பா.ஜ.க.வுக்கு எதிராகத் திரள்வோம்! – வி.சி.வில்வம்

“ஸநாதனம்’ நிலையானது, மாற்ற முடியாதது என்பார்கள். அறிவியலை அறவே ஏற்றுக் கொள்ளாத மதம் ஹிந்து மதம். ஆனால் நவீன அறிவியல் சாதனங்களை முழுமையாகப் பயன்படுத்துவார்கள். கைப்பேசி வழியே கடவுளைப் பிரச்சாரம் செய்வார்கள். இரண்டாயிரம் ஆண்டு பழமையே வாழ்க்கைக்குப் போதும் என்பார்கள். அதை இன்றைய அறிவியல் கண்டுபிடிப்பான ‘யூடியூப்’ வழியே பிரச்சாரம் செய்வார்கள். கிறிஸ்தவர்களையும், அவர்கள் மதத்தையும் கடுமையாகத் தாக்கிக் கொண்டே இருப்பார்கள்.‌ அதற்கு அவர்கள் கண்டுபிடித்த வாட்சப், முகநூல், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களையே பயன்படுத்துவார்கள். […]

மேலும்....

பாரீர் ! நமது பன்னீர் செல்வங்கள் ! – – வி.சி.வில்வம்

“கடவுள் இல்லை” என்கிறார் பெரியார்! எப்படி அவர் சொல்லலாம்? நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் நடுங்குகிறது. கடவுள் இல்லாமல் நாம் எப்படி உயிர் வாழ முடியும்? கடவுள் இல்லை என்று சொன்னால் நம் உயிர் போய்விடாதா? என்று கடும் பயத்தில் வாழ்ந்த மக்கள் ஒரு காலத்தில் இருந்தனர். இப்போது அந்த எண்ணம் வெகுவாகக் குறைந்து போனது. அதேபோல நீ எப்படி கடவுள் இல்லை என்று சொல்லலாம்? உன்னைப் போல நிறைய பேரைப் பார்த்துவிட்டோம், கடைசி காலத்தில் ஆன்மிகத்திற்கு வந்துதான் […]

மேலும்....

பெரியார் மீது ஏன் இவ்வளவு வன்மம்!

பெரியாரை விதவிதமாக வரைகிறார்கள்; எவ்வளவு கோணல் புத்தியுடன் முடியுமோ, அவ்வளவு வரைகிறார்கள். ஆக பெரியார் நினைப்பாகவே இருக்கிறார்கள்! சென்ற மாதம் அவரைப் பன்றியாக வரைந்தார்கள், பின்னர் பன்றி மேய்ப்பவராக வரைந்தார்கள். எப்படியாவது கேவலப்படுத்திவிட நினைக்கிறார்கள். பெரியாரின் கருத்திற்குப் பதில் சொல்லி, அவரை யாரும் வெல்லலாம்! ஆனால், அது அறிவு சார்ந்த விசயம். முதலில் அவரைப் படிக்க வேண்டும்; பின்னர் அதை மறுக்க வேறு நூல்கள் படிக்க வேண்டும்; பிறகு இரண்டையும் சிந்திக்க வேண்டும்… இதெல்லாம் நடக்கிற காரியமா? […]

மேலும்....

திராவிடர் இயக்கமும் பிரச்சார உத்திகளும்!

– வி.சி.வில்வம் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் சார்பில் “மந்திரமா? தந்திரமா? பயிற்சிப் பட்டறை” வகுப்புகள் ஜனவரி 20, 21 ஆகிய தேதிகளில், திருச்சி, கே.கே.நகரில் அமைந்துள்ள பெரியார் கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்றன . எத்தனை வடிவங்கள்! திராவிடர் இயக்கங்கள் தான், இந்த மக்களுக்குத் தேவையான உயிர் மூச்சுக் கொள்கைகளை எத்தனை, எத்தனை வடிவங்களில் நடத்துகிறது! நூறு ஆண்டுகளைக் கடந்த இந்த இயக்கம் பொதுக் கூட்டம், தெருமுனைக் கூட்டம், மாநாடு, கருத்தரங்கம், பட்டிமன்றம், நாடகம், பாடல், […]

மேலும்....

காட்டுமிராண்டி மொழி என்றவர்தான் கணினி மொழியாக்கினார்!

– வி.சி.வில்வம் “தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொல்லிவிட்டார்”, எனப் பல ஆண்டுகளாய் குதிக்கிறார்கள் போலித் தமிழ்த் தேசியவாதிகள். சமஸ்கிருதமே உயர்ந்தது என்கிறது ஒரு கூட்டம். அதற்கு இவர்கள் பதில் சொல்வதில்லை. தமிழை நீஷ பாஷை (இழிந்த மொழி) என்கிறது அக்கிரஹாரம். அதற்கும் இவர்கள் பதில் சொல்வதில்லை; உணர்ச்சியற்றுக் கிடக்கிறார்கள்! ஆனால், வளர்ச்சிப் பார்வையில், ஆய்வு நோக்கில் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றார் பெரியார்! உடனே குதிக்கிறார்கள். பெரியார் எப்படிச் சொல்லலாம் என 50 ஆண்டுகளாய்க் கதறுகிறார்கள். […]

மேலும்....