உலக மக்கள் உள்ளத்தில் என்றும் நிலைத்திருப்பார் பெரியார்!

சுயமரியாதை நாள் விழாவில் தமிழர் தலைவர் உரை  தொகுப்பு: வை.கலையரசன் “அய்யாவின் அடிச்சுவட்டில்” ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாள் மகளிர் கருத்தரங்கம்_ சுயமரியாதை நாள் குடும்பப் பெருவிழா சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நேற்று (11.12.2023) மாலை 6 மணிக்கு கழக துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி தலைமையில் தொடங்கி நடைபெற்றது. திராவிட மகளிர் பாசறை மாநிலச் செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை வரவேற்க, திராவிடர் கழக மகளிரணி மாநிலச் செயலாளர் […]

மேலும்....

குலத் தொழிலைத் திணிக்கும் மனுதர்ம யோஜனா திட்டத்தை எதிர்த்து தமிழர் தலைவரின் பரப்புரைப் பயணம்!

வை.கலையரசன் திராவிடர் கழகம் என்பது பிரச்சாரம், போராட்டம் என்னும் இரண்டு பெண்டுலங்களைக் கொண்டு இயங்கும் கடிகாரம் போன்ற இயக்கம். திராவிடர் கழகத் தலைவரின் பிரச்சார முறையானது எந்த ஒரு பிரச்சனையையும் கடைசி மனிதனுக்கு கொண்டுபோய்ச் சேர்க்கும் வலுவான ஊடகமாக தாமே மாறும் முறை. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான ஒரு சிறு நடவடிக்கையாக இருந்தாலும் உடனே அதனை விளக்கி தம் அறிக்கையை வெளியிடுவார். மக்களையும், அரசாங்கத்தையும், தலைவர்களையும் எச்சரித்து வழி நடத்துவதாய் அந்த அறிக்கை திகழும். அதைத் தொடர்ந்து […]

மேலும்....

ஹெச்.அய்.வி. பெற்றோரின் குழந்தைகளுக்கு ஒளியேற்றும் நூரி! – வை.கலையரசன்

மனிதம் மரத்துப்போய், திருநங்கைஎன்றாலே ஒருவித வெறுப்புணர்வுடன் சமூகத்தால் பார்க்கப்படும் நிலையில், மேலும் ஹெச்.அய்.வி தொற்றால் பாதிக்கப்பட்டவர் என்றால் இந்த சமூகப் புறக்கணிப்புகளை நினைக்கவும் வேண்டுமா? அப்படியான ஒருவர்தான் நூரி சலீம். ஹெச்.அய்.வி தொற்றால் பாதிக்கப்பட்ட 60க்கும் மேற்பட்ட குழந்தைகளை தான் நடத்தி வரும் இல்லத்தில் தங்க வைத்துப் படிக்க வைத்து அவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி இருக்கிறார். இந்தியாவில் முதன்முதலாக ஹெச்.அய்.வி தொற்றால் பாதிக்கப்பட்ட நபரை கண்டறிந்தவர் டாக்டர் சுனிதி சாலமன். இவர் கண்டறிந்த மூன்றாவது ஹெச்.அய்.வி தொற்று […]

மேலும்....

சளைக்காத சமூக நீதிப் போராளி சரத் யாதவ்

– வை. கலையரசன் சமூக நீதியில் மிக ஆழமான, அழுத்தமான ஈடுபாட்டைக் கொண்டு சமரசம் இல்லாமல் போராடிய சமூகநீதிப் போராளி சரத் யாதவ். மத்தியப் பிரதேசத்தில் பாபாய் என்னும் கிராமத்தில் ஒரு வேளாண் குடும்பத்தில் 1.7.1947அன்று பிறந்தவர். பொறியியல் பட்டம் பெற்றதுடன், தங்கப் பதக்கமும் பெற்றவர். மாணவர் பருவத்திலேயே அரசியலில் ஈடுபட்டவர். காந்தியவாதியான ஜெயப்பிரகாஷ் நாராயணனின் நம்பிக்கைக்கு உரியவராகத் திகழ்ந்தவர். 1974ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஜபல்பூர் நாடாளுமன்றத் தொகுதியின் இடைத் தேர்தலில் கல்லூரி மாணவரான […]

மேலும்....