விழிப்புணர்வு : செல்போனை இதயம், இடுப்பு அருகே வைக்கலாமா?

இன்றைக்கு, சிறு நகரங்களில்கூட ‘குழந்தையின்மைக்கான சிகிச்சை மய்யங்கள்’  (Fertility Centres) முளைத்துவிட்டன. பத்தாண்டுகளுக்கு முன்னர் இல்லாத அளவுக்கு இப்போது இந்த மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுகிறது. பெண்களுக்கு இணையாக ஆண்களும் சிகிச்சைக்குச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். ‘லேப்டாப்’, ‘ஸ்மார்ட்போன்’ பயன்படுத்துவதுகூட ஆண்களுக்கு மலட்டுத் தன்மையை ஏற்படுத்தலாம்’ என்று அண்மையில் ஓர் ஆங்கிலப் பத்திரிகையில் வெளியான செய்தி அதிர்ச்சியளிக்கிறது. “ஆண்களுக்கு மலட்டுத் தன்மை வருவதற்குப் பல காரணங்கள் உண்டு. புகைபிடித்தல்கூட ஒரு காரணம். வெப்பம் அதிகமாக இருக்கும் சூழலில் பணிபுரிபவர்களுக்கும் இந்தப் பிரச்சனை […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : திராவிடர் கழக வரலாறு

நூல்    : திராவிடர் கழக வரலாறு        (இரு பாகங்கள்) ஆசிரியர்        : கி.வீரமணி வெளியீடு: திராவிடர் கழக (இயக்க)                                           வெளியீடு,                    பெரியார் திடல்,        84/1 (80), ஈ.வெ.கி.சம்பத் சாலை,                                               வேப்பேரி,                   சென்னை-600007.                   தொலைபேசி: 044-2661 8161                    www.dravidianbookhouse.com பக்கங்கள்: 720 நன்கொடை: ரூ.700/- (இரண்டு தொகுதிகளும் சேர்த்து)  [திராவிடர் கழகத்தின் பவள விழா மாநாட்டில் வெளியிடப்பட்ட, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி […]

மேலும்....

அறிவியலுக்கு அடிப்படை இந்துமதமா? (52) : வளர்பிறையும் தேய்பிறையும் நிலவு பெற்ற சாபத்தாலா?

சிகரம் சந்திரனுக்கு மணம் செய்து கொடுக்கப்பட்டனர். சந்திரன் தன் மனைவியர் அனைவரிடத்திலும் ஒரே மாதிரியாக அன்பு காட்டவில்லை. அவர்களுள் ரோகிணி என்பவளிடமே அவனுக்கு அதிகப் பிரியம். அவளிடமே அவன் அதிகமாக இருக்கத் தொடங்கினான். இது மற்றவர்களுக்குப் பிடிக்கவில்லை. கணவனிடம் கோபித்துக் கொண்டு தந்தை வீட்டுக்கு வந்து தக்ஷனிடம் முறையிட்டனர். தக்ஷன் சந்திரனை அழைத்துப் பேசினான். நற்குலத்தில் பிறந்த கலாநிதி எனப் பெயர் கொண்டுள்ள அவன் அவ்வாறு மனைவியர் இருபத்து ஏழு பேரில் ஒருத்தியிடம் மட்டும் அதிகப் பிரியம் […]

மேலும்....

ஆதிக்கம் வேர் விட முடியாத பெரியார் மண்!

பேராசிரியர் பி.இரத்தினசபாபதி திராவிடர் கழகத்தினர் மட்டுமல்லாது, சமுதாய அமைப்பால் பார்ப்பனியம் புகுத்திய  ஜாதிகள் பலவாய்ச் சிதறுண்டு கிடக்கும் அனைத்து மக்களாலும் ஒரு சேர எதிர்க்கப்படுவது வரைவு தேசிய கல்விக் கொள்கை 2019 (பா.ஜ.க.யின் அடிவருடிகள், ஆர்.எஸ்.எஸ். சதிகாரர்கள் தவிர). தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த எதிர்ப்பு?. வரைவு தேசியக் கல்விக் கொள்கையை உள்ளவாறே ஏற்றுக்கொள்ளலாம்  எனச் சில மாநிலங்களும் சிறிது மாற்றங்களுடன் நடைமுறைப்படுத்தலாம் எனச் சில மாநிலங்களும் கூறும்போது தமிழ்நாடு மட்டும் எதிர்ப்பானேன்?  எதிர்க் குரல் எழுப்புவதே […]

மேலும்....

கவிதை : வெள்ளாடா வேங்கையை வீழ்த்தும்?

அடிமைகளா தமிழரெலாம்? தன்மா னத்தை                 அடகுவைத்துத் திரிகின்ற இனமா நாமும்? குடியாட்சி மாண்புதனை முடிந்த மட்டும்                 குழிதோண்டிப் புதைக்கின்ற கொடுமை என்னே! அடியாட்கள், அதிகாரம் வரம்பு மீற                 அந்நாளின் உரிமையெலாம் பறித்தல் கண்டும் நடிப்பாரை மிகநம்பிக் கெட்டார்; நாட்டின்                 நடப்பினையே உணராமல் தவிக்க லானார்!   தமிழகத்தைப் பாலைவனம் ஆக்கு தற்கே                 தடித்தனமாய் வடவரிங்கே முயலு கின்றார்; தமிழரையே விலைகொடுத்து வாங்கு தற்கே                 தன்மானம் இல்லாரைத் தேடிக் கண்டு […]

மேலும்....