’தி வயர்’ இணைய ஏடு வெளியிட்ட செய்தி ஒன்றுக்காக ஒன்றிய அரசு அதனை முடக்கியுள்ளது கருத்துரிமையின் மீதான தாக்குதலாகும். மறைமுகமாக பல மிரட்டல்களை விடுக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, வெளிப்படையாகவும் இப்படி இணையதள முடக்கங்களையும் ஏற்படுத்துகிறது. சிலநாள்களுக்கு முன் தமிழ்நாட்டின் விகடன் ஏடு இதே போன்ற நிலைக்கு ஆளானது. எந்த நிலையிலும் பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்படக் கூடாது. ஒருபோதும் அதை ஏற்க முடியாது. (‘தி வயர்’ ஏடு ஒரு சில பகுதிகளில் மட்டும் இப்போது தெரிய ஆரம்பித்திருக்கிறது.) ஊடகங்களை மிரட்டிப் பணிய வைக்க முயற்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு நமது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
– ஆசிரியர்