இயக்க வரலாறான தன் வரலாறு (349) – திண்டுக்கல் திராவிடர் எழுச்சி மாநாடு!- கி.வீரமணி

கேரளா யுக்திவாதி சங்கத்தின் 24ஆம் ஆண்டு மாநில மாநாடு எர்ணாகுளம் அருகிலுள்ள ஆல்வே நகரில் 2005 டிசம்பர் 23, 24, 25 ஆகிய மூன்று நாள்கள் நடைபெற்றன. கழகப் பொறுப்பாளர்களுடன் சென்று பங்கேற்றோம். 23.12.2005 அன்று மாலை 6 மணிக்கு இந்த மாநாட்டைத் தொடங்கி வைத்து ஆங்கிலத்தில் சிறப்புரையாற்றினோம். அப்போது, “நான் இங்கு விருந்தினராக வரவில்லை.உங்களில் ஒருவராக வந்திருக்கின்றேன். எனக்கு மலையாளம் தெரியாத காரணத்தால் ஆங்கிலத்தில் பேசுகின்றேன். ஆனால், நமக்கெல்லாம் ஒரே மொழிதான். அதுதான் மனிதநேய மொழி, […]

மேலும்....

இயக்க வரலாறான தன் வரலாறு (348) இந்தோனேஷியாவில் சுயமரியாதைத் திருமணம்! – கி.வீரமணி

சட்ட எரிப்புப் போராட்ட வீரரும் பெரியார் பெருந்தொண்டரும் திருத்துறைப்பூண்டி ஒன்றிய திராவிடர் கழகச் செயலாளர் சித்தார்த்தன் அவர்களின் தந்தையுமான ஈ.சுந்தர் (வயது 80) அவர்கள் 25.10.2005 அன்று மறைவுற்ற செய்தியறிந்து வருந்தினோம். அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி இரங்கல் செய்தி அனுப்பி வைத்தோம். கருநாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் சித்த கங்கையா மற்றும் உறுப்பினர்கள் 26.10.2005 அன்று சென்னை பெரியார் திடலில் எம்மைச் சந்தித்து இந்திய அளவில் சமூகநீதிக்கு இன்றைய தினம் […]

மேலும்....

இயக்க வரலாறான தன் வரலாறு (347)

காமலாபுரத்தில்  பெரியார் சிலை திறப்பு – கி.வீரமணி மருதூர் சிதம்பரம மருதூரில் தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவிற்கு 1.10.2005 அன்று சென்ற நாம், மறைந்த பெரியார் பெருந்தொண்டர் சிதம்பரம் அவர்களின் இல்லம் சென்று, அவருடைய துணைவியார் திருமதி. செண்பக இலக்குமி அவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தோம். பின்னர் அந்த வளாகத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் முழுஉருவச் சிலையைத் திறந்து வைத்தோம்.அருகில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டையும் திறந்து வைத்து, கழகக் கொடியையும் ஏற்றினோம். திறந்து வைக்கப்பட்ட தந்தை பெரியார் […]

மேலும்....

திருப்பூர் திராவிடர் எழுச்சி மாநாடு – இயக்க வரலாறான தன் வரலாறு (346) – கி.வீரமணி

சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இடஒதுக்கீடு தேவையில்லை என ஆகஸ்ட்12, 2005 ஆம் தேதியன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு இந்தியாவில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களிடையே பெரும் எதிர்ப்பு அலையை உருவாக்கியது. தமிழ்நாட்டில் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. நமது அண்டை மாநிலமான கருநாடகாவிலும் போராட்டத்தை முன்னெடுக்கும் வகையில் அதற்கான பூர்வாங்கக் கூட்டம் பெங்களூரில் அம்மாநில மேனாள் துணை முதலமைச்சரும் பகுத்தறிவாளருமான (தற்போதைய முதலமைச்சர்) சித்தராமையா அவர்கள் இல்லத்தில் 7.9.2005ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் […]

மேலும்....

இறையனார் இறப்பு ஈடு செய்ய இயலா இழப்பு !- கி.வீரமணி

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் (D.C.) 31.7.2005 அன்று நடந்த பொதுக்கூட்டத்தில், “தந்தை பெரியார் நேற்றும் இன்றும்” என்ற தலைப்பில் நாம் பேருரையாற்றினோம். வர்ஜீனியா, மேரிலாண்ட், வடகரோலினா மாநிலங்கள் மற்றும் வாஷிங்டன் பகுதியைச் சேர்ந்த தமிழ்ப் பற்றாளர்கள், பகுத்தறிவாளர்கள் பெருமளவில் உரையைக் கேட்கக் கூடினார்கள். இவர்களில் பலர் பல்வேறு தமிழ் அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகள் வகிப்பவர்கள். வாஷிங்டன் பகுதி தமிழ்ச் சங்கத்தின் மேனாள் தலைவர் எம்.எம். ராஜ் அவர்கள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். […]

மேலும்....