அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (335)

டில்லியில் நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர் மாநாடு பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடிகள், சிறுபான்மையர் ஆகியோரின் தேசிய ஒன்றியம் நடத்திய மாநாடு 2004, டிசம்பர் 9இல் காலை 10 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை மிகச் சிறப்பாக டில்லி மல்கோத்ரா மைதானத்தில் நடைபெற்றது. நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் மாநாட்டிற்கு மேனாள் மத்திய கல்வி அமைச்சர் டி.பி. யாதவ் தலைமை வகித்தார். கருநாடகத்தில் இருந்து திரு.லட்சுமி சாகர், திருமதி இந்திரா ஜெயராமன், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திருமதி டாக்டர் சாந்த்வானா […]

மேலும்....

அஞ்சா நெஞ்சன் அழகிரியின் ஆளுமைகள் !

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள கருக்காக்குறிச்சி கிராமத்தில் வாசுதேவன்-கண்ணம்மா இணையருக்கு 23.06.1900 அன்று பிறந்தவர். திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி. தீவிரமாகப் பெரியாரைப் பின்பற்றியவர்; தன் வாழ்நாள் முழுதும் ஒரே தலைவன் ஒரே கட்சி என்று வாழ்ந்தவர். மலை குலைந்தாலும் மனம் குலையாத கொள்கை மறவர். சுயமரியாதை இயக்கத்தின் சுடர் விளக்கு! ஜாதி, மத, மூட நம்பிக்கைகளை எதிர்த்துத் தினம் மேடையமைத்துப் பரப்புரை செய்துவந்தவர். […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

சட்ட விதிமுறைகளைச் சரியாக கற்காது எழுதப்பட்ட தீர்ப்பு !  1. கே :  தி.மு.க. கூட்டணி சிதறிப்போகும் என்றனர். அது இன்னும் பலப்பட்டு நிற்க, தி.மு.க. கூட்டணியில் உடன்பாடு ஏற்பட்டாலும் அக்கட்சிகளுக்கு மனக்கசப்பு உள்ளது என்று புதிதாய் ஒன்றைக் கூறும் ஊடகங்கள் பற்றித் தங்கள் கருத்து என்ன?  – எல். சாமிநாதன், அறந்தாங்கி ப : அப்பட்டமான, விஷமப் பிரச்சாரங்கள்  –  பொய்கள் பரப்புரை – அதற்கு நீங்கள் பலியாவதோடு, மற்றவர்களையும் பலியாகச் செய்வது நியாயமா? 2. […]

மேலும்....

தமிழ் மறுமலர்ச்சியில் இராபர்ட் கால்டுவெல் – சரவணா இராஜேந்திரன்

இராபர்ட் கால்டுவெல் உலக வரலாற்றை மாற்றியமைத்ததில் நூல்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. காரல்மார்க்சின் மூலதனம் எனும் நூல் அவ்வகையில் அனைவராலும் போற்றப்படும் நூலாக உள்ளது. அதுபோலத் தமிழ்நாட்டு வரலாற்றில் – தமிழ் வரலாற்றில் மிகப்பெரும் மறுமலர்ச்சியை உண்டாக்கிய நூல் எனில் அது இராபர்ட் கால்டுவெலின் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ எனும் நூலாகும். அந்த நூலையும் அதன் ஆசிரியரான கால்டுவெல்லையும் மதிப்பதற்குக் காரணம் தமிழர்களின் உள்ளத்திலும், உலக அளவில் தமிழ்பற்றி ஆராய்ந்த அறிஞர்களின் உள்ளத்திலும் புதிய வெளிச்சத்தை அந்நூல் பாய்ச்சியமையே […]

மேலும்....

ஆடம்பரத் திருமணம்…ஓர் ஈரோட்டுப் பார்வை ! – முனைவர் வா.நேரு

ஓர் ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதற்காக ஓர் ஒப்பந்தம் தேவைப்படுகிறது. சுயமரியாதைத் திருமணங்களில் மணமக்கள் ஏற்கும் உறுதிமொழியைப் போல ‘வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்களில் சமபங்கு வகிக்கும் உற்ற நண்பர்களாய், என்னிடமிருந்து நீங்கள் என்னென்ன உரிமைகளை எதிர்பார்க்கிறீர்களோ, அதே உரிமைகளை உங்களிடமிருந்து நான் எதிர்பார்க்க உரிமை உண்டு என்னும் ஒப்பந்தத்தின் பேரில் இந்த மலர் மாலையினைத் தங்களுக்கு அணிவிக்கிறேன்’ என்று சொல்வதைப் போல வாழ்வில் இணையும் ஓர் ஆணும் பெண்ணும் உற்ற நண்பர்களாய் வாழ்வதற்கு இந்தத் திருமண […]

மேலும்....