குலத் தொழிலைத் திணிக்கும் மனுதர்ம யோஜனா திட்டத்தை எதிர்த்து தமிழர் தலைவரின் பரப்புரைப் பயணம்!

2023 கட்டுரைகள் நவம்பர் 1-15, 2023 மற்றவர்கள்

வை.கலையரசன்

திராவிடர் கழகம் என்பது பிரச்சாரம், போராட்டம் என்னும் இரண்டு பெண்டுலங்களைக் கொண்டு இயங்கும் கடிகாரம் போன்ற இயக்கம்.
திராவிடர் கழகத் தலைவரின் பிரச்சார முறையானது எந்த ஒரு பிரச்சனையையும் கடைசி மனிதனுக்கு கொண்டுபோய்ச் சேர்க்கும் வலுவான ஊடகமாக தாமே மாறும் முறை. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான ஒரு சிறு நடவடிக்கையாக இருந்தாலும் உடனே அதனை விளக்கி தம் அறிக்கையை வெளியிடுவார்.

மக்களையும், அரசாங்கத்தையும், தலைவர்களையும் எச்சரித்து வழி நடத்துவதாய் அந்த அறிக்கை திகழும். அதைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கும் மக்களுக்கும் இதுபற்றிய செய்திகளை விளக்க ஒரு சிறப்புக் கூட்டத்தை தலைநகரில் நடத்துவார். அனைத்துக் கட்சிகளின் தலைவர்களை அழைத்து அந்தக் கேட்டினை ஒழிக்க படைதிரட்டுவார். அத்தோடு முடிவதில்லை அவரது பணி, அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் இந்தச் செய்திகளைக் கொண்டுபோய்ச் சேர்க்க தொடர் சுற்றுப்பயணத்தை மேற்கொள்வார்.

இது தந்தை பெரியாரின் பிரச்சாரமுறை. அவ்வாறுதான் 1979 இல் வருமான வரம்பாணைக்கு எதிராகவும், 1980களில், ஈழத்தமிழர் பிரச்சனைக்
காகவும், நுழைவுத்தேர்வுக்கு எதிராகவும், வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டின் நிலையை விளக்கித் தனித்தனி பயணங்களை மேற்கொண்டதுடன், மண்டல் குழு அறிக்கை அமலாக்கத்திற்கு சமூக நீதிப் பெரும் பயணமும் மேற்கொண்டார்.

1990களில் பாபர் மசூதி இடிப்பையொட்டி மதவெறி மாய்ப்போம், மனிதநேயம் காப்போம் பயணத்தையும், 69% இட ஒதுக்கீட்டை காக்க சமூகநீதிக்கான இரண்டாம் பயணத்தையும், ஜாதிக்கலவரங்களைத் தொடர்ந்து ஜாதி ஒழிப்பு தொடர் பயணங்களையும், மதவாத கண்டன மாநாடுகளையும் நடத்தினார்.

2000ஆம் ஆண்டுகளில் தமிழ் விழிப்புணர்வுக்கான எழுச்சிப் பயணம், விழிப்புணர்வு வெளிச்சக் கூட்டங்கள், அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான பிரச்சாரப் பயணம், எனத் தொடர்ந்து பயணங்களை மேற்கொண்டு ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று வெவ்வேறு மாவட்டங்களில் கூட்டங்களை நடத்தி உரையாற்றினார்.

அண்மையில் நீட் தேர்வை எதிர்த்தும், புதிய கல்விக் கொள்கையை எதிர்த்தும் நான்கு தொடர் பயணங்களை மேற்கொண்டு முடித்து மீண்டும் ஒரு பயணத்தைத் தொடங்கிவிட்டார்.

இது எதற்கான பயணம்?

இந்திய ஒன்றியத்தின் பிரதமர் நரேந்திரதாஸ் தாமோதர் மோடி அவர்கள் ஆகஸ்ட் 15, 2023 சுதந்திர தினத்தன்று வழக்கம்போல் ஓர் அதிர்ச்சி தரும் திட்டத்தை அறிவித்தார்.

அதுதான் “பிரதான் மந்திரி விஸ்வகர்ம யோஜனா”,

மோடி தலைமையிலான இந்த அரசின் திட்டங்கள் அனைத்தும் மிகவும் நுட்பமாக வடிவமைக்கப்பட்டவையாக உள்ளன.அவை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கோட்பாடுகளை நோக்கி நாட்டையும் மக்களையும் நகர்த்தும் இலக்கைக் கொண்டவையாக இருக்கும். ஸநாதன பார்ப்பனிய
வருண தருமத்தை மீண்டும் இந்நாட்டில் கொண்டுவருவதற்கான அடிப்படைகளை மிக நேரடியாகச் செயல்படுத்தும் வாய்ப்பாகவே அவை உருவாக்கப்படுகின்றன. அப்படியொரு ஸநாதன வருண தருமத்தைச் சட்டபூர்வமாக்கும் முயற்சிதான் இந்த விஸ்வகர்மா திட்டம். பொதுவாக
இவர்கள் தேர்ந்தெடுக்கும் பெயர்கள் அனைத்தும் சமஸ்கிருதம், பிராமண ஸநாதன தர்மம், அதன் புராணங்கள் இவற்றை அடிப்படையாகக் கொண்டவைதான். அதில் ஒன்று தான் இந்த ‘விஸ்வகர்மா’திட்டம்.

