வரலாற்று சுவடுகள் – புரட்சியும் மகிழ்ச்சியும்

பேரறிஞர் அண்ணா திருவாங்கூர் திவான் சர்.சி.பி. இராமசாமி அய்யர், புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் வேதம், இந்து மதம், பார்ப்பனியம் ஆகியவற்றைக் கண்டித்துப் பேசியமைக்காக, பார்ப்பன இன உணர்வுடன் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்தார். அவருடைய எதிர்ப்புக்கு திரு.எஸ். இராமநாதன் அவர்கள் ‘லிபரேட்டர்’ இதழில் மறுப்புக் கட்டுரை ஒன்றை எழுதினார். அதனடிப்படையில் அறிஞர் அண்ணா அவர்கள் திரு.எஸ். இராமநாதனைப் பாராட்டியும், சர்.சி.பி. இராமசாமி அய்யர் வகையறாக்களுக்கு சில வினாக்களை எழுப்பியும், தமிழர்கள் பார்ப்பனியத்தைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டிய அவசியம் குறித்தும் […]

மேலும்....

மனம் மாறிய மாயவன்

ஆறு. கலைச்செல்வன் தங்கள் மகன் இராசேந்திரன் திருமணத்தை சுயமரியாதைத் திருமணமாக, தாலி கட்டாமல் நடத்த வேண்டும் என முடிவு செய்தனர். நந்தகுமார் – சரோஜா இணையர். அந்த மிகச் சிறிய குக்கிராமத்தில் தாலி காட்டாமல் திருமணம் நடக்கப்போவதை அறிந்த மக்கள் மிக்க வியப்படைந்தனர். குறிப்பாக பெண்கள் கும்பல் கும்பலாகக் கூடி இதுபற்றியே பேச ஆரம்பித்தனர். ஏதோ நடக்கவே கூடாத செயல் நடக்கப்-போவதாக எண்ணிப் பதறினார்கள். “இது என்ன அநியாயம்! இது அடுக்குமா! இதெல்லாம் அழிஞ்சி போறதுக்கு அறிகுறியோ!’’ […]

மேலும்....

பரவட்டும் பாவாணர் புகழ்!

முனைவர் க. தமிழமல்லன் நம்தமிழர் பெயர் பார்த்தால் வெட்கம்! எல்லாம் நம்பகைவர் மொழியாலே நாறும்! மானம் நம்முடைமை தானென்றால் அவற்றை யெல்லாம் நம்தமிழாய் ஆக்கிடுதல் முதல்முன் வேலை! தம்பெயரைத் தனித்தமிழில் மாற்றிக் கொள்ளார் தனித்தமிழில் அறிஞரெனப் பீற்றிக் கொள்வார் தம்போக்கைப் பாவாணர் கொள்கை எள்ளும் தவறாமல் அவர்தம்மைக் காலந் தள்ளும்! முக்கொள்கை பாவாணர் மூச்சுக் கொள்கை முதற்கொள்கை தனித்தமிழாம்! குமரிக் கண்டம் அக்கால முதல்மாந்தன் பிறந்த கண்டம்! அடியுண்மை நாட்டுதற்காய் முரச றைந்தார்! சிக்கல்கள் எல்லாமும் சிதையும் […]

மேலும்....

“காதலர் தினத்தை பசு அரவணைப்பு நாளாக அறிவித்து பின்வாங்கிய விலங்குகள் நல வாரியம்”

பிப்ரவரி 14-ம் தேதி என்பது உலக காதலர்தினமாகக் கொண்டாடப்படுகின்றது. காதலர் தினம் வரவிருக்கும் நிலையில், சில நாள்களுக்கு முன்பு இந்திய விலங்குகள் நல வாரியம் வெளியிட்ட கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது. இந்திய விலங்குகள் நல வாரியம் வெளியிட்ட அறிக்கை: காலப்போக்கில் மேற்கத்திய கலாசாரத்தின் வளர்ச்சி காரணமாக, நம் வேத மரபுகள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன. மேலும், மேற்கத்திய கலாசாரத்தால், நம் கலாசாரம், பாரம்பரியம் கிட்டத்தட்ட மறக்கடிக்கப்பட்டுவிட்டது. பசுக்களை அணைப்பதால் உணர்ச்சி பெருக்கு(Emotional Richness) […]

மேலும்....

தொழில் முனைவில் சாதிக்கும் சர்மிளா பேகம்!

“பெண்களுக்கு ஏற்படும் இயற்கை நிகழ்வான மாதவிடாய் காலங்களில் பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்களின் ரசாயனங்களால் உடல்நிலைக் கோளாறுகள், சிக்கல்கள் ஏற்படுகின்றன. இத்தகைய சூழ்நிலையில் பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்கள் இயற்கையான மூலிகையைக் கொண்டு, மூலிகை நாப்கின்களைத் தயார் செய்து சாதித்து வருகிறார் தோழர் சர்மிளா பேகம். “மூன்று ஆண்டுகளுக்கு முன் அவர் உடல் நலமின்றி இருந்தார். அதுக்குக் காரணம் அவர் பயன்படுத்திய, ரசாயனங்களால் ஆன நாப்கின்கள் தான் என்று தெரிந்தது. அதற்கு மாற்றாக பருத்தி மற்றும் மூலிகை நாப்கின்கள் பயன்படுத்திய […]

மேலும்....