Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பட்டுக்கோட்டை அழகிரி 20.3.1900 – 28.3.1949

‘‘அழகிரிசாமி எனக்கு 30 ஆண்டு ஈண்பரும் என்னை மனப்பூர்வமாய் நிபந்தனை இல்லாமல் பின்பற்றி வருகிற ஒரு கூட்டுப் பணியாளருமாவார். இந்த 30 ஆண்டு காலத்தில் எனது கொள்கையினும் திட்டத்திலும் எவ்வித ஆலோசனையும் தயக்கமும் கொள்ளாமல் நம்பிக்கை வைத்து அவைகளுக்கு ஆக தொண்டாற்றி வந்தவர். என் விஷயத்தில் மறந்தும் புறங்கூறாமல் இருந்தது மாத்திரமல்லாமல் புறங் கூறுகிறவர்கள் யாராயிருந்தாலும் ஒளிவு மறைவில்லாமல் கண்டித்து விடுவார். திடீர் என்று நான் புகுத்தும் கொள்கையையும், போடும் திட்டங்களையும் சிறிதும் யோசனை இன்றி ஒப்புக்கொண்டு, அவைகளை எப்படிப்பட்ட அறிவாளிகள், குயுக்திக்காரர்கள் வாதக்கூட்டத்திலும் எதிர்ப்பிலும் மெய்ப்பித்து வெற்றி காணுவார்.

– தந்தை பெரியார்
‘விடுதலை’ 30.3.1949