ஆதிவாசி என்போர் மண்ணின் மக்கள்! காட்டுவாசி என்பது ஆர்.எஸ்.எஸ். சூழ்ச்சி!

ஒடுக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்நாட்டில் உரிமைகள் பறிக்கப்பட்ட மக்களான பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர் என்ற பிரிவினர் பெரும்பகுதி மக்கள் மட்டுமல்ல; நாட்டின் ஆதிக் குடியினரும்கூட! அதனால்தான் அவர்களுக்குரிய வரலாற்றுப் பெயராக ‘ஆதிதிராவிடர்கள்’ என்ற பெயர் தென்னாட்டில் நிலவி, தமிழ்நாடு அரசில் சுமார் 40 ஆண்டுகளாக அதிகாரப்பூர்வ பெயராகவே நீடிக்கிறது! இந்த ஒடுக்கப்பட்ட மக்களை பிரிட்டிஷ் ஆட்சியில் 1935 ஆம் ஆண்டு ஒரு சர்வே மூலம் அடையாளம் கண்டே, ‘பழங்குடியினர்’, ‘தாழ்த்தப்பட்டோர்’ ஆகியோரின் உரிமைக்காக ஓர் அட்டவணை (Schedule) தயாரிக்கப்பட்டு, […]

மேலும்....

பா.ஜ.க.வீழ்த்தப்படவேண்டும்!

சமூகநீதிக்காகவே அரசியலில் (1917) ஈடுபட்டு, பிறகு அதனை அன்றைய ஆதிக்கத்தின் பிடியிலிருந்த காங்கிரஸ் ஏற்க மறுத்தவுடனேயே அதிலிருந்து வெளியேறி, முழு மூச்சாக ஒரு சமூகநீதி. சுயமரியாதைப் போராளியாக தனது இறுதி மூச்சு வரையில் போதித்தும், போராடியும், சாதித்தும் சரித்திரம் படைத்தவர் தந்தை பெரியார்! ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, உத்தியோகம், சம உரிமை, சம வாய்ப்புக்கான சமூகநீதிக் கொடியைக் காக்க எதிர்நீச்சலடித்துப் புரட்சியாளர் அம்பேத்கர் களங்கண்டார். இவர்களுக்கு முன்னோட்டமாக மராத்தியத்தில் ஜோதிபாபூலேவும், கோலாப்பூர் மன்னர் சாகுமகராஜ் அவர்களும் தெற்கே […]

மேலும்....

நம்மை அடிமையாக்கத்தான் மதப் பண்டிகைகள்!

திராவிடத்தின் ஆதிமக்களாகிய தமிழர்களுக்குரிய பண்டிகை என்பதாக ஒன்றைக் காண்பது மிக அரிதாக உள்ளது. இதன் காரணம் என்னவென்றால், கலாச்சாரத் துறையில் தமிழனை ஆதிக்கம் கொண்டவர்கள் தங்களது கலாச்சாரங்களைத் தமிழனிடம் புகுத்துகிற வகையில் முதல் பணியாக – தமிழ்நாட்டின் – தமிழனின் கலாச்சாரங்களை, பழக்க வழக்கங்களை அடியோடு அழித்து மறைத்து விட்டார்கள். இதனால் தமிழனுக்குரிