11.05.1888 அன்று மண்ட் வி பகுதியில் கோவிவாடா அரங்கில், ஏழை விவசாயிகள், ஒடுக்கப்பட்ட மக்கள், பெண்கள் நிரம்பியிருந்தனர். அவர்கள் கண்களில் நன்றியும், பாசமும், மரியாதையும் பளிச்சிட்டன. 40 ஆண்டு காலமாக பூலே ஆற்றிய பணியைப் பாராட்டி, அவருக்கு நன்றியும் மரியாதையும் செலுத்தும் வகையில் “மகாத்மா” என்ற பட்டம் அவருக்கு அளிக்கப்பட்டது.
