தமிழர் மருத்துவம் : மலர்களின் மருத்துவப் பயன்கள்

தாமரைப்பூவும் தண்டும்! வெண் தாமரை மூளைக்கும். செந்தாமரை இதய வலுவுக்கும் நல்லது. கஷாயம் வைத்து 15 மில்லி வரை அருந்தலாம். தாமரைத் தண்டுக்கு கர்ப்பப்பையை வலுப்படுத்தும் தன்மை உண்டு. ஆவாரம் பூ நீரிழிவுக்கான சூரணத்தில் ஆவாரம் பூவையும் சேர்க்கிறோம். காய்ச்சிய பசும்பாலில் இரவு முழுக்க ஆவாரம்பூவை ஊறவைத்துக் குடித்தால் வெள்ளைப்படுதல் சரியாகும். நந்தியாவட்டை கண்கள் சிவந்து இருத்தல், கண்களில் நீர் வடிதல் போன்ற பிரச்சனைகளுக்கு நந்தியாவட்டை மலர் சிறந்த மருந்து. எறும்புகள் இல்லாமல் சுத்தம் செய்த நந்தியாவட்டைப் […]

மேலும்....

கவிதை : மனிதம் எங்கே?

முனைவர் கடவூர் மணிமாறன் அரசியலில் வாழ்வியலில் இன்றும் நம்மை ஆள்வதுவும் ஆரியமே, அறிந்து கொள்வீர்; அறிவியலை உலகியலை அறியா ராக அழிக்கின்ற மடமையெனும் சேற்றுள் மூழ்கிப் புரியாமல் பகுத்தறிவை இழந்தோம்; பொல்லாப் பொய்களையே மெய்களென நம்பிக் கெட்டே உரமிழந்தோம்; திறமிழந்தோம்; பழமை வாத ஊளையிடும் நரிகளையும் நம்ப லாமோ? சாணிக்குப் பொட்டிட்டுச் சாமி என்போர் சாத்திரமும் கோத்திரமும் வேண்டும் என்பார்! ஆணியையும் வைரமென அலறி நிற்பார்; அழிக்கின்ற மனுதருமம் வேதம் என்பார்; தூணினையே துரும்பென்பார்; துரும்பைக் கூடத் […]

மேலும்....

நாராயண குரு – (பிறப்பு 20.8.1856)

“சமூகச் சிக்கல்களின் தோற்றுவாயாக ஜாதிய முறை இருப்பதைக் கண்டுணர்ந்த நாராயண குரு, அதை ஒழித்துக்கட்ட முடிவு செய்தார்; உறுதி பூண்டார். அதற்கு இரண்டு செயல் திட்டங்களை வகுத்தார். 1. ஜாதிக் கொடுமைகளை – உணர்வு களை மக்கள் மத்தியிலிருந்து களைதல். 2. அவர்களிடம் நிலவும் மூட நம்பிக்கைகளை அகற்றுதல். நாயர்கள் தங்களைத் தீண்டுவதில்லை; இழிவாக, தீண்டத்தகாதவர்களாக நடத்து கிறார்கள் என்று ஈழவர்கள் இவரிடம் சொன்னபோது, “முதலில் நீங்கள் உங்களுக்குக் கீழாக நினைக்கும் புலையர் களைச் சமமாக நடத்துங்கள்; […]

மேலும்....

அறிவியல் : 5ஜி தொழில்நுட்பம் – சில பார்வைகள்

முனைவர் வா.நேரு இந்தியாவில் 5ஜி ஏலம் நடந்து முடிந்திருக்கிறது. இந்தியாவின் எதிர்காலத்தில் முழுமையாக டிஜிட்டல் உலகத்தை ஆக்கிரமிக்கப் போகும் இரு நபர்களாக இந்தியாவின் பெரும் பணக்காரர்களான கவுதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானி உருவாகி இருக்கிறார்கள். அம்பானியின் ரிலையன்ஸ் _ஜியோ, வோடஃபோன் அய்டியா, பார்தி ஏர்டெல், அதானி டேட்டா நெட்வொர்க் எல்லாம் இந்த ஏலத்தில் பங்கெடுத்து பணம் கட்டியிருக்கிறார்கள். இன்னும் இந்த சேவையையே தொடங்காத அதானி கம்பெனிக்கு 5ஜி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், 100 ஆண்டுகளுக்கு மேலாக தொலைதொடர்பு […]

மேலும்....

ஆய்வுக் கட்டுரை: மதம் ஆட்சியில் ஏறினால் நாடு இருண்டுவிடும்! எச்சரிக்கை!

பாவலேறு பெருஞ்சித்ரனார் இந்தியத் தலைமையமைச்சராய் இராசீவ் இருந்தபோது தமிழ்நாட்டுக்கு வந்தார். பின் குருவாயூர்க் கோயிலுக்குப் போய்த் தம் எடைக்கு எடை சருக்கரை அளந்து துலைபாரம் நிறுத்தி வழிபட்டார். பின் சென்னை வந்தபொழுது, காஞ்சி சென்று மூன்று சங்கராச்சாரிகளையும் வழிபட்டுச் சென்றார். வேறு வகையிலெல்லாம் அவரைக் குறை கூறிய பார்ப்பனர்கள், இராசீவின் இந்தச் செய்கைகளால், உச்சி குளிர்ந்து போயினர். மதச்சார்பு ஒன்றே பார்ப்பனத் தன்மையை உறுதிப்படுத்துவது என்பது அவர்களின் கணிப்பு. ஒருவன் எத்துணைக் கொடியவனாக, கயவனாக, அதிகார வெறிபிடித்த […]

மேலும்....