கவிதை: நாடுய்யக் காண்போம் நாமே!

முனைவர் கடவூர் மணிமாறன் அதிகார வாய்ப்பாலே வரம்பு மீறி ஆணவத்தின் உச்சத்தில் அமர்ந்து கொண்டு குதிக்கிறது குள்ளநரிக் கூட்டம்! மூடக் குழிக்குள்ளே வீழ்ந்தோரோ எழவே மாட்டார்! புதிராக இருக்கிறது; தமிழ்நா டென்றே புகன்றிடவே கூடாதாம்; முகவர் கூற்றை மதியுள்ளோர் ஏற்பாரோ? சட்டம் தன்னை மதிக்காதார் இழைப்பதுவும் மானக் கேடே! எப்படியும் வென்றிடவே வேண்டும் என்னும் எண்ணத்தில் பொழுதெல்லாம் இருப்போர், வீணே செப்பரிய ஏமாற்றுச் செயல்கள் தம்மில் சிறகினையே விரிக்கின்றார்; நாட்டு மக்கள் ஒப்போலை பறிப்பதிலே முனைப்புக் கொள்வார்! […]

மேலும்....

மருத்துவம் :மரணம் (2)

மருத்துவர் இரா. கவுதமன் 1980இல் ‘மரணம்’ என்பதன் விளக்கம் தெளிவாக்கப்பட்டது. 1. ஒருவர் மீள முடியாத நிலையில் இரத்த ஓட்டம் நின்றுவிடுதல் மூச்சு விடுவது நின்று விடுதல் (Irreversible cessation of circulatory and respiratory function). 2. மீள முடியாத நிலையில் ‘மூளை’யின் செயல்பாடுகள் நின்று விடுதல் (Irreversible cessation of all functions of the entire brain). மருத்துவ முறையிலும், சட்டத்தின் முறையிலும் இன்று உலகம் முழுவதும் மரணம் குறித்து இந்த விளக்கம் […]

மேலும்....

நூல் மதிப்புரை : அச்சேறியுள்ள ஆசிரியர் நினைவலைகள்

பொ. நாகராஜன், பெரியாரிய ஆய்வாளர் * திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் வயது 90. அவரது பொது வாழ்க்கையின் வயது 80. அவரது நினைவுகளைப் பின்னோக்கி இழுத்துச் சென்ற நிகழ்வுகளின் வயது 60. இது போன்ற ஒரு அரிய தலைவரின் நினைவுகளை அவரே நமக்கு அறியச் செய்வது தான் இந்த நூல்! * தந்தை பெரியார் பற்றி 16 கட்டுரைகள், அன்னை மணியம்மையார் பற்றி 11 கட்டுரைகள், பாவேந்தர் பாரதிதாசன் பற்றி 9 […]

மேலும்....

கட்டுரை: நீண்ட நாள் வாழ்வதற்கு வழி காட்டும் எலிகள்

முனைவர் வா.நேரு மனிதர்கள் கற்றுக்கொள்வதற்கும் அறிவைப்பெற்றுக்கொள்வதற்கும் நம்மைச்சுற்றி இருக்கும் மனிதர்கள் மட்டுமல்ல, சில நேரங்களில் நம்மைச்சுற்றி இருக்கும் விலங்குகளும் பறவைகளும் கூட பயன்படுகின்றன. பல நூற்றாண்டுகளாக கடவுளால் தான் இந்த உலகம் படைக்கப்பட்டது என்று நம்பிக்கொண்டிருந்த மக்களின் மனதில் மிகப்பெரிய மாற்றத்தை தன்னுடைய பரிணாம வளர்ச்சிக் கொள்கையால் உண்டாக்கிய சார்லஸ் டார்வின் அவர்களின் மனதில் மாற்றம் ஏற்பட, பல்வேறு இடங்களில் அவர் கண்ட ஆமைகள்தான் காரணமாக அமைந்தன. தன்னுடைய சுற்றுப்பயணத்தில் ஒவ்வொரு இடத்திலும் கழுத்து நீண்டும், குட்டையாகவும் […]

மேலும்....

உணவே மருந்து

இதயம் காக்கும் மசாலா பொருள்கள் தமிழர்கள் தங்கள் உணவு முறையைத் தேர்ந்து, அனுபவத்தில் பயன் அறிந்து வழக்கப்படுத்தினர். உணவே மருந்து என்ற அடிப்படையிலே உணவு முறையை மேற்கொண்டனர். நாக்கு ருசிக்கு மட்டும் முன்னுரிமை அளிக்காமல் சுவையோடு உடல் நலம் காக்கவும் உகந்ததாய் உணவு முறையை அமைத்தனர். கீரைகள், காய்கறிகள் அதிகம் உண்ணும் முறையை முதன்மையாக்கினர். முருங்கை, அகத்தி, மனத்தக்காளி, அரைக்கீரை, சிறுகீரை, கொத்தமல்லி, பொதினா, கறிவேப்பிலை இவற்றை அதிக அளவில் அன்றாடம் இடம்பெறச் செய்தனர். கொழுப்பு, உப்பு, […]

மேலும்....