சிந்தை கிளறிய தந்தை பெரியார்!

மூடம் அகற்றிட பாடம் சொன்னவர்! வேடம், புனைவுகள் ஓடச் செய்தவர்!   தொலைநோக்குப் பார்வையில் மலைநிகர் ஆதிக்கம் நிலைகுலையச் செய்தவர்!   கடவுள், மதம், ஜாதி கற்பனைப் புராணங்கள் மடம், கோயில், மகத்துவம் மதிகெடுக்கும் சாஸ்திரங்கள் ஒழியச் செய்தவர்! விழிகளைத் திறந்தவர்!   எதிர்கால உலகை எண்பதாண்டுக்குமுன் கணித்துச் சொன்னவர்! காலத்தை வென்றவர்!   சனாதனம் தகர்த்து சமத்துவம் உருவாக்கி சமூகநீதி தந்து சரித்திரமானவர்!   – மஞ்சை வசந்தன்

மேலும்....

மேற்குத் தொடர்ச்சி மலை

படம் நன்றாக இருக்கிறது என்று கேள்விப்பட்டு சரி பார்த்துவிடலாம் என்று முடிவெடுத்தேன். சனிக்கிழமை இரவு. நீண்ட வரிசையில் டிக்கெட் வாங்கி உள்ளே செல்லும் வரை அந்தப் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் தான் இருந்தேன்! திரையில் காட்சி விரியத் தொடங்கிய அடுத்த 10 நிமிடங்களில் நம் கவனத்தை தனக்குள் குவித்துவிடுகிறது ‘மேற்குத் தொடர்ச்சி மலை’. அவ்வளவு அழகாக அடர்ந்த காடுகளுனூடே புகுந்து அசத்தியிருக்கிறது ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரின் கேமரா! திரைப்படங்களில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த […]

மேலும்....

இது பெரியார் மண்

காவி கறை படிந்த தேசத்தில் கருப்பாய் ஒளிரும் மண்! பிற்போக்கின் பிறப்பிடமாய் வடக்கு தேயும் போது முற்போக்கின் முன்னோடியாய் முந்தி நிற்கும் மண்! பசுவுக்கு  பாதுகாவலர்கள் இருக்கும் நாட்டில் மாட்டுக்கறி விருந்து தந்து மனித உரிமை காத்த மண்! பிணம் எரிப்பவரின் பிள்ளையை இட ஒதுக்கீட்டால் இஞ்சினியர்களாக்கி ஏற்றம் காணச் செய்த மண்! அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு அடிமை வட்டத்திற்குள் அடைக்கப்பட்ட பெண்களை ஆணுக்கு நிகராய் ஆக்கி அழகு பார்க்கும் மண்! சுயமரியாதைத் திருமணச் சட்டம் […]

மேலும்....

பெரியாரின் மாணவர் கலைஞர்!

“பாராட்டிப் போற்றி வந்த பழமை லோகம்.. ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்….’’ என்று எழுதியவர் கலைஞர். அவர் தனது குருகுலத்தில் பயின்ற இலட்சியக் கல்வியின் விளைவே இந்த வரிகள். திருக்குவளையும் திருவாரூரும் அவர் பள்ளிப் படிப்பைப் பயின்ற ஊர்களாக இருக்கலாம். ஈரோடுதான் அவரது அரசியல் பல்கலைக்கழகம். மாணவர் நேசனும் முரசொலியும் அவருக்கு முறைசாரா கல்வி என்றால், ‘குடிஅரசு’ இதழ்தான் அவருக்கு முறைப்படி அனுமதி தந்து பயிற்சி அளித்த கல்வி நிறுவனம். காரணம், அங்குதான் அவர் பெரியார் என்ற […]

மேலும்....