இவ்வுடன்படிக்கை அய்.நா. பொதுச்சபையில் 21.12.1965 அன்று நிறைவேற்றப்பட்டு 4.1.1969 முதல் நடைமுறைக்கு வந்தது. இதோ, உடன்படிக்கையிலிருந்து சில பகுதிகள்இவ்வுடன்படிக்கையில் சேரும்
அரசுகள்-மானிடர் அனைவரிலும் உள்ளார்ந்து அமைந்துள்ள சமத்துவம், மாண்பு ஆகிய தத்துவங்களின் அடிப்படையில் அய்.நா. அமைப்புச்சட்டம் அமைந்துள்ளது என்பதையும், உறுப்பு நாடுகள் தனித்தனியேயும் தம்முள் இணைந்தும் அய்.நா. கூட்டுறவுடன் இன, மத, பால், மொழி வேறுபாடின்றி அனைவருக்கும் மனித உரிமைகளும் அடிப்படை சுதந்திரங்களும் உண்டென்பதை உலகமே ஏற்கச் செய்வதற்கான முயற்சிகளில், அய்.நா.வின் முக்கியமான நோக்கங்களில் ஒன்றாக அந்த சாதனைக்கு தம்மையும் ஒப்புக்கொடுக்கின்றன என்பதைக் கருதிப் பார்த்தும்,-மானிடர் யாவரும் சுதந்திரமாய்ப் பிறக்கின்றனர் என்றும், மாண்பிலும் உரிமையிலும் சமமானவர்கள் என்றும் அதில் குறிப்பிடும் உரிமைகளுக்கும் சுதந்திரங்கட்கும் எவ்வித வேறுபாடுமின்றி -குறிப்பாக இன, மத, தேசிய வேறுபாடின்றி அனைவரும் பாத்தியப்பட்டவர்களென்றும் மனித உரிமைகள் பற்றிய சர்வதேசியப் பிரகடனம் முழங்குவதைக் கருதிப் பார்த்தும்,
-சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்பதையும் எவ்வித பாரபட்சம், எவ்வித பாரபட்சத்துக்கான தூண்டுதல் ஆகியவற்றுக்-கெதிராக, அனைவருக்கும் சட்டத்தின்முன் சம பாதுகாப்பு உண்டு என்பதையும் கருதிப்பார்த்தும்,
-காலனியாதிக்கம், அதனோடு தொடர்புடைய பிரித்து வைக்கும் பழக்கங்கள், பாரபட்சங்கள் ஆகியவற்றை _ அவை எங்கே எந்த உருவில் இருந்தாலும் ஐ.நா. கண்டிப்பதையும் 14.12.1960 நாளிட்ட “குடியேற்ற நாடுகளுக்கும் அவற்றின் மக்களுக்கும் விடுதலை வழங்குதல் பற்றிய பிரகடனம்’ (பொதுச் சபைத் தீர்மானம் 1514(ஜ்ஸ்) ஒப்புக்கொண்டு புனிதப் பிரகடனமாகக் கூறியபடி விரைவாகவும் நிபந்தனைகளின்றியும் அவ்வாதிக்கங்களை முடிவுகட்ட வேண்டிய அவசியத்தைக் கருதிப்பார்த்தும்,
*சகலவித இன பாரபட்சங்களையும் ஒழிப்பது பற்றிய அய்.நா. பிரகடனம்’ (பொதுச் சபைத் தீர்மானம் 1904 (ஜ்ஸ்வீவீவீ) 20.11.1963) பாரபட்சத்தை எந்த வடிவிலிருந்தாலும் உலகம் முழுவதிலிருந்து விரைவில் ஒழிக்க வேண்டிய அவசியத்தையும், மனிதப் பிறவியின் மாண்பையும் மரியாதையையும் அனைவரும் புரிந்து கொள்ளச் செய்ய வேண்டுமென்பதையும் வலியுறுத்துவதைக் கருதிப் பார்த்தும்.
-இன வேறுபாட்டின் அடிப்படையில் உயர்வு பாராட்டும் எந்தக் கொள்கை தத்துவமும் அறிவியல் பூர்வமாகப் பார்த்தால் தவறென்பதிலும், தார்மீக அடிப்படையில் கண்டனத்துக்குரியதென்பதிலும், சமூக ரீதியில் நெறியற்றதும் அபாயகரமானதுமாகும் என்பதிலும், எந்த இடத்திலும் கொள்கை-யளவிலோ நடைமுறையிலோ இன அடிப்படையிலான பாரபட்சத்துக்கு ஒரு நியாயமுமில்லை என்பதிலும் தெளிவாக இருப்பதாலும்,
-இனம், மதம், கலாச்சார வம்சாவழி காரணமாக மனிதர்களுக்குள் வித்தியாசம் பாராட்டுவது நாடுகளுக்குள் நேசமான சமாதான வாழ்வுக்கோர் தடை; அது மக்களிடையே சமாதானம், பாதுகாப்பு ஆகியவற்றைக் கெடுக்கக் கூடியது; ஒரே நாட்டுக்குள் அடுத்தடுத்து வாழ்பவர்களுக்கு இடையேகூட ஒற்றுமையை கெடுக்கக்கூடியது என்பதை வலியுறுத்தியும்,
– இனச்சுவர்கள் இருப்பது எந்த மனித சமூகத்துக்கும் எதிரானது என்பதில் தெளிவாக இருப்பதாலும்
– நிறவேற்றுமைக் கொள்கை, தனித்துவைத்தல், பிரித்தல் முதலிய இனத்திமிர் மற்றும் வெறுப்பில் பிறந்த அடிப்படையான அரசாங்கக் கொள்கைகளைக் கண்டும், உலகின் சில பகுதிகளில் இன வேற்றுமை தலையெடுப்பதன் அடையாளங்களைக் கண்டும் அதிர்ந்து போயும்,
– இனவேற்றுமைக் கொடுமையை அது எந்த உருவில், எந்த வகையில் தலையெடுத்தாலும் விரைந்தொழிப்பதற்கான அனைத்து நடவடிக்
கைகளும் மேற்கொள்ளவும் இனவெறித் தத்துவங்களையும் சகலவித கொள்கைகளையும் தடுத்து போரிடவும் அவற்றின்மூலம் இனங்களிடையே நல்லுணர்வைப் பேணி, எவ்வித இனவெறி, இனப்பாகுபாடுகளும் இல்லாத புதியதோர் உலக சமுதாயத்தை உருவாக்கவும் உறுதியாகத் தீர்மானித்தும்,
கீழ்க்கண்ட உடன்படிக்கையை ஏற்படுத்துகின்றன :
பகுதி – 1
விதி 1
1. இவ்வுடன்படிக்கையில் ‘இனப்பாகுபாடுகள்’ (ரேசியல் டிஸ்கிரிமினேஷன்) எனும் தொடர், அரசியல் _ பொருளாதார _ சமூக கலாச்சாரத்துறையிலோ, பொது வாழ்வின் வேறு எந்த ஒரு தளத்திலுமோ, மனித உரிமைகளையும் அடிப்படை சுதந்திரங்களையும் சமத்துவமாக அங்கீகரிப்பதையோ, அனுமதிப்பதையோ, அனுபவிப்பதையோ பாதிக்க அல்லது அழிக்கக்கூடிய நோக்கமோ விளைவோ கொண்ட இனம், நிறம், பிறப்பு, தேசிய வம்சாவழி, கலாச்சார வம்சாவழி என்ற எந்த அடிப்படையிலேனும் வேற்றுமைகாட்டுதல், விலக்குதல், கட்டுப்படுத்தல், சலுகை காட்டல் என அனைத்தையும் குறிக்கும்.
4. குறிப்பிட்ட இனக்குழு அல்லது கலாச்சாரக்குழு அல்லது தனிமனிதர்கள் தம் மனித உரிமைகளையும் அடிப்படை சுதந்திரங்களையும் சமத்துவ அடிப்படையில் அனுபவிப்பதையோ, அனுசரிப்பதையோ காக்க எந்த அளவு தேவையோ அந்த அளவு பாதுகாப்பதற்காக அவர்களுக்கு போதுமான முன்னேற்றம் கிடைக்கவேண்டுமென்ற ஒரே காரணத்துக்காக சிறப்பு நடவடிக்கைகள் இனப்பாகுபாடுகளாகக் கருதப்படமாட்டா. ஆனால், அத்தகைய செயல்பாடுகளின் விளைவாக வெவ்வேறு குழுக்களுக்கு வெவ்வேறு உரிமைகள் என்ற நிலை ஏற்பட்டுவிடக்கூடாது. அத்தோடு, எந்த நோக்கத்துக்காக அந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவோ அந்த நோக்கம் நிறைவேறிய பிறகு அந்நடவடிக்கைகள் தொடரக்கூடாது.
விதி 2
1. இந்த அரசுகள் இனப்பாகுபாடுகளைக் கண்டிக்கின்றன. பொருத்தமான எல்லா
வழிகளிலும், தாமதமின்றி, அப்பாகுபாடு
களை அவை எவ்வுருவில் இருந்தாலும் அழிக்கவும் அனைத்து இனங்களிடையிலும் நல்லுணர்வை வளர்க்கவும் உதவும் கொள்கை யைக் கடைப்பிடிக்க உறுதியளிக்கின்றன.
2. தேவைப்படும் போதெல்லாம் பொருளாதார சமூக கலாச்சார மற்றும் பிற தளங்களிலெல்லாம் குறிப்பிட்ட இனக் குழுக்கள் அவை சார்ந்த மக்களின் வளர்ச்சியையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வண்ணமும் அவர்களும் சமநிலையில் மனித உரிமைகளையும் அடிப்படை சுதந்திரங்களையும் முழுவதும் அனுபவிக்க உறுதி செய்யும் வகையில் தனிப்பட்ட உறுதியான நடவடிக்கைகளையும் இந்த அரசுகள் எடுக்கும். எந்த நோக்கங் களுக்காக இத்தகைய ஏற்பாடுகள் செய்யப்படுகின்றனவோ அந்நோக்கங்கள் நிறை வேறிய பின்பு சமச்சீரற்ற, அதிகமும் குறைவுமான உரிமைகளை வேறு வேறு இனங்கள் அனுபவிக்கக்கூடிய நிலை இந்நடவடிக்கைகளின் விளைவாக உருவாகாமல் பார்த்துக்கொள்ளப்படும்.
விதி 3
நிறவேற்றுமையையும் இனப்பிரித்துவைத் தலையும் இவ்வரசுகள் குறிப்பாகக் கண்டிக்-கின்றன. தமது ஆளுகைக்குட்பட்ட நிலப்-பரப்பில் இத்தகையதான அனைத்துப் பழக்கங்களையும் தடுக்கவும், தடை செய்யவும், தகர்த்தழிக்கவும் உறுதியெடுக்கின்றன.
விதி 4
ஒரு இனம் அல்லது ஒரு நிறத்தவர் ஒரு குறிப்பிட்ட வம்சாவழியினர் உலகின் மற்ற மாந்தர் அனைவரையும் விட மேலானவர்கள் என்ற கருத்தினடிப்படையிலோ கொள்கையடிப்படையிலோ இயங்கும் அமைப்புகள், அதேபோல இனவெறுப்பு அல்லது எந்த வகையிலோ பாகுபாடு ஆகியவற்றை நியாயப்படுத்தவோ பாதுகாக்கவோ முயலும் அமைப்புகள், இந்த வகைகளைச் சேர்ந்த அமைப்புகளின் பிரச்சாரம் முதலியவற்றை இவ்வரசுகள் கண்டிப்பதுடன், அத்தகைய பாகுபடுத்தும் செயல்கள், அவற்றுக்கான தூண்டுதல் ஆகியவற்றை ஒழிப்பதற்கான நேரடி நடவடிக்கைகளை விரைவாக எடுக்கவும் உறுதி எடுக்கின்றன. இதற்காக சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தின் விதிகளில் பொறிக்கப்பட்டிருக்கும் தத்துவங்களுக்கும் இந்த உடன்படிக்கையின் 5வது பிரிவில் குறிப்பிட்டுக் கூறப்பெறும் உரிமைகளையும் கருத்தில் இருத்தி கீழ்க்கண்டவை உள்பட பல நடவடிக்கைகளை அவை மேற்கொள்ளும்.
