மதத்தைச் சும்மா விட்டுவிட முடியுமா?

கடவுள் இல்லை என்று நிரூபிப்பதற்காக உங்கள் நேரத்தை ஏன் செலவிடுகிறீர்கள்? மக்கள் எதை நம்புவதற்கு விரும்புகிறார்களோ அதை நம்புவதற்கு ஏன் அவர்களை அனுமதிக்கக்கூடாது? மத விஷயங்களில் தலையிடாமல் மதத்தை ஏன் தனியாக இருக்கும்படி விட்டுவிடக்கூடாது? இது போன்ற கேள்விகள் நாள்தோறும் மத நம்பிக்கையாளர்களிடமிருந்து வருகின்றன. கடவுள்  நம்பிக்கையாளர்களை தங்களின்  நம்பிக்கையினைக்  கைவிடச் செய்வது ஏன் மிகவும் முக்கியமானது என்பதற்கான காரணத்தை யாராலும் எனக்கு விளக்கிக் கூற முடியாது என்று யூ- டியூப் இணையத்தில் அண்மையில் ஒருவர் கருத்துத் […]

மேலும்....

கொலை வழக்கில் ஜோதிட சாமியார்

வக்கிர எண்ணமும், குற்றச்செயல்களின் மூலம் சொகுசு வாழ்க்கை வாழலாம் என்ற எண்ணமும் சில மனிதர்களுக்கு ஏற்படுவது பழங்கதைதான். ஆனால், அதற்கு அவர்கள் போட்டுக் கொள்ளும் முகமூடிகளாக மதமும், கடவுள் பக்தியும், ஜோதிடமும் இருப்பதுதான் இந்தியாவின் சிறப்பம்சம். வடநாடு தொடங்கி தென்னகம் வரை சாமியார்கள் செய்யும் அட்டகாசங்களும் அநியாயங்களும் தொடர்கதைகளாகி வருகின்றன. கடவுள் மூடநம்பிக்கைக்குப் பலியாகும் மக்கள் இவர்களின் பிடிக்குள் சிக்கி மானத்தையும், பொருளையும், அறிவையும் இழப்பதோடு மட்டுமல்லாமல் உயிரையும் இழப்பதுதான் கொடுமையிலும் கொடுமை. மீண்டும் இப்படிப்பட்ட ஒரு […]

மேலும்....

குடும்பத்தின் மேல் கண்ணீர்

– உவமைக் கவிஞர் சுரதா

உவமைக்கவிஞர் சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன். சுயசிந்தனையாளர்; புரட்சிக்கவிஞர் பாரதிதாசனுடன் தங்கியிருந்து பாடல் படியெடுத்தல், அச்சுப் பணி கவனித்தல் போன்ற நூல் வெளியிடுவதற்கான பணிகளை மனம் உவந்து செய்தவர். பாரதிதாசனின் இயற்பெயரான சுப்புரத்தினம் என்ற பெயரை சுப்புரத்தினதாசன் என்று வைத்துக் கொண்டார். காவியம் என்ற பெயரில் கவிதை வார இதழினையும், இலக்கியம், ஊர்வலம், விண்மீன் போன்ற பல இலக்கிய ஏடுகளையும் நடத்தியவர். 100க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதியதோடு 4 திரைப்படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார்.

மேலும்....

”அய்யர் மலையில் ஆரியம்’

பார்ப்பான்இன்னமும் பல்லக்கில்பாழும் தமிழனின்தோள்களில் அய்யர் – மலை ஏற்றம்.?! கோவிலுக்குள்அழுக்குப் பிசுக்கின்அலாதி நாற்றம்.சமாளிக்கசாம்பிராணியும்ஊதுபத்தியும்தெய்வீக மணம்.?! ஓயாமல் உச்சரிக்கப்பட்டசமக்கிருத மந்திரங்களில்ஓரிடத்தில் தவறு!உச்சரித்தவர்களுக்கு  மட்டுமேஅது புரிகிறது;அவர்களின் அசட்டுச் சிரிப்பில்நமக்கும்! ஒரு வார்த்தை கூடபுரியவில்லைபூசையில் சமக்கிருதம்…முடிந்ததும்,உணவு வருகிறது…பாழும் வயிற்றுக்குக்  கூடபுரிந்துவிடுகிறது. பக்திப்பெருக்கில்பக்தனுக்குகண்ணீர் வடிகிறது.ஓமப் புகையின் உதவியோடு? பால், தயிர், மோர்,பேரிச்சம்பழம்,எலுமிச்சைச் சாறு,சந்தனம், திராட்சைச் சாறுஇன்னும் சில… அண்டாக்களில்நிறைந்து கிடக்கிறதுகருங்கல்லின்மீது சொரியப்பட! ஈசன் கோவில் பூசையில்சமக்கிருத மந்திரம்இங்கு தமிழிலும்அர்ச்சனை செய்யப்படும்என்ற பலகையின் சாட்சியுடன். கோவிலின்  உள்பிரகாரத்தில்  ஆங்காங்கே  எடிசனின் அறிவு பளிச்சிடுகிறது.ஆகம விதிகளிலும்அறிவியலின் […]

மேலும்....