இப்பெயர் ஒரு குறிப்பிட்ட ஜாதியையும், இந்தப் பிரபஞ்சத்தைத் தொழில்ரீதியாகக் கட்டமைத்ததாக கற்பிக்கப்படும் கடவுளையும் குறிப்பது. குறிப்பாக, ‘விஸ்வகர்மா ஜெயந்தி’ மற்றும் பிரதமர் மோடி அவர்களின் பிறந்தநாள் அன்று இத்திட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
“விஸ்வகர்மா யோஜனா” – திட்டம் 18 வகை ஜாதிகளை அடையாளம் காட்டி, அவர்களின் பரம்பரைத் தொழிலுக்கு ஊட்டச் சத்து ஊட்ட ரூ.13 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடாம். பாசிச பா.ஜ.க. ஒன்றிய ஆட்சியில் 18 வயது முதல் உள்ளவர்கள் – பரம்பரை ஜாதித் தொழில் செய்யும் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் —-மட்டுமே விண்ணப்பிக்கலாமாம் !

முதற்கட்டமாக, 18 தொழிலாளர்கள் இத்திட்டத்தின் கீழ்வரும் என்கிறார்கள். (வீ) தச்சுத் தொழிலாளி (சுதர்); (வீவீ) படகு தயாரிப்பாளர்; (வீவீவீ) கவசம் செய்பவர்; (வீஸ்) கொல்லர் (லோஹர்); (ஸ்) சுத்தியல் மற்றும் கருவி கிட் தயாரிப்பவர்; (ஸ்வீ) பூட்டு தொழிலாளி; (ஸ்வீவீ) பொற் கொல்லர் (சோனார்); (ஸ்வீவீவீ) பானை வனைபவர் (கும்ஹார்); (வீஜ்) சிற்பி (மூர்த்திகர், கல் செதுக்கியவர்), கல் உடைப்பவர்; (ஜ்) காலணி தயாரிப்பவர் (சார்ம்கர்)/ ஷூஸ்மித் / காலணிக் கைவினைஞர்; (ஜ்வீ) கொத்தனார் (ராஜ்மிஸ்திரி); (ஜ்வீவீ) கூடை / பாய் / துடைப்பம் தயாரிப்பவர் / தேங்காய் நாரில் கயிறு திரிப்பவர்; (ஜ்வீவீவீ) பொம்மை & விளையாட்டுப் பொருட்கள் தயாரிப்பாளர் (பாரம்பரியம்); (ஜ்வீஸ்) முடி ஒப்பனையாளர் (பார்பர், நாய்); (ஜ்ஸ்) மாலை தயாரிப்பாளர் (மலக்கார்); (ஜ்ஸ்வீ) சலவைத் தொழிலாளி (தோபி); (ஜ்ஸ்வீவீ) தையல்காரர் (டார்சி); மற்றும் (ஜ்ஸ்வீவீவீ) மீன்பிடி வலை தயாரிப்பாளர். இவை சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன. அவர்கள்
வெளியிட்டுள்ள ஆவணத்தில் ஒவ்வொரு தொழிலுக்கும் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.

குறிப்பாக, ஆவணம் ஒவ்வொரு தொழிலுக்கும் அதன் ஜாதியைப் பட்டியலில் தந்துள்ளதே இதன் உள்நோக்கத்தை வெட்டவெளிச்சமாக்குகிறது. இந்த அட்டவணை தனிமனிதர்களின் தொழிலை அடிப்படையாகக் கொண்டிருந்தால்கூட பிரச்சினையில்லை. தொழிலாளர்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அதாவது ஒரு குறிப்பிட்ட தொழிலைச் செய்யும் ஜாதியை அவர்களது குடும்பம், குரு-பரம்பரை அமைப்பை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதெல்லாம் மிகவும் நாகரிகமான வார்த்தைகள். உண்மையில் ஸநாதன வருண தர்மம் கூறும் தொழில்கள் பிறப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இதுதான் இத்தகைய திட்டங்களின் நோக்கமும்கூட.

இந்த முயற்சிகளை இப்போது மட்டுமல்ல; பார்ப்பனர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும் போதல்லாம் செய்வார்கள்.

1952-1954இல் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த ஆச்சாரியார் (ராஜாஜி) கொண்டு வந்த குலக் கல்வியின் மறுபதிப்புதான் இந்தத் திட்டம் என்பதை மறவாதீர்! ராஜாஜியின் குலக்கல்வித் திட்டப்படி தொடக்கப் பள்ளி மாணவர்கள் படிக்கும் கால அளவை 3 மணி நேரமாகக் குறைப்பது என்றும், மீதி நேரங்களில் அவரவர் குலத்தொழிலை, தந்தையிடம் வீட்டில் கற்றுக் கொள்ளலாம் என்றும், பெண் பிள்ளைகள் தயாரிடம் வீட்டுப் பணிகள் (சமையல், துப்புரவு, துணி துவைத்தல் உள்ளிட்டவை) கற்றுக் கொள்ளலாம் என்றார்கள். அதற்கு பெயரை தொழிற்கல்வி, புதிய கல்வித்திடம் என்று கவர்ச்சியாக பெயர் வைத்தார். அதாவது வேறு ஒன்றுமில்லை, பரம்பரைத் தொழிலைக் கற்றுக்கொள், படிக்காதே என்பதையே அறிவித்தார்கள். ஆனால் அதனை புரிந்துதான் பெரியார் அந்த திட்டத்திற்கு குலக்கல்வித் திட்டம் என்று பெயர் வைத்தார்.

பெரியார் பெரிய அளவில் போராட்டத்தை அறிவித்து, அதனால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு அது கைவிடப்பட்டது. அதன்பின் ராஜாஜி பதவி விலகினார், காமராஜர் ஆட்சிக்கு வந்து அத்திட்டத்தைக் கைவிட்டார் என்பது வரலாறு.
எதிர்த்து வரும் கருத்துக்களை வெளியிடக்கூட ஒரு பரவலான ஊடகம் அற்ற நிலையை உருவாக்கி உள்ளது ஒன்றிய பாசிச அரசு. அப்படியே யாராவது எதிர்த்தால், அவர்களை ‘விஸ்வகர்மா’க்கள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் எதிரிகள் என்று அனைத்து
ஊடகங்களும் பாஜக கட்சியினரும் சித்திரித்து ஒரு பெரும் எதிர்ப் பிரச்சாரத்தைச் செய்வார்கள்.

இத்திட்டத்தில் தெளிவாக ஜாதிய அடிப்படையில் ஆட்களைத் தேர்வு செய்து, அவர்களுக்குக் கடனுதவி வழங்குகிறது. அதன்மூலம், படிக்கச்செல்லாமல் குலத் தொழிலில் ஈடுபடும் ஆசையைத் தூண்டுகிறது. மற்றொரு புறம், ஜாதிகளுக்கு இடையிலான பகைமையை வளர்த்து அதனை வாக்குகளாக மாற்றத் திட்டமிடுகிறது.

அந்தத் திட்டத்தை ‘பிளிட்ஸ்’ போன்ற சில பத்திரிகைகள் எதிர்த்தாலும், பெரும்பாலான பார்ப்பனப் பத்திரிகைகள் புகழ்ந்து எழுதின.
அதைப் போலவே இன்றைய மோடியின் இந்த மோசடித் திட்டத்தை தினமலரும் துக்ளக்கும் இன்னும் பிற பார்ப்பன ஊடகங்களும் இது ஏதோ தொழிற்புரட்சி போலவும், வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பது போலவும் புகழப்படுகின்றன.

பார்ப்பனர்கள் சுயதொழில் உபதேசம் எல்லாம் நமக்குச் செய்வார்கள். ஆனால், வெளிநாடுகளில் சுயதொழிலோ அல்லது பெரிய நிறுவனங்களில் பெரிய பதவியிலோ இருக்கும் பார்ப்பவர்களை இங்கே வந்து சிவில் சர்வீஸ் எழுதி பணிக்குச் செல்ல அறிவுறுத்துவார்கள்.

பொதுவாக இவ்வாறு பார்ப்பனர்கள் அறிமுகப்படுத்தும் திட்டங்கள் பார்ப்பதற்கு பளபளப்பை தரும்.அதனுள் விஷம் இருக்கும். அது போலவேதான் இந்தத் திட்டமும்.
ஆனால், இதன் உண்மையான நோக்கம் என்ன?

கைவினைஞர்கள் தங்கள் பாரம்பரியத் தொழிலை விட்டு வெளியேறி படித்து முன்னேறி நகரம் நோக்கி நகரும் சூழலில், இத்திட்டம் கைவினைஞர்கள் குடும்பங்கள் படித்து முன்னேறாமல் வேறு தொழில்களுக்கும் போகாமல் இருப்பதற்கான ஒரு திட்டமாகவே உள்ளது.

இதனை விளக்கித்தான் தமிழர் தலைவர் இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார். ♦