ஆசிரியர் பதில்கள் : குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கிறிஸ்துவர்களும் எதிர்க்கிறார்கள்!

கே:       மேனாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி அளிக்கப்பட்டிருப்பது – நீதிபதியின் நேர்மையை கேள்விக்கு உட்படுத்தியுள்ளது. அவரின் தீர்ப்புகளை மறு ஆய்வு செய்ய சட்டத்தில் இடம் உண்டா? – சங்கமித்திரன், மதுரை. பதில்: நீதிப்போக்கு… உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக ஜஸ்டிஸ் டிபக் மிஸ்ரா இருந்தபோது செய்தியாளர்கள் சந்திப்பு நடத்திய நால்வர் நீதிபதிகளில் இவரும் ஒருவர். பிறகு ஒரு பெண் ஊழியர் பாலினப் புகார் – குற்றச்சாட்டு. அதற்குப் பிறகு வந்த ரபேல் […]

மேலும்....

வாசகர் மடல்

இளம் தலைமுறையினரின் அன்பு வணக்கம். சில மாதங்களாக ‘உண்மை’, ‘பிஞ்சு’ முகவரின் வேண்டுகோளுக்கிணங்கி ‘உண்மை’ ‘பெரியார் பிஞ்சு’ இதழ்கள் படித்து வருகிறேன். ஆசிரியரின் தலையங்கம் அரசியல்வாதிகளுக்கும், சட்டம் பயின்றோருக்கும் விளக்கி, விளக்கம் தந்து நீங்கள் ஒரு சட்ட நிபுணராகவும், பகுத்தறிவு ஆசிரியராகவும் விளங்கி வருவதை ‘உண்மை’, ‘பெரியார் பிஞ்சு’ இவற்றின் மூலம் தெரிந்து வருகிறேன். மாதாமாதம் வரும் மூடநம்பிக்கைப் பண்டிகைகளுக்கு ஏற்றவாறு பெரியாரின் கட்டுரைகளை வெளியிட்டு, புரிதலை உண்டாக்கி, உலகமே போற்றும் தலைவராக உலா வருகிறீர்கள். பல் […]

மேலும்....

சாதனை மனிதர் : 80 வயது பல்கலை வித்தகர் கு.அரங்கசாமி!

ஓய்வு என்றால் ஓய்ந்திருப்பது அல்ல; மற்றொரு வேலையைச் செய்வதுதான் என்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அடிக்கடி குறிப்பிடுவதுண்டு. அவரே அப்படி நடந்தும் காட்டிவருகிறார். அப்படி, பள்ளிக்கூடம் எனக்குப் பணி ஓய்வு வழங்கிவிட்டாலும் நான் ஓய்வே எடுத்ததில்லை என்று சிரித்துக்கொண்டே கூறுகிறார் சென்னை ஆவிச்சி மேல்நிலைப் பள்ளியில், உடற்பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றி தற்போது 80 வயதை எட்டியிருக்கும் அரங்கசாமி.      அரங்கசாமி, தற்போதும் காலையில் இளைய தலைமுறையினருடன் இணைந்து கைப்பந்து, பூப்பந்து, இறகுப் […]

மேலும்....

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்!

 மரு.இரா. கவுதமன் இதயத் துடிப்பு சீரின்மை (Arrhythmia) நோய்கள்: இதயம் தன்னிச்சையாக செயல்படக் கூடியது. கண், கை, கால்கள் போல் இதயத்தை நமது விருப்பத்திற்கு இயக்க முடியாது. இதயத்தின் இயக்கத்தை கட்டுப்படுத்த தனிப்பட்ட நரம்பு மண்டலம் உள்ளது. இதற்கு “தன்னியக்க நரம்பு மண்டலம்’’ (Autonomous Nervous System) என்று பெயர். இந்நரம்பு மண்டலம் தவிர “உயிரி சுரப்பு நீர்’’களும் (Cardiac Enzymes) இதயத்தின் செயல்பாட்டை கட்டுப்படுத்துகின்றன. இதயத்தை கட்டுப்படுத்தும் நரம்புகளில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒரு பிரிவு […]

மேலும்....

கவிதை : தந்தை பெரியாரின் பகுத்தறிவு

ஈரோடு தமிழன்பன் எல்லா ஊர்களின் பெயர்களையும் எனது உதடுகளால் உச்சரிப்பேன்! ஈரோட்டை எனது உயிரால் உச்சரிப்பேன். ஈரோட்டின் பிராமணப் பெரிய அக்ரஹாரமே அதிசயமானது! அங்கு, என் இனிய பிரியாணி முஸ்லிம்களே நல்ல பிராமணர்கள்! கடைகளில்தான் மஞ்சள் வாணிகம் கதைகளில் அல்ல! வேறு கலைகளிலும் அல்ல…. ஈரோடு, தோலையும் பதம் பார்க்கும் ஆளையும் பதம் பார்க்கும்! பகுத்தறிவுப் பறவைகளின் சரணாலயம்….! வேடந்தாங்கல் பொறாமையால் வேர்ப்பது இதைக் கண்டுதான்! இதன் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பல்கலைக் கழகங்கள் பாடம் கேட்டன! எங்கள் […]

மேலும்....