குறும்படம்

தலைப்பில்லாத குறும்படம் இது குறும்படத்தின் தலைப்பல்ல; ஆனாலும், ஏறக்குறைய 2 லட்சம் பேர்கள் வரை பார்த்திருக்கிறார்கள். கதை, “தன் திறமையை உணராததுதான் மாற்றுத் திறனாளித்தனம்’’ என்பதாக அமைந்துள்ளது. முதன்மைச் சாலை ஒன்றில் மாற்றுத் திறனாளி ஒருவர் (கால் மட்டும் சற்று தாங்கியபடி நடக்கிறார்) பிச்சை எடுக்கிறார். சிக்னலில் நிற்கும் ஆட்டோவை நெருங்கி அதன் ஓட்டுநரிடம் கையேந்துகிறார். அவர் மறுக்கிறார். அடுத்து, சவாரி செய்யும் நபரிடம் கையேந்துகிறார். அவர் காசு போடுகிறார். கையேந்தியவர் போன பிறகு, ஆட்டோ ஓட்டுநரிடம், […]

மேலும்....

ஆனாலும் அவர் என்றும் நம்மிடம் வாழ்வார்!

தஞ்சை மாவட்டம் முழுவதும் ஊர் ஊராகச் சென்று இயற்கை வேளாண்மை பற்றி பிரசாரம் செய்ததோடு, பாரம்பரிய நெல் விதைகளை சேகரித்தார். சேகரித்த நெல்லை தன் வயலில் விதைத்துப் பெருக்கி ஆர்வமுள்ள விவசாயிகளுக்குக் கொடுத்துப் பரவலாக்கினார். அழிவின் விளிம்பில் இருந்த பாரம்பரிய நெல்ரகங்கள் இவரால் மீட்கப்-பட்டன. இந்த ரகங்களுக்கு இருந்த சந்தை மதிப்பைப் பார்த்து, பல விவசாயிகள் முழுமையாக பாரம்பரிய இயற்கை வேளாண்மைக்குத் திரும்பினார்கள். இந்தப் பாரம்பரிய விதைநெல் பரிமாற்றத்தை பெரும்திருவிழாவாக நடத்தத் தொடங்கினார். `நெல் திருவிழா என்ற […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கூட்டணியில் குழப்பம் ஏதும் இல்லை! கே:       பார்ப்பனர்களிடையே உள்ள இன உணர்வு தமிழர்களிடையே இல்லாததற்குக் காரணம் என்ன?                 – நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர் ப:           பார்ப்பனர்கள் மிக மிகச் சிறுபான்மையினர் (Microscopic Minority), ஒரே மொழி சமஸ்கிருதம் முதலியவற்றை வைத்து, தங்களின் வாழ்வுப் பாதுகாப்பு -_ ஒரே தன்மை (Microscopic Minority) அவர்களை ஒன்றுபட வைத்துள்ளது. உலகெங்கும் உள்ள மிகச் சிறுபான்மையினருள் ஒற்றை இனத்தவர் ஒற்றுமை என்பது அதன் அடி நீரோட்டத்தால் ஏற்பட்டுள்ளது. மிகப் பெரும்பான்மை-யானவர்களான திராவிடர் […]

மேலும்....

கடலில் கலக்கும் கச்சா எண்ணெயைப் பிரித்தெடுக்க கண்டுபிடிப்பு!

கிராமப்புற பள்ளி 10ஆம் வகுப்பு மாணவன் சாதனை! அடித்தட்டு அறிவாளிப் பிள்ளைகளை அழுத்தி ஒழிக்க ‘நீட்’ தேர்வு நடத்தி வஞ்சிக்கும், அநியாயம் செய்யும் அயோக்கியர்களால் ஒதுக்கப்படும் நம் பிள்ளைகளின் சாதனையைப் பாரீர்! விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி வட்டத்தில் இருக்கிறது கல்யாணம்பூண்டி கிராமம். இங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்புப் படிக்கும் மாணவர் ஜெயச்சந்திரன். கடலில் மிதக்கும் கச்சா எண்ணெயை எளிய முறையில் பிரித்தெடுக்கும் அவரது திட்டம், மதுரையில் நடந்த 46ஆவது ஜவஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சியில் […]

மேலும்....

டிசம்பர் 30 ஓசூரில் ஜாதி-தீண்டாமை ஒழிப்பு மாநாடு

தந்தை பெரியாரின் முதன்மை இலக்கும் கொள்கையும் ஜாதி ஒழிப்பே! சமுதாயத்தின் மீது ஆரிய பார்ப்பனர்கள் சுயநலத்திற்குத் திணித்த பிணித்த நோய் ஜாதி! அந்நோய்க்கு ஒரே மருந்து சுயமரியாதை உணர்வும், மனிதநேய மனமும்தான்! இடஒதுக்கீட்டில் ஜாதி அளவுகோல் சமூகநீதிக்கான மருந்தாகத்தான் பயன்படுத்தப்படுகிறது. அது ஜாதி வளர்க்காது! பெயருக்குப் பின்னால் ஜாதியைப் போடுவதை கேவலமாக நினைக்கும் உளப் பக்குவத்தை தந்தை பெரியார் ஊட்டி வளர்த்தார். அதன் விளைவாய் தமிழகத்தில் பெயருக்குப் பின் ஜாதியைக் குறிப்பிடும் அவலம் முற்றாக ஒழிந்தது. ஆனால், […]

மேலும்....