நாத்திக அறிவியலாளர்

டிசம்பர் 16-31- 2013

ஸ்டீவன் வெய்ன்பெர்க் – (STEVEN WEINBERG)

ஸ்டீவன் வெய்ன்பெர்க் அமெரிக்காவைச் சேர்ந்த இயற்பியல் அறிவியலாளர். ஆரம்பநிலைத் துகள்களின் பலம் குறைந்த சக்திக்கும், மின்காந்த அலைகளுக்கும் இடையே ஏற்படும் செயல் விளைவுகள், அவற்றை ஒன்றுபடுத்துவது பற்றிய  ஆராய்ச்சிக்காக நோபெல் பரிசு பெற்றார்.

வெய்ன்பெர்க்கின் ஆரம்ப நிலைத் துகள்களும் வான்வெளியியலும் பற்றிய ஆராய்ச்சி அவருக்குப் பல்வேறு விதமான பரிசுகளையும் 1979இல் இயற்பியலுக்கான நோபெல் பரிசையும் 1991இல் அறிவியலுக்கான தேசிய மெடலையும் பெற்றுக் கொடுத்தது.

2004இல் அவர் அமெரிக்கன் பிலாசபிகல் சொசைட்டியின் பெஞ்சமின் ஃபிராங்ளின் மெடலையும் பெற்றார். அத்துடன் கொடுக்கப்பட்ட பாராட்டுப் பத்திரத்தில், இன்று உலகத்தில் வாழும் சித்தாந்த இயற்பியலாளர்களில் தலைசிறந்தவராகப் பலரால் கருதப்படுகிறவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவர், அமெரிக்க தேசிய அறிவியல் கழகத்திற்கும், பிரிட்டனின் ராயல் சொசைட்டிக்கும் அமெரிக்கத் தத்துவக் கழகத்திற்கும், அமெரிக்க கலை மற்றும் அறிவியல் கழகத்திற்கும் தேர்வு செய்யப் பட்டிருக்கிறார்.

ஸ்டீவன் வெய்ன் பெர்க், 1933 மே 3ஆம் நாள், நியூயார்க் நகரத்தில் பிறந்தார். அவரது பெற்றோர்கள், ப்ஃரடெரிக், மற்றும் ஈவா வெயின்பெர்க்கும், அமெரிக்காவில் குடியேறிய யூதர்கள். 1950இல் வெயின்பெர்க் அறிவியலில் தனது உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தார். 1954இல் கார்னெல் பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டம் பெற்றார். அதை முடித்த பிறகு அவர், கோப்பன்ஹேமில் உள்ள நீல்ஸ்போர் கல்விக் கழகத்தில் சேர்ந்து, முதுநிலைப் பட்டப் படிப்பிற்கும், ஆராய்ச்சிக்கும் தன்னை ஆட்படுத்திக் கொண்டார். ஓராண்டிற்குப் பிறகு வெயின்பெர்க் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்திற்குத் திரும்ப வந்து, சாம் டெர்ரிமேன்  என்ற பேராசிரியரின் கீழ் பயின்று 1957இல் இயற்பியலில் முனைவர் ஆராய்ச்சிப் பட்டம் பெற்றார். வெயின்பெர்க் ஒரு நாத்திகர்.

தனது முனைவர் பட்டத்தைப் பெற்ற பிறகு, 1957_59இல் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட மேல் ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்தார்.

1959இல் பெர்க்கெலியில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்திலும் பணியாற்றி, 1960_1966இல் அவர் ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்றார். 1968இல் வெயின் பெர்க்கெலியை விட்டு ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகப் பதவியேற்றார். 1967இல் அவர் எம்.அய்.டி. கல்வி நிறுவனத்தின் கவுரவப் (விசிட்டிங்) பேராசிரியராகவும் இருந்துள்ளார். 1967ஆம் ஆண்டிற்குப் பிறகு, முழு தரமான மாதிரியில், ஆரம்பநிலைத் துகள்கள் பற்றிய கருத்து பலரால் விரிவுபடுத்தப்பட்டது. 1973இல் ஹிக்ஸ் போசன் என்பவரின் ஆய்வுகள் அந்த மாதிரிகளின் அடிப்படைகளைக் கொண்டிருக்கவில்லை. 1973இல் வெய்ன்பெர்க் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் இயற்பியலில் ஹிக்கின்ஸ் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.

1979இல் நடுநிலை விசை பற்றிய கண்டுபிடிப்பிற்கு ஆறாண்டுகளுக்குப் பிறகு அதாவது இசட் பாசன் இருப்பதாகக் கருதப்பட்ட கண்டுபிடிப்பை ஒட்டி, இசட் பாசானை மின் காந்தத்துடன் இணைத்து ஏற்படுத்தும் விளைவுகளுக்கு ஏற்படும் சம இணை மறுப்புகள் பற்றி எதிர்நோக்கிய நிலையில் அமைந்தது.

வெய்ன்பெர்க், இயற்பியலுக்காக, ஷெல்டன் கிளாஸ்ஸோ, அப்துஸ் சலாம் ஆகியோருடன் இணைந்து நோபெல் பரிசு பெற்றார்.

1982இல் ஆஸ்டினிலிருந்த டெக்சாஸ் பல்கலைக்கழகத்தை ஜேக் எஸ். ஜோசி _ வெல்ச் அறக்கட்டளையின் அறிவியலின் ரீஜென்ட்ஸ் இருக்கைக்கு (சிலீணீவீக்ஷீ) இடம் மாறினார். அங்கே இயற்பியல் இலாகாவின் கொள்கைக் குழுவைக் கண்டறிந்தார்.

அவரது அறிவியல் ஆய்வு தவிர, ஸ்டீவன் வெய்ன்பெர்க் அறிவியலுக்கான ஒரு தகவல் தொடர்பாளராகவும் இருந்தார்.

அமெரிக்க சட்டசபையின் முன் பெரும் மோதல்களை உண்டாக்கும் சூப்பர் கடத்திகள்பற்றி விளக்கம் அளித்தார். நியூயார்க் புத்தக விமரிசனம் என்ற இதழில் கட்டுரைகள் எழுதினார். மற்றும் அறிவியலின் பரந்த பொருள் பற்றி விரிவுரைகள் கொடுத்தார். பொதுமக்களுக்காக   அறிவியல் பற்றி அவர் எழுதிய புத்தகங்கள் வழக்கமாக, பாரம்பரியமாக அறிவியல், நாத்திகம் பற்றிய வரலாறும் தத்துவமும் கொண்ட கலவையாக, அறிவியலைப் பிரபலப்படுத்துவதற்கான தனித்தன்மை கொண்டவையாய் இருக்கும்.

வெய்ன்பெர்க், அறிவியல் போர் என்று சொல்லப்பட்டவற்றில் முக்கியமான ஒரு பங்களிப்பாளராக இருந்தார். அவர் அறிவியல் அறிவு பற்றியும் அறிவியல் பற்றிய கடினமான உண்மைத்திறன் பற்றியுமானவற்றில் வாதிடுவார். வாஷிங்டன் நகரில் 1999இல் அவர் பேச்சில் தெரிவித்த மதம் பற்றிய அவரது கருத்துகள்:

மனித கவுரவத்திற்கு மதம் ஒரு அவமானம். மதம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நீங்கள் நல்லது செய்கிற நல்ல மனிதர்களையும் தீங்கு செய்கிற தீமையாளர்களையும் கொண்டிருக்கிறீர்கள். நல்ல மனிதர்கள் தீமைகளைச் செய்ய மதம் வழி செய்கிறது. அவர் மேலும், எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக உலகம் தோன்றினாலும்கூட அதிகமாக அவை குறியற்றதாக இருப்பதாகத் தோன்றுகிறது என்றார்.

2006 நவம்பரில் நடந்த நம்பிக்கைக்கு அப்பால் என்ற சொல்லாடல் அரங்கத்தில் அவர் பங்கு கொண்டு உரையாற்றினார்.

அவர் லூயிஸ் என்ற பெண்ணை மணந்து எலிசபெத் என்ற மகளைப் பெற்றார்.

– தமிழில்: ஆர்.ராமதாஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *