இசையறிஞர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு மியூசிக் அகாடமியின் ‘சங்கீத கலாநிதி’ விருது : பெரியார் மீது அவதூறு பரப்பும் பின்னணியில் ஜாதி, மதவாதச் ச(க்)திகள் – மஞ்சை வசந்தன்

கர்நாடக இசைத் துறையில் தனித்த இடம்பிடித்த சாதனையாளர்களுள் ஒருவரான டி.எம்.கிருஷ்ணா அவர்களுக்கு சென்னையின் புகழ்பெற்ற மியூசிக் அகாடமி அமைப்பு இவ்வாண்டுக்கான ‘சங்கீத கலாநிதி’ விருது அறிவித்துள்ளது. தன்னுடைய பாணியில் கர்நாடக இசையைச் சபாக்களைத் தாண்டி, சென்னை தெருவிழாக்களிலும், அதன் பாடுபொருள்களை சுற்றுச் சூழல் பாதுகாப் பிற்காகவும், ஜாதி – மதவாதங்களுக்கு எதிராகவும் அமைத்துக் கொண்ட டி.எம். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி வழங்கப்படுவதற்கான அறிவிப்பில் அவருடைய சமூகப் பங்களிப்பையும் குறிப்பிடுகிறது மியூசிக் அகாடமி. இசை மேதை டி.எம்.கிருஷ்ணா ஜாதி, […]

மேலும்....

அரசமைப்புச் சட்டத்தை வணங்குவோம்! மூடநம்பிக்கைகளை கைவிடுவோம்! உச்சநீதிமன்ற நீதிபதிகள் முழக்கம்! – மஞ்சை வசந்தன்

கடந்த 03.03.2024 ஞாயிறன்று புனே மாவட்ட பிம்ப்ரி சின்ச்வாட் நகரில் புதிய நீதிமன்றக் கட்டிடம் ஒன்றின் அடிக்கல் நாட்டுவிழா நடந்துள்ளது.உச்சநீதிமன்ற நீதிபதி பூஷன் ஆர் கவாய் பூமி பூஜை நடத்தி நிகழ்வைத் துவக்கி வைத்துள்ளார். மற்றொரு உச்சநீதிமன்ற நீதிபதி அபய் ஓகா உட்பட வேறு சில நீதிபதிகளும் மூத்த வழக்குரைஞர்களும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் உரையாற்றிய அபய் ஓகா கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்: “இத்தகைய விழாக்களின் போது மதம் சார்ந்த சடங்குகளை சட்டம் மற்றும் நீதித்துறை வல்லுநர்கள் […]

மேலும்....

தாயினும் சாலச் சிறந்த தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின்! – மஞ்சை வசந்தன்

தாய்ப்பாசத்திற்கு இணையில்லை என்பர். ஆனால், அதையும் விஞ்சி நிற்கிறது தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டு மக்கள்மீது கொண்டுள்ள பாசம், பற்று, அக்கறை! இது இயற்கையாய் வந்த உணர்வு. கலைஞர் குருதியில் பிறந்தவர் என்பதால், அவருக்கு இருந்த அந்த உணர்வுகள் பன்மடங்காய்ப் பெருகி, இவருக்குள் எழுச்சி கொண்டு வெளிப்படுகிறது; வினையாற்றுகிறது. இப்படிக் கூறுவது மிகையல்ல, இம்மி அளவு கூட மிகைப்படுத்தப்படாத அப்பட்டமான உண்மை. விருப்பு, வெறுப்பு இன்றி, முதல்வராய் அவர் பொறுப்பேற்ற நாள் முதல் அவரின் செயல்பாடுகளைப் […]

மேலும்....

இளைய சமுதாயமே!எச்சரிக்கை! விழிப்போடு இரு!! – மஞ்சை வசந்தன்

இளைய சமுதாயம்தான் எதிர்கால உலகைக் கட்டமைத்து அடுத்தத் தலைமுறைக்குக் கொடுக்கும் பொறுப்புடையது. இளைய சமுதாயம் என்பதில் ஆண், பெண், கற்றவர்கள், கல்லாதவர்கள் எல்லாம் அடக்கம். நூறு ஆண்டுகளுக்குமுன் 30 வயது வரையில் கூட ஏதும் அறியாதவர்களாக வாழ்ந்தனர். தீய, கெட்ட வழக்கங்கள் அப்போது அதிகம் இல்லை. பெற்றோர், ஆசிரியர்கள், பெரியவர்கள் கூறுவதை ஏற்று நடந்தனர். பாலுறவு, போதை, களவு, பொய், ஏமாற்று என்று அதிகம் இல்லாமல் அப்போதைய இளைய சமுதாயம் இருந்தது. 50 ஆண்டுகளுக்கு முன் கல்வி, […]

மேலும்....

பன்முக ஆற்றலாளர் அறிவுக்கரசு!

– மஞ்சை வசந்தன் கடலூர் முதுநகர் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரம். துறைமுக நகரம் என்பதால் ஆங்கிலர் ஆட்சிக்காலத்தில் சிறப்புற்றிருந்தது. அந்நகருக்கு இருபதாம் நூற்றாண்டில் மேலும் சில சிறப்புகள் சேர்ந்தன. தமிழர் தலைவர் என்று அழைக்கப்படும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பிறந்த ஊர் அது. எழுத்தாளர் ஜெயகாந்தன் பிறந்த ஊரும் அதுவே! கிறித்துவ மதபோதகராய் பலரும் அறிந்த தினகரனும் அங்கேதான் பிறந்தார். ஆக, மூன்று பெரும் ஆளுமைகளைப் பெற்ற கடலூர் துறைமுக நகரத்தில்தான் […]

மேலும்....