இயக்க வரலாறான தன் வரலாறு (353) இந்திய பிற்படுத்தப்பட்ட ஊழியர் நல மாநாடு – கி.வீரமணி

மணப்பாறை கோ.நடராசன்- வள்ளியம்மை இணையரின் மகள் சுமதிக்கும் மற்றும் அன்பழகன்- கல்யாணி இணையரின் மகன் வெற்றிச் செல்வனுக்கும் வாழ்க்கை இணையேற்பு நிகழ்வை மணப்பாறை செல்வலட்சுமி மகாலில் 2.3.2006 அன்று காலை நாம் நடத்தி வைத்து, சுயமரியாதைக் கருத்துகளை விளக்கிக் கூறிச் சிறப்புரையாற்றினோம். பெரம்பலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் உட்கோட்டை கிராமத்தில் தந்தை பெரியார் சிலையையும், பெரியார் படிப்பகத்தையும் எமது பெயரில் (கி.வீரமணி) அமைந்த நூலகத்தையும் 2.3.2006 அன்று வியாழன் மாலை 6 மணிக்கு மாவட்டத் தலைவர் சி.காமராஜ் […]

மேலும்....

இயக்க வரலாறான தன் வரலாறு (353) தேவநேயப் பாவாணருக்கு அஞ்சல் தலை வெளியீடு! – கி.வீரமணி

மேனாள் அமைச்சர் கே.ஏ.கிருஷ்ணசாமி அவர்களின் துணைவியார் திருமதி. புனிதவதி அவர்கள் 11.2.2006 அன்று மறைவுற்ற செய்தியறிந்து வருந்தினோம். அவ்வமயம் சுற்றுப்பயணத்தில் இருந்த நாம் சென்னை திரும்பியதும், 14.2.2006 அன்று காலை சென்னை இராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கே.ஏ.கிருஷ்ணசாமி அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினோம். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஈழத்தமிழர் பாதுகாப்பு மாநாடு சென்னை அமைந்தகரை புல்லாரெட்டி நிழற்சாலையில் 14.2.2006 அன்று மாலை 6 மணியளவில் நடைபெற்றது. […]

மேலும்....

இயக்க வரலாறான தன் வரலாறு (352) தந்தை பெரியார் முத்தமிழ் மன்ற 10ஆம் ஆண்டு விழா ! – கி.வீரமணி

திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்கம் சார்பில் கல்லூரிகளுக்கு இடையேயான இளைஞர் விழா திருப்பூர் தெற்கு ரோட்டரி ஹாலில் 29.1.2006 அன்று நடைபெற்றது. தலைவர் நடராஜன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மாவட்ட ஆளுநர் கே.என். பிள்ளை விழாவைத் தொடங்கி வைத்தார். நிகழ்வில் நாம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போது, ‘‘ஒரு காலத்தில் பெண்களை அழுத்தி வைத்திருந்தனர். இப்போது அனைத்திலும் பெண்கள் முதலிடத்தில் உள்ளனர். படிப்பு என்பது வேறு; அறிவு என்பது வேறு. மாணவர்கள் பட்டறிவும், பகுத்தறிவும் பெற வேண்டும். […]

மேலும்....

கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு ‘பெரியார் பேருரையாளர்’ சிறப்பு அளிப்பு! – கி.வீரமணி

இயக்க வரலாறான தன் வரலாறு (351) மதுரை சுயமரியாதைச் சுடரொளி மானமிகு பே.தேவசகாயம் – அன்னத்தாயம்மாள் ஆகியோரின் பெயரனும், தே. எடிசன் ராசா – சுசீலாராணி விஜயலட்சுமி இணையரின் மகனுமான எ.வைக்கம் பெரியாருக்கும் சென்னை பட்டாபிராம் டி.ஜேம்ஸ் – மனோன்மணி இணையரின் மகள் ஜே. அனிதா பொன்மலருக்கும், மற்றும் தே.எடிசன் ராசா – சுசீலாராணி விஜயலட்சுமி இணையரின் மகன் எ. ஈரோட்டுப் பெரியாருக்கும் மதுரை மாவட்டம் பாலமேடு கே.சி.காமாட்சி – சிந்தாமணி இணையரின் மகள் கா. நித்யாவுக்கும்,  […]

மேலும்....

சுயமரியாதை இயக்க 80ஆம் ஆண்டு விழா – கி.வீரமணி

இயக்க வரலாறான தன் வரலாறு (350) மலேசியக் காங்கிரசின் தேசியத் தலைவரும் மலேசியப் பொதுப்பணித்துறை அமைச்சரும் மலேசியத் தமிழர்களின் தலைவருமான டத்தோ ஸ்ரீ சாமிவேலு அவர்களை சென்னையில் நாம் 2.1.2006 அன்று சந்தித்து, தஞ்சை வல்லம், பெரியார் மணியம்மை பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தோம். பெரியார் பற்றிய (ஆங்கிலம், தமிழ்) நூல்களை அவருக்குப் பரிசாக அளித்தோம். சுயமரியாதை இயக்க 80ஆம் ஆண்டு நிறைவுப் பெருவிழா (1925-2005), பகுத்தறிவாளர் கழக மாநில மாநாடு […]

மேலும்....