27.3.2022 முதல் 11.4.2022 வரை
27.3.22 உ.பி.யில் அனைத்து மதரஸாக்களிலும் கட்டாயம் தேசிய கீதம் பாட உத்தரவு.
27.3.22 உ.பி.யில் கணவர் கண்முன்னே இளம்பெண் கூட்டு வன்புணர்வு.
28.3.22 எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத தடை – கருநாடக மாநில கல்வித்துறை அமைச்சர்.
28.3.22 ஒன்றிய அரசைக் கண்டித்து நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் 2 நாள் பொது வேலை நிறுத்தம்.
29.3.22 சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக மாலா, சவுந்தர் பதவியேற்பு; நீதிபதிகள் எண்ணிக்கை
61 ஆக உயர்வு.
29.3.22 மதம், மொழி சார்ந்து சிறுபான்மை சமூகமாக வகைப்படுத்தலாம் – ஒன்றிய அரசு உச்சநீதி மன்றத்தில் பதில்.
29.3.22 இந்தியாவிடமிருந்து மீண்டும் ரூ.7,500 கோடி கடன் கேட்கிறது இலங்கை.
30.3.22 இந்தியாவுடன் இலங்கை அரசு ஒப்பந்தம் – சீன நிறுவனத்துக்கு வழங்கிய பணிகளை ரத்து செய்தது.
31.3.22 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் அம்பேத்கர் படத்தை வைக்கலாம் – உச்சநீதிமன்றம் உத்தரவு.
31.3.22 ஹிஜாப் அணிந்து மாணவிகள் பரீட்சை எழுத அனுமதித்த தேர்வு கண்காணிப்பாளர்கள் 8 பேர் இடை நீக்கம் – கருநாடக அரசு நடவடிக்கை.
31.3.22 ஹலால் உணவு ஒரு வகை ‘பொருளாதார ஜிகாத்’ – தேசிய செயலாளர் சி.டி.ரவி.
1.4.22 வன்னியருக்கான 10.5% உள்ஒதுக்கீடு செல்லாது – உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
1.4.22 நீட் தேர்வு, 14 கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதி – முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்.
1.4.22 கோயில் பராமரிப்பை இந்து அமைப்புகளிடம் வழங்க வேண்டும் – விஷ்வ இந்து பரிஷத் வலியுறுத்தல்.
2.4.22 கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை அதிபர் வீட்டின் முன்பு நள்ளிரவில் போராட்டம்.
2.4.22 மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ஆளுநர்கள் மதிக்க வேண்டும் – நீதிபதி சதாசிவம்.
2.4.22 எஸ்.சி., எஸ்.டி. பதவி உயர்வுக்கான இடஒதுக்கீட்டை நீக்கினால் ஊழியர்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் – மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தகவல்.
3.4.22 தில்லியில் தி.மு.க. அலுவலகம் திறப்பு.
3.4.22 பெங்களூருவின் அய்.டி. தலைமையை வகுப்பு வாதம் அழித்துவிடும். பயோகான் தலைவர் எச்சரிக்கை.
3.4.22 நல்ல தாய், தகப்பனுக்குப் பிறந்தவர்கள் பெட்ரோல் விலை பற்றிக் கேட்காதீர்கள் – பாபா ராம்தேவ்
4.4.22 இந்துப் பண்டிதர்கள் விரைவில் காஷ்மீர் திரும்புவார்கள் – ஆர்.எஸ்.எஸ். தலைவர்.
5.4.22 ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும். நாடாளுமன்றத்தில் தி.மு.க. கவன ஈர்ப்புத் தீர்மானம்.
5.4.22 மக்களவையில் குற்றவியல் அடையாள நடைமுறை மசோதா நிறைவேறியது.
6.4.22 தமிழ்நாடு கல்விக் கொள்கையை வடிவமைக்க குழு அமைப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
6.4.22 ஹிஜாப், ஹலால் எதிர்ப்பைத் தொடர்ந்து, கருநாடகாவில் மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்த எதிர்ப்பு.
7.4.22 அனைத்து மத்திய பல்கலைக் கழகங்களிலும் – பொது நுழைவுத் தேர்வு முடிவை திரும்பப் பெற வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்.
7.4.22 இந்துக் கடவுளை அவமதித்ததாகப் புகார் – அலிகார் பல்கலைக்கழகப் பேராசிரியர் சஸ்பெண்ட்.
7.4.22 போர்ப்ஸ் இதழின் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 11ஆம் இடம் முகேஷ் அம்பானி, 12ஆம் இடம் கவுதம் அதானி.
8.4.22 அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
8.4.22 இலங்கைத் தமிழர்களுக்கு உதவ அனுமதியுங்கள். வெளியுறவு அமைச்சரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை.
9.4.22 ஆங்கிலத்துக்கு மாற்றாக ஹிந்தியை ஏற்க வேண்டும். – அமைச்சர் அமித் ஷா.
9.4.22 ஒற்றுமைக்கு உதவாது – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
9.4.22 பெண் பத்திரிகையாளர்கள் அவமதிப்பு விவகாரம் – நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் எஸ்.வி.சேகர்.
9.4.22 முல்லைப் பெரியாறு: மேற்பார்வைக் குழுவுக்கு அதிகாரம் – உச்சநீதிமன்றம் உத்தரவு.
10.4.22 இம்ரான்கான் அரசு கவிழ்ந்தது – நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி.
10.4.22 மாநிலங்களை ஒருங்கிணைத்துக் குழு – கேரளா மார்க்சிஸ்ட் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.
11.4.22 இந்தியா என்பது ஹிந்தி பேசும் மாநிலங்கள் மட்டுமல்ல – முதல்வர் மு.க.ஸ்டாலின்.
11.4.22 ஹிந்தி திணிப்பு: வடமாநிலங்களில் எதிர்ப்பு.
11.4.22 பிரதமர் மகிந்த ராஜபக்சேவை நீக்க வேண்டும் – இலங்கை அதிபரிடம் 42 எம்.பி.க்கள் வலியுறுத்தல்.
தொகுப்பு: சந்தோஷ்