உலகெங்கும் பரவிடும் பகுத்தறிவு பகலவன்

தந்தை பெரியார் பக்தி நிறைந்த வைதிகக் குடும்பத்தில் பிறந்தவர். தொடக்கப்பள்ளி படிப்பையே முழுமையாக முடிக்காதவர். ஆனால், அவர் அளித்த அரிய சிந்தனைகள், தீர்வுகள், பிரச்சாரங்கள், போராட்டங்கள், வெற்றிகள் ஏராளம் என்பதோடு, எவரும் செய்யாதவை. நான்காம் வகுப்பு படித்த பெரியாரின் சிந்தனைகள், போராட்டங்களை பிரச்சாரக் கருத்துகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றோர் பலர். பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் கூறியதுபோல அவரது மண்டைச் சுரப்பை இன்று உலகம் ஏற்கிறது. அவரது சிந்தனைகள் உலகமெங்கும் பரவி வருகின்றன. தமிழர் தலைவர் […]

மேலும்....

இழந்தது போதும்!

கார்த்திகா தனது வீட்டில் தடபுடலாக நடைபெற்று வரும் பூசையை கடுப்புடன் கவனித்துக் கொண்டிருந்தாள். கார்த்திகாவுக்கு அதில் சற்றும் விருப்பம் இல்லை. தனது கணவன் விசுவும் அண்ணன் காளியும் இதே பிழைப்பாக இருப்பது அவளுக்குப் பிடிக்கவில்லை. விதவிதமான நிறங்களில் வேட்டிகளைக் கட்டிக் கொண்டு மேற்சட்டைகூட அணியாமல் எப்போதும் சாமிக்கு பூசை, பூசை என்று திரிந்து கொண்டு பணத்தையெல்லாம் செலவு செய்து வருகிறார்களே என்று மனம் புழுங்கினாள். அது மட்டுமல்ல, கணவனும் அண்ணனும் ஒன்று சேர்ந்து பல மாதங்கள் தொடர்ச்சியாக […]

மேலும்....

துரியோதனன்

‘‘கற்றவர்க்கும் நலன் நிறைந்த கன்னியர்க்கும் வண்மை கை உற்றவர்க்கும் வீரரென்று உயர்ந்தவர்க்கும் வாழ்வுடைக் கொற்றவர்க்கும் உண்மையான கோதின் ஞான சரிதராம் மற்றவர்க்கும் ஒன்று சாதி நன்மை தீமை இல்லையால்’’ எனப் பேசியவன் துரியோதனன். ஜாதி இருக்கிறதுதான் என்றாலும் எங்கெங்கு ஜாதி பார்க்கப்பட வேண்டும் என்று பகுத்துக் கூறும் பாங்கு கவனிக்கப்படத்தக்கது. தூணில் பிறந்த நரசிம்மன், அப்சரஸைப் பார்த்ததும் விந்து வழியவிட்ட பரத்வாஜன், அவன் விட்ட இந்திரியம் பிடித்த பானையில் பிறந்த துரோணன், குடத்தில் பிறந்த குள்ளமுனி அகத்தியன், […]

மேலும்....

ஓய்வறியாச் சூரியன்!

ஓய்வறியாச் சூரியன்நீ                 உலகின் பெருந்தலைவன்! ஏய்ப்போர் திமிரடக்க                 எழுந்த எரிமலை நீ!   நீயில்லாத் தமிழகமோ                 நிலவில்லா வானம்தான்! தாயில்லாச் சேயெனவே                 தவிக்கின்றோம் இந்நாளில்!   சாகாத வானம் நீ!                 சரியாத இமயம் நீ! ஆகா மடமையினை                 அழிக்கவந்த செந்தீ நீ!   நாடுமொழி இனம்வாழ                 நாளும் உழைத்தவன் நீ! ஈடிணையே இல்லாத                 இன்பத் தமிழ்முரசம் நீ!   எதிரிகளின் வஞ்சகத்தை                 இறந்தபின்னும் வென்றவன் […]

மேலும்....