மதமறுப்பு, ஜாதி மறுப்பு மணங்கள்தான் மனிதம் வளர்க்கும் செயல்முறை

– மஞ்சை வசந்தன் தொல் தமிழர் வாழ்வில் ஜாதியில்லை, மதம் இல்லை, வருணம் இல்லை. “யாதும் ஊரே யாவரும் கேளிர்!” என்பதே தமிழர் தம் வாழ்வியல் கோட்பாடு. பெண்களுக்கே சமுதாயத்தில் முன்னுரிமை. சொத்து, நிர்வாகம், உரிமைகள் அனைத்தும் பெண்களிடமே இருந்தன. அதனால் தமிழர் சமுதாயம் தாய் வழிச் சமுதாயமாகும். ஆணும் பெண்ணும் காதல் கொண்டு இருமனமும் ஒத்துப்போனால் இருவரும் இணைந்து வாழத் தொடங்குவர். பெண்ணை மணந்துகொள்ளும் ஆண் பெண்ணின் வீட்டில் சென்று வாழ்வான். பெண் தன் குடும்பத்தில் […]

மேலும்....

அறநிலையத் துறையை அகற்றக் கோருவது பார்ப்பன ஆதிக்கத்திற்காகவே!

– மஞ்சை வசந்தன் தெலங்கானா மாநிலம், நிஜாமாபாதில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் 3.10.2023 அன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் தமிழகக் கோவில் களை ஆக்கிரமித்துள்ளதாகக்கூறி, தி.மு.க. அரசிற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் பிரதமர் நரேந்திர மோடி சில கேள்விகளைக் கேட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி பேசியது: ‘‘தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாட்டில் ஹிந்துக்களுக்குச் சொந்தமான வழிபாட்டுத் தலங்களை மாநில அரசு வலுக்கட்டாயமாக தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. அதுபோல சிறுபான்மையினருக்குச் சொந்தமான வழிபாட்டுத் தலங்களை தங்களுடைய […]

மேலும்....

முகப்புக் கட்டுரை – மூடநம்பிக்கைகளை முனைந்து பரப்பும் ஊடகங்கள்! – மஞ்சை வசந்தன்

மூடநம்பிக்கைகள் இருவகைப்படும். ஒன்று அறியாமையால் ஏற்படுபவை. மற்றொன்று திட்டமிட்டே சுயநலத்திற்காக மக்களை ஏமாற்றி வருவாய் ஈட்ட உருவாக்கப்படுபவை. கடவுள், விதி, பிறவி, பாவ புண்ணியம், சொர்க்கம், நரகம், சூரிய கிரகணம், சந்திர கிரகணம், திருஷ்டி கழிப்பு, பேய், பலியிடல் போன்றவை அறியாமையால் வந்தவை. மந்திரம், பில்லி சூனியம், சோதிடம், பரிகாரம், தாயத்து, தகடு, முடிக்கயிறு, காணிக்கை, சடங்குகள் போன்றவை திட்டமிட்டே உருவாக்கப்பட்டவை. அண்மைக்காலத்தில் விதவிதமாய் மக்களை ஏமாற்ற, வருவாய் ஈட்ட ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மூடநம்பிக்கையைப் புதிதுபுதிதாய் […]

மேலும்....

சனாதனம் தகர்த்து  சமதர்மம் காத்தவர்  வள்ளலார்! – மஞ்சை வசந்தன்

ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. மற்றும் அவற்றின் கிளை அமைப்புகளால் வெகுவாக உயர்த்திப் பிடித்துக் கொண்டாடப்-படுவது சனாதன தர்மம். செத்துப்போன காஞ்சிப் பெரிய சங்கராச்சாரி (சந்திரசேகரன்) தனது தெய்வத்தின் குரல் முதல் பகுதியில், ஆதிசங்கரர் நெறியே சனாதனம்தான் என்கிறார். ஆரியர் அனைவரும் சனாதன தர்மமே சிறந்தது; நிலையானது, சமுதாய நலனுக்கு ஏற்றது என்கின்றனர். காரணம், ஆரியர் மேலாதிக்கத்தை, நலத்தை, உயர்வை உறுதி செய்ய உருவாக்கப்பட்டது சனாதனம். எனவே அவர்கள், தங்கள் அடிப்படைக் கொள்கையாக சனாதனத்தைக் கொண்டனர். மற்றவர்களுக்கு எவ்வளவு கேடு […]

மேலும்....

முகப்புக் கட்டுரை – செவ்வாய் தோஷம்? மெச்சத் தகுந்த உச்சநீதிமன்ற ஆணை

– மஞ்சை வசந்தன் உத்தரபிரதேசத்தில் உள்ள அலகாபாத் உயர்நீதிமன்றம் பல நேரங்களில் பரபரப்பான தீர்ப்புகளை வழங்கிய முக்கியமான நீதிமன்றம். அண்மையில் அந்த நீதிமன்றத்தில் ஒரு வழக்கு. உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக் கூறி, ஒரு பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்தினார். ஆனால், அந்தப் பெண்ணை திருமணம் செய்துகொள்வதைத் தவிர்த்து, தொடர்ந்து ஏமாற்றி வந்தார். பாதிக்கப்பட்ட அப்பெண் புகார் அளித்ததை அடுத்து அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். பிணை கோரி, அவர் அலகாபாத் […]

மேலும்....