ஆசிரியர் பதில்கள்

2023 ஆசிரியர் பதில்கள் மே 1-15,2023

தி.மு.க.வின் கவனத்திற்கு…

1: கே: பி.ஜே.பி. அமைச்சர்கள் கர்நாடகாவில் செய்துள்ள ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளிவருவதன் விளைவு எப்படியிருக்கும்?
                                                                                                                                                                       – வே. இரவிந்திரன், பொள்ளாச்சி.
ப : ‘எப்படி இருக்கும்’ என்று கேட்பதைவிட ‘எப்படி இருக்க வேண்டும் என்பதற்குரிய தெளிவான பதில் _ அந்த ஆட்சியை அகற்றி அந்த இடத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கொண்டு வந்து, பழைய கர்நாடக மதச்சார்பின்மையை மீண்டும் காப்பாற்றிடுவதாக அமைத்தல் நல்லது.
இதுவரை வெளிவரும் செய்திகள் மீண்டும் ‘40 பர்செண்ட’ என்று வர்ணிக்கப்பட்ட ஆட்சிக்கு மக்கள் வழியனுப்பு விழா நடத்துவார்கள் என்பதே!

 

2. கே: வி.பி.சிங் அவர்களின் சிலையென்பது திராவிட மாடல் ஆட்சியின் அடையாளமாயும் நின்று, சமூகநீதி ஒளியை என்றும் பாய்ச்சும் என்று என் உள்ளம் கணிப்பது சரியாக இருக்குமா?
                                                                                                                                                                          – கீதாவிசாலாட்சி, காஞ்சிபுரம்.
ப : உங்கள் உள்ளம் எனை உலகத்தாரின் உண்மையுள்ளம் அப்படித்தான் எண்ணும். அவர் போன்று பதவியைத் துச்சமாக்கி சமூகநீதியை எச்சமாக்கியவர் எவரே?

3. கே: பார்ப்பனர்கள் பாய்ச்சா இனி பலிக்காது என்ற உண்மையைத் தெரிந்து கொண்ட வயிற்றெரிச்சலால், வரம்புமீறி அயோக்கியத்தனமான செயல்களை பார்ப்பனர்களும் அவர்களின் ஊடகங்களும் செய்வதன்மூலம், அவர்கள் ஆதிக்கம் அழியப் போவதை அவர்களே ஒத்துக்கொள்கிறார்கள் என்று கொள்ளலாமா?
                                                                                                                                                                                               – க. தயாளன், மேலூர்

ப: கடைசி வரை அந்தப் புழுக்கள் வாலட்டும் சுபாவம் கொண்டவை.
.

4. கே: திராவிட இயக்கச் சார்புடைய சமூக ஊடகங்களையும், அதை நடத்தும் இளைஞர்களையும் இன்னும் பன்மடங்கு அதிகமாக்க உடன்செயல் திட்டம் கட்டாயத் தேவை என்பதை உணர்ந்து தி.க.வும் தி.மு.க.வும் களமிறங்குமா? தினமலங்களின் நாற்றம் ஒழிக்கப்படுமா?                                            – மணிகண்டன், சென்னை-12.
ப: தங்கள் கேள்வியை தி.மு.க.வுக்கே அர்ப்பணிக்கிறோம்.

 

5. கே: சேது சமுத்திரத்திட்டம் நிறைவேற அடுத்து நாம் செய்ய வேண்டியது என்ன?
                                                                                                                                                              – ஆர். ஜானகிராமன், நாகர்கோவில்.

ப: மக்கள் இயக்கத்தை வலுப்படுத்திட (1) பிரச்சாரம் _ தொடர் பிரச்சாரம்
(2) போராட்டம் _ சட்டமன்றம் முதல் மக்கள் மன்றம் வரை.

6. கே: ஜாதிதான் மக்களின் சமுதாய நிலைகாட்டும் அடையாளம். எனவே, சமூகநீதிக்கு அடித்தளம் ஜாதி மட்டுமே! மதம் உயர்ஜாதிக்கும் ஒடுக்கப்பட்ட ஜாதிக்கும் பொது அடையாளம். இப்புரிதல் மத்திய அரசுக்கு வேண்டாமா?                                                                                                                                                          – பாரதிராஜா, தேனி
ப : ஆர்.எஸ்.எஸ். கொள்கையை அமலாக்கவே வந்த ஆட்சியா நீங்கள் சொல்லும் கருத்தை ஏற்கும்! அதீதமான ஆசை வேண்டாம்.

 

7. கே: பட்டாசு, தீப்பெட்டி தயாரிப்பில் பல ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டிருப்பதால், அத்தொழில்களைக் காப்பாற்ற வேண்டும் என்பது சரியென்றால் ‘லாட்டரி சீட்’ ஒழிக்கப்பட்டது ஏன்? என்ற கேள்வி நியாயமானதுதானே?
                                                                                                                                                                       – பன்னீர்செல்வம், பண்ருட்டி
ப : இரண்டிற்கும் வேறுபாடு உள்ளது. ஒன்று, உழைப்பு _ தொழிலாளர் பிரச்சனை; மற்றொன்று, அப்படியல்ல பல நேரங்கள் மனிதர்களின் ‘வயிற்றுச் சோறு’ பிரச்சினை முக்கியமல்லவா?

 

8. கே: அய்ந்து ஆட்களும் ஓர் ஏடும் தமிழ்நாட்டைப் பிடித்துள்ள பிணிகள் என்று கணித்துள்ளேன். ஒப்புக்கொள்கிறீர்களா?                                                                                                                 – பி. வெங்கட்ராமன், திருச்சி
ப: அய்ந்து ஆட்களா? யார் என்று புரியும்படி கேட்டிருக்கலாமா? பெயர்களைக் கூறிடுதில் என்ன தயக்கம்?