பாகிஸ்தான் மேனாள் பிரதமர் பெனாசிர் கொலையில் போதுமான பாதுகாப்பு அளிக்கத் தவறியதற்காக அப்போதைய அதிபர் முஷாரப்பின் சொத்துகள், வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
ஜப்பான் நாட்டின் பிரதமர் நவோட்டா கான் ராஜினாமா செய்ததையடுத்து, நிதியமைச்சர் யோஷிஹிக்கோ நோடா புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஞூ ஜெர்மனியின் வெஸ்ட் பாலன்ஸ்டேடி யான் என்ற கால்பந்து ஸ்டேடியத்தில் நடைபெற்ற கால்பந்துப் போட்டிக்கு முன் நடைபெற்ற அணிவகுப்பில், இலங்கையின் தேசியக் கொடிக்கு இணையாக தமிழ் ஈழத் தேசியக் கொடியும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாகிம் அன்சாரி, சபாபுதீன் அகமது ஆகியோர் விடுதலை செய்யப்பட் டதை எதிர்த்து மராட்டிய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
சுரங்க ஊழல் புகாரில் சிக்கிய கருநாடக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. சிறீராமுலு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தொலைநோக்கியைப் பயன்படுத்தி வானில் உள்ள கிரகங்களை ஆய்வு செய்யும் பயிற்சியினை மேற்கொண்ட இந்திய மாணவர்கள் ட்ரோஜான் எனப்படும் புதிய கிரகங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியாது என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேற்குவங்க மாநிலத்தின் பெயரை பஷ்சிம்பங்கா என்று மாற்றுவதற்கான தீர்மானம் அம்மாநில சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியுள்ளது.
பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி ஜூபைர் அகமது (24) அமெரிக்கப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மேற்குத் தொகுதி இடைத்தேர்தல் அக்டோபர் 13ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.