பீமா கோரேகான் பேஷ்வாக்களை வீரவரலாறு

மகாராஷ்டிர மண்ணின் பூர்வகுடிகளான ஒடுக்கப்பட்ட மகர்கள் மீது பார்ப்பன பேஷ்வா ஆட்சியாளர்கள் தொடுத்த தீண்டாமைக் கொடுமைகளையும், அதையடுத்து அவர்கள் ஆங்கிலேயர்களின் படையில் இணைந்து ஜாதிவெறிக்கு எதிராகப் போரிட்டு வெற்றி பெற்ற வரலாற்றையும் விளக்குகிறது இந்நூல். “மராட்டிய நாட்டில் பேஷ்வாக்களின் ஆட்சியில், இந்துக்களின் தெருவில் வரும்போது, தீண்டத்தகாதவர் அத்தெருக்களில் நடமாடக் கூட அனுமதிக்கப்பட்டதில்லை. ஏனென்றால், அவர்களது நிழல்பட்டால்கூட இந்துக்களுக்கு தீட்டாகிவிடுமாம். இந்து ஒருவர் தவறாகக் கூட தம்மைத் தொட்டு தீட்டு ஏற்படுத்திக் கொள்ளக் கூடாதென்பதற்காக தீண்டத்தகாத மக்கள் தமது […]

மேலும்....

தகவல் களஞ்சியம்

மீனுக்கு தங்கச் சிலை 19ஆம் நூற்றாண்டில், ரஷ்யாவில் மலேரியா நோய் வேகமாக பரவி, பல உயிர்களைப் பலி கொண்டது. மலேரியாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டிருந்தாலும், சிலர் மலேரியா கொசுக்களை அழிக்கும் ஆராய்ச்சியில் இறங்கினர். அப்போது ‘கம்பெசி’ என்னும் மீன் இனம், மலேரியா கொசு முட்டைகளைத் தேடி உண்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்படி கம்பெசி மீன்களை அதிகளவில் இனப்பெருக்கம் செய்து, நீர்நிலைகளில் நீந்தவிட்டனர். அவை சில மாதங்களிலேயே மலேரியா கொசு முட்டைகளை முற்றிலுமாக அழித்துவிட்டன. மீன்களின் உயிர்காக்கும் […]

மேலும்....

செய்திச் சிதறல்கள்

* உலகிலேயே அதிகமாக இனிப்பு உண்கிறவர்கள் இங்கிலாந்துக்காரர்கள். * உடலில் இருக்க வேண்டிய நீரின் அளவு இரண்டு சதவிகிதம் குறைந்தால் நமக்குத் தாகம் ஏற்படும். ****** விண்வெளி மோதல்கள் அமெரிக்காவிலுள்ள தனியார் விண்வெளி நிறுவனமான ‘ஸ்பேஸ்எக்ஸ்’க்கு சொந்தமான ‘ஸ்டார்லிங்க்’ எனும் செயற்கைக் கோளும் அய்ரோப்பிய ஒன்றியம் அனுப்பியிருந்த ஆய்வு செயற்கைக்கோள் ஒன்றும் மோதவிருந்தனவாம். இதனால் அய்ரோப்பிய ஒன்றியம் தனது செயற்கைக்கோளின் பாதையை மாற்ற வேண்டியிருந்ததாம். பூமிக்கு மேல் 320 கி.மீ. தொலைவில் நடந்துள்ள இந்த நிகழ்வு விண்வெளிப் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள் : கல்விக் கூடங்களில் காவிகள் ஆதிக்கம் தடுக்கப்பட வேண்டும்!

கே:       சுயமரியாதை – மனிதநேயம் இவற்றிற்கிடையே வேறுபாடு என்ன?                 – கிருபா, தாம்பரம் ப:           சுயமரியாதை என்பது தனிமனிதர்களானாலும் சமூகமானாலும் மனிதர்களுக்குத் தேவை. மனிதநேயம் என்பது ஒத்தறிவு (Empathy). மற்றவர்களின் துன்பம் தனக்கே நேர்ந்ததுபோல் உணர்ந்து உதவுதல், ஊறு களைதல்! மனிதநேயத்திற்கு அடிப்படை சுயமரியாதையே. சுயமரியாதை _ அடித்தளம்; மனிதநேயம் _ அதன்மேல் எழுப்பப்பட்ட மேல்தளம். முன்னது மூளை போன்றது; அடுத்தது இதயம் போன்றது. மானமும் அறிவும் அன்புடன் இணைந்த நிலை. கே:       தந்தை பெரியாரின் […]

மேலும்....