய்ந்து மகிழ்ந்தவர்! கண்ணியம் மிக்கவர்; கலைஞரின் தோழர்! மக்கள் யாவரும் உரிமை எய்தவே தக்க சமத்துவம் தழைக்கச் செய்தவர்; வெறுப்பை விதைத்து வீண்பழி அடையார்; பொறுப்பாய் அரசியல் சட்டம் மதித்தவர்! விலைபோ கின்ற இழிந்த மனத்தரை விலைக்கு வாங்கும் வெறித்தனம் […]

மேலும்....

மூடச் செயல்களை முற்றாக ஒழிப்போம்!

கண்ணிருந்தும் பார்வையிலார் போல வாழ்வார் கற்கால மாந்தரென அலைவார்! பொய்யை உண்மையென நம்பிடுவார்! தலையில் தேங்காய் உடைத்திடுவார்! செய்நேர்த்திக் கடனே என்பார்! எண்ணத்தில் பிறழ்ந்தாராய் இராகு காலம், எமகண்டம், விதியென்றே இயம்பிப் பாவ, புண்ணியத்தை இனம்கண்டு தெளிந்தார் போலும் பூசைகளால் பரிகாரப் புளுகை ஏற்பார்! மந்திரத்தை, சோதிடத்தை முழுதும் நம்பி மனம்போன போக்கினிலே உழல்வார்! ஏய்ப்போர் தந்திரத்தை உணராமல் கழுத்தில், கையில் தாயத்து, கயிறுபல கட்டிக் கொள்வார்! சிந்திக்க மறுப்போராய்ப் பேய்கள் ஓட்டிச் சிறுபிள்ளைத் தனமாக நடந்து […]

மேலும்....

புலவர் குழந்தை!- புலவர் கடவூர் மணிமாறன்

எழுச்சிமிகு தமிழ்ப்புலவர்! அறிஞர் போற்றும் இராவணநற் காவியத்தைப் படைத்த ஏந்தல்! பழுதறியாப் பாடல்களால் தமிழர் மேன்மை பழஞ்சிறப்பை, வரலாற்றை விளங்கச் சொன்னார்! குழந்தையிவர் பெயரில்தான்! சீர்தி ருத்தக் கொள்கையுரம் வாய்ந்தஇவர் புலமை ஆழி! முழுதுணர்ந்த தமிழாசான்! தமிழி னத்தின் முடம்நீக்கப் பழிநீக்க முனைந்து நின்றார்! இலங்கையர்கோன் இராவணனைத் தலைவ னாக, ஏற்றமுடன் விளக்குகிற காவி யத்தை உலகெங்கும் வாழ்தமிழர் உவகை எய்த ஒப்பரிய தமிழ்க்கொடையாய் வழங்க லானார்! சிலரிதனைத் தடைசெய்தார்! பின்னர் வந்தோர் சிறுமதியோர் தடைநீக்கி மாண்பைச் […]

மேலும்....

ஏழைப் பங்காளர் காமராசர் !

குலத்தொழில் செய்யச் சொன்ன கொடியரின் இழிவைச் சாடி நலம்தரும் திட்டம் நல்கி நற்றமிழ் இனத்தைக் காத்தார்! இலக்குடன் ஆட்சித் தேரை இயக்கினார் காம ராசர்! பலதொழிற் சாலை கண்டார் பள்ளிகள் திறந்தார் மீண்டும்! பள்ளியில் படிப்போர்க் கெல்லாம் பசித்துயர் பறந்தே ஓட நல்லவர் போற்றும் வண்ணம் நண்பகல் உணவுத் திட்டம் பல்வள அணைக்கட் டுக்கள் பாங்குறக் கொணர்ந்தார்! இல்லார் இல்லமோ இன்பம் எய்த ஏழைப்பங் காளர் ஆனார்! விடுதலைப் போரில் அந்நாள் வெஞ்சிறை ஒன்ப தாண்டாய்ப் படுதுயர் […]

மேலும்....