அ. இன அடிப்படையிலான மேலாதிக்க பாகுபாடுகளை அடிப்படையாகக் கொண்ட
கருத்துகளைப் பரப்புவதையும், இனப்பாகு பாடுகளையும் வன்முறைச் செயல்களையும் தூண்டுதல், வேறு கலாச்சாரத்தையோ நிறத்தையோ கொண்டவர்களையோ- குழுவினரையோ எதிர்த்து அந்த அடிப்படையில் செயல்புரிதல், இனவெறிச் செயல்களுக்கு நிதிஉதவியோ, பிற உதவியோ செய்தல் ஆகியவைகளைச் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றங்களாக அறிவித்தல்:
ஆ. இனப்பாகுபாடுகளை வளர்க்கவும் தூண்டிவிடவும் வழி செய்யும் அமைப்புகள், ஒழுங்குசெய்யப்பட்ட பிரச்சாரம் ஆகிய
வற்றை சட்டவிரோதமென்று அறிவித்து தடை செய்தலும், அத்தகைய செயல்களிலோ அமைப்புகளிலோ பங்கெடுப்பதை சட்டத்
தின்கீழ் தண்டனை பெறுதற்குரிய குற்றங்களாக ஏற்றலும்.
இ. பொது நிர்வாகமும், பொது நிறுவனங்களும், உள்ளூர் அளவிலோ தேசிய மட்டத்திலோ, அத்தகு வேறுபாடுகளை வளர்க்கவோ, தூண்டிவிடவோ அனுமதியாதிருத்தல்.
விதி 5
இரண்டாம் பிரிவில் கூறப்பெறும் கடமைகளை நிறைவேற்றும் வகையாய் இன அடிப்படையிலான பாகுபாடுகள் எந்த உருவில் வந்தாலும் அவற்றைத் தடை செய்து ஒழிக்கவும், சட்டத்தின்முன் சமத்துவம் என்ற உரிமையை, இனம், மதம், தேசிய கலாச்சார வம்சாவழி என்ற எவ்விதப் பாகுபாடுமின்றி அனைவரும் அனுபவிக்கவும் இவ்வரசுகள் உறுதியெடுத்துக் கொள்கின்றன.
விதி 7
இனப்பாகுபாடுகளுக்கு வகை செய்யும் காழ்ப்புணர்வுகளை எதிர்த்துப் போராடும் நோக்கிலும், நாடுகளுக்கிடையிலும், பல இன, பல கலாச்சாரக்குழுக்களிடையிலும் புரிதல்_ சகித்தல், நேசித்தல் ஆகியவற்றைப் பரப்பும் நோக்கிலும், அய்.நா. அமைப்புத் திட்டம் மனித உரிமைகள் பற்றிய தேசியப் பிரகடனம், சகலவிதமான இனபேதங்களையும் ஒழிப்பது பற்றிய அய்.நா. பிரகடனம். இந்த உடன்படிக்கை ஆகிய ஆவணங்களின் தத்துவங்களையும் நோக்கங்களையும் பிரச்சாரம் செய்யும் நோக்கிலும் பயனுள்ள நடவடிக்கைகளை அதிலும் குறிப்பாக கல்வி, முறைசாராக்கல்வி, கலாச்சாரம், தகவல்துறை ஆகிய தளங்களில் உடனடியாக எடுக்கவும் இவ்வரசுகள் உறுதியெடுத்துக் கொள்கின்றன.♦