Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

ராஜராஜன் மேல் மரியாதை இல்லை!

கேள்வி: தஞ்சாவூரில் பத்து ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறீர்கள். பெரிய கோவிலுக்குப் போயிருக்கிறீர்களா?

பதில்: பெரிய கோவிலின் புல்வெளியில் இருக்கும் புல் ஒவ்வொன்றும் என்னை அறியும். ஆனால், ராஜராஜன் மேல் மட்டுமல்ல, எந்த மன்னன் மேலும் எனக்கு மரியாதை இல்லை. இன்னொரு நாட்டின் மேல் படையெடுத்து, அந்நாட்டு மக்களின் அமைதியைக் கெடுத்து, பெண்களை அடிமையாக்கி, பொருள்களைக் கொள்ளையடித்து வாழ்ந்த மன்னர்கள் என்பவர்கள் கிரிமினல்கள். அவர்கள் புகழப்படுவது, தவறு. பிரமாண்டமாக ஒன்றைச் செய்வது (கோவில் கட்டுவதுபோல), மக்கள் வரிப்பணம் ஊதாரித்தனமாகச் செலவழிக்கப்பட்டது மட்டுமல்ல… அது எளிமையை அழிக்கிற ஆணவச் செயல்பாடு,  ஏழ்மை, இல்லாமை, தேவைகளோடு வாழ்கிற மக்களை, இந்தப் பிரமாண்டம் அவமானப்படுத்துகிறது. தன்னைப் பிரமாண்டமாகக் கருதுவது மனிதத்தனம் அல்ல. கோவில், கலையை வளர்த்தது உண்மை. ஆனால், அது யாருக்கான கலை? கோவிலுக்குள் எல்லா ஜாதி மக்களும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்களா? யாருக்காக  அத்தனை பெரிய கட்டடம்? யார் தொழ, யார் ஆசி பெற இந்தக் கோவில்? கோவிலுக்குள் இருக்கும் இறைவன் எனக்குள் இருக்க மாட்டானா என்ன?

– பிரபஞ்சன்,

நன்றி: ஆனந்தவிகடன், 4-.12.2013