தகவல்கள்

கிளாஸ்கோ மாநாட்டில் தமிழ்நாட்டின் குரல் கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி வினிஷா உமாசங்கர் பேசியது குறிப்பிடத்தக்கது. இவர் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, சூரிய மின்சக்தியில் இயங்கும் இஸ்திரி  (Iron Box)  வண்டியை உருவாக்கி கவனம் பெற்றவர். இங்கிலாந்து இளவரசர் வில்லியம் துவங்கிய ‘எர்த்ஷாட்’ பரிசு (Earthshot Prize) விருதுக்கான இறுதிப் போட்டிக்கு தேர்வானவர்களில் வினிஷாவும் ஒருவர். இவரின் உரையில், “உலகத் தலைவர்களின் பழைய விவாதங்கள், நடைமுறைகளைப் பற்றி சிந்திப்பதை […]

மேலும்....

சிந்தனை குழந்தைகள் – விளையாட்டுகள் பண்பாடுகள்!

இனியன் பண்பாடு அதுவொரு சிக்கலான அணுகுமுறை என்றே அவ்வப்போது நினைக்கத் தோன்றுகிறது. ஏனென்றால், எதுவெல்லாம் பண்பாடு எனச் சிந்தித்தால், அது சிலந்தி வலையைச் சிக்கெடுத்து நேர் செய்வதற்குச் சமமான கடும் முயற்சி போன்றதே. அதிலும் அவற்றை குழந்தைகளுக்குக் கடத்துதல் என்பதைப் பற்றி சிந்திக்கும் போது கூடுதல் சிக்கல்களே முன் வந்து நிற்கின்றன. இப்படிச் சொல்வதற்கான காரணங்கள் இல்லாமலில்லை. தமிழ்நாட்டின் மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றில் ஒரு முறை விளையாடச் சென்றிருந்தேன். விளையாடக் குழுக்கள் பிரித்தாக வேண்டும். அனைத்துக் […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (286)

பெரம்பலூர் விவசாயிகள் மாநாடு கி.வீரமணி பெரம்பலூரில் விவசாயிகள் சங்கம் சார்பில் மாபெரும் மாநாடும், சிலைத் திறப்பு நிகழ்ச்சியும் 27.2.1998 அன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டேன். பெரம்பலூரில் மதனகோபால சுவாமி திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகளின் நலனை வலியுறுத்தி பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்-பட்டன. விவசாயிகள் சங்க மலரும் வெளியிடப்-பட்டது. பின்பு மண்டபத்திலிருந்து மாபெரும் விவசாயிகள் பேரணி சிலை திறப்பு விழா நடைபெறுகின்ற இடமான பெரம்பலூர் பேருந்து நிலையத்தை அடைந்தது. அங்கு விவசாயிகள் சங்கத் தலைவர் மறைந்த […]

மேலும்....

சமூகநீதி : தமிழ்நாடு தந்தை

பெரியார் மண்! தமிழ்நாடு எப்போதும் பெரியார் மண் என நாம் கூறுவதை, சிலர் வீம்புக்காக எதிர்த்தாலும், உண்மை என்பது நிலையானது. அந்த வகையில் அண்மையில் வெளியிடப்பட்ட மாநிலங்களின் வறுமை ஒழிப்புப் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. அதற்காக பல பொருளாதார ஆய்வாளர்கள் கூறும் காரணங்கள் _ தொடர்ந்து தமிழ்நாட்டில் கடைப்பிடிக்கப்படும் இடஒதுக்கீடு முறை, திராவிட ஆட்சியின் திட்டங்கள் சார்ந்த நடைமுறை எல்லாவற்றையும்விட தந்தை பெரியாரால் கொண்டுவரப்பட்ட ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்னும் சமூகநீதியே தமிழ்நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு […]

மேலும்....