பெண்ணால் முடியும்

2023 பெண்ணால் முடியும் ஜனவரி 16-31 ,2023

வனப் பகுதியில் போர் புரியும் ‘கோப்ரா’
ஜங்கிள் வாரியஸ் இரும்புப் பெண்!

‘மத்திய ரிசர்வ் போலீஸ் ஃபோர்ஸ்’(CRPF) அமைப்பின் ஒரு பிரிவுதான் “கோப்ரா’’ (Commando Battalion for Resolute Action) Cobra என அழைக்கப்படுகிறது. இந்தப் பிரிவு, வனப் பகுதிகளில் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்
காகவே உருவாக்கப்பட்ட கொரில்லா அமைப்பு
ஆகும்.
மாவோ தீவிரவாதிகளை எதிர்த்துப் போரிடுவதுதான் இப்பிரிவின் சிறப்பு ஆகும். இப்பிரிவில் பணிபுரியும் வீரர்கள் ‘ஜங்கிள் வாரியர்ஸ்(Jungle warriors) என அழைக்கப்படுகிறார்கள். இப்பிரிவில் பணியாற்றும் இளம் வயதுப் பெண் “உஷாகிரண்’’தான்.
இவர் முதலில் சி.ஆர்.பி.எஃப் அமைப்பின் ஒரு பிரிவான “232 மஹினா பட்டாலியன்’’ (232 Mahila Battalion) என்பதில்தான் 2014ஆம் ஆண்டு சேர்ந்தார். வடகிழக்கு மாநிலத்தில் இயங்கும் ஆண்களுக்கான பிரிவில் சேர்ந்து பணியாற்றுவது இவரின் விருப்பமாக இருந்துள்ளது.
உஷாகிரண் ஒரு தடகள வீரர் ஆவார்.

ட்ரிப்பிள் ஜம்ப் போட்டியில் டெல்லி
யின் சார்பில் தேசிய அளவில் கலந்துகொண்டி
ருக்கிறார். நக்சல் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பஸ்டாரில் தற்போது இவர் பணிபுரிகின்றார்.
‘ஆண் காவலர்கள் என்றாலே பெண்-களுக்குப் பயமிருக்கிறது. ஆனால் என்னிடம் உரையாடும்போது அந்தப் பயம் அவர்களுக்கு இருப்பதில்லை’ என்ற உஷாவை இவரது ஊர்க்காரர்கள் “பெண் சிங்கம்’’ என்று அழைக்கின்றனர். வேதியியல் பட்டதாரியான இவர், இந்தச் சவாலான பணிக்கு வருவார் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
டெல்லிக்குத் தென்மேற்கிலிருக்கும் குருக்ராம் பகுதியைச் சேர்ந்த இவரின் தாத்தாவும் தந்தையும் காவல்துறையில் (CRPF) பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். இவர்களின் ஆர்வத்தாலும் ஊக்கத்தாலும் காவல்துறையில் சேர ஆர்வம் வந்துள்ளது.
“டெல்லியில் அணிவகுப்புகள் நடைபெறும் ராஜ்பத் பகுதிக்கு ஆண்டுதோறும் குடியரசு விழா அன்று உஷாவை அவரின் தந்தை அழைத்துச் செல்வாராம் அங்கே வீரர்களின் வீரமிக்க அணிவகுப்பு உஷாவை மிகவும் ஈர்த்துள்ளது.

“கோப்ரா கமாண்டோ ஆவதுதான் எனது திட்டவட்டமான தேர்வாக இருந்தது காதர்பூர் குருக்ராம் அகாடமியில் நான் சி.ஆர்.பி.எஃப் பயிற்சி பெறும்போதே என்னுள் இந்த லட்சியமிருந்தது, ஆனால் இது முற்றிலும் ஆண்களுக்கான பிரிவாகவே இருந்தது. என்னுடைய பயிற்சி முடிந்ததும் நல்வாய்ப்பாக எனக்கு சட்டீஸ்கர் மாநிலத்தில் பஸ்டார் பகுதியிலேயே பணிபுரிய வாய்ப்பு வந்தது. அங்கே வேலை பார்க்கும்போது சி.ஆர்.பி.எஃப் பிரிவின் செயல்பாடுகளை நுணுக்கும் வாய்ப்புக் கிடைத்தது. கோப்ரா பிரிவின் பணிகள் என்னென்ன என்பதை நேரடியாகத் தெரிந்துகொள்ள வாய்ப்புக் கிடைத்தது.
உடலையும் மனதையும் மிக வலுவாக்கும் பயிற்சி அது. ஆண்களுக்காகவே வடிவமைக்கப்
பட்ட அந்தப் பயிற்சியின்போது, பெண் என்பதற்
காகத் எந்தச் சலுகையும் எனக்குத் தரப்பட
வில்லை. தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுப்பது, நக்ஸல் தீவிரவாதிகளுக்கு எதிரான ரெய்டுகளில் ஈடுபடுவது மற்றும் கிராமப்புறங்களில் சட்ட அமலாக்கம் ஆகியவையே தனது தினசரிப் பணிகள் ஆகும் என்று கூறும் இவர், ஆயுதமேந்திய சீருடைப் பணியில் சேர விரும்பும் பழங்குடியினத்தைச் சேர்ந்த இளம் தலைமுறைகளுக்கு முன்மாதிரியாக விளங்குகிறார். மேலும் தனது ஓய்வு நேரங்களில், மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கு வகுப்பு எடுப்பதில் ஈடுபட்டு வருகின்றார் இந்த வீரப்பெண் _ இரும்புப்பெண்!