ஆசிரியர் பதில்கள்

தமிழ்நாடு அரசு  தனிச்சட்டம் இயற்ற வேண்டும்! 1. கே: ஒடிசா இரயில் விபத்து நடந்த பிறகாவது தவறுகள் சரி செய்யப்படுவதற்கான முயற்சிகளை நாடு முழுவதும் மேற்கொள்ளுவதற்கு மாறாக, தனியார் மயமாக்குவதற்கான காரணியாக இவ்விபத்தைப் பயன்படுத்த முயற்சிக்கும் பா.ஜ.க. தன் அஜண்டாக்களில் உறுதியாகவுள்ளதைத்தானே காட்டுகிறது? – கண்ணதாசன், தஞ்சாவூர். ப: ஓநாய் ஒரு போதும் ‘சைவமாக’ மாட்டாது! கார்ப்பரேட் முதலாளிக்காக பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆட்சி அரசு  அமைத்த தண்டவாளம், ரயில்வே நிலையங்கள் தனியாருக்குத் தாரைவார்க்கப்பட்டு ரயில்கள் ஓடி, அவர்கள் கொள்ளை […]

மேலும்....

சிறப்புக் கட்டுரை – செங்கோல் வாங்கலியோ செங்கோல்!

சமா.இளவரசன் “‘இறையாண்மை’ மிக்க, ‘சமயச் சார்பற்ற’, ‘சோசலிச’, ‘ஜனநாயக’க் ‘குடியரசு’ “நாட்டின் நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவில் இந்தத் தத்துவங்கள் அனைத்துக்கும் மாறாகவும், இந்திய நாட்டினைச் செலுத்தும் அரசியல் சட்டத்தைக் கொஞ்சமும் மதிக்காமலும் என்னென்ன ஆபாசக் கூத்துகள் அரங்கேற வேண்டுமோ, அனைத்தும் அரங்கேற்றி நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. ’யாருக்கும் வெட்கமில்லை’ என்று சொல்ல முடியாது. வெட்கப்பட்டோரெல்லாம் விலகி நிற்க, கோபம் கொண்டோரெல்லாம் குரல் எழுப்ப, இவற்றைக் கண்டுகொள்ளாமல் கூச்சநாச்சமின்றி நடந்த ஒரு விளம்பரக் காட்சியின் பெரும் பொருட்செலவிலான படப்பிடிப்பு […]

மேலும்....

கட்டுரை – பசியால் துடித்த மாக்சிம் கார்க்கி

 – முனைவர் வா. நேரு ‘தாய்’ என்னும் நாவல் மூலமாக உலகம் முழுவதும் அறியப்பட்ட எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி ஆவார். அவரின் இயற்பெயர் அலெக்சி மாக்சிகோவிச் பெசுகோவ். இவர் மார்ச் 16,1868இல் பிறந்தவர். மார்ச் 16 மிக எளிதாக நம் நினைவில் நிற்கும் நாள். ஆம், அன்னை மணியம்மையார் அவர்களின் நினைவு நாள் என்பதால் நம் நினைவில் நிற்கும் நாள்.அந்த நாள் மாக்சிம் கார்க்கியின் பிறந்த நாள். மாக்சிம் கார்க்கி அவர்களின் நினைவு நாள் ஜூன் 18, […]

மேலும்....

பெண்ணால் முடியும் – வன உயிரின புகைப்படக் கலைஞர்

திவ்ய பாரதி ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகில் உள்ள மலையபாளையத்தை சேர்ந்தவர் “வன உயிரின போட்டோகிராபர்’’ திவ்ய பாரதி. இவரின் அப்பா ஒரு தொழிலதிபர், அம்மா இல்ல நிருவாகியாவார். அண்மையில்தான் இவருக்குத் திருமணமாகியுள்ளது. கணவர் தொழில்(முனைவர்) அதிபர், ஆங்கில இலக்கியத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றவர். சிறு வயது முதலே ஒளிப்படங்கள் (Photos) எடுப்பதில் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். இவர் குடும்பத்தோடு அடிக்கடி சுற்றுலா செல்வது வழக்கம். அருகில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை வனப் பகுதிகளுக்குள் பலமுறை […]

மேலும்....

கவிதை சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்!

முனைவர். கடவூர் மணிமாறன் சான்றோர் உயர்ந்தோர் வாழ்த்துகிற சமூகநீதிக் காவலராம்! தேன்போல் இனிக்கும் நலத்திட்டம் தேர்ந்து கொணர்ந்தார் வி.பி.சிங் பூனா, அலகா பாத்திலுமே பொறுப்பாய்ப் பல்கலைக் கழகத்தில் தேனாய்க் கல்வி கற்றிட்டார் தெளிந்தஅறிவைப் பெற்றிட்டார்! மண்டல் ஆணையம் என்றாலே மனத்தில் நிற்பதும் இவர்பெயரே! உண்மை நேர்மை எளிமைக்கோர் உயர்ந்தவர் இவரே அடையாளம்! இடஒதுக் கீட்டின் பெருந்தலைவர்! இருபத் தேழு விழுக்காடு முடமாய் இருந்தோர் பிற்பட்டோர் முன்னேற் றத்தைத் தொடங்கியவர்! அரசக் குடும்பத்தில் பிறந்த இவர் அன்பில் பண்பில் […]

மேலும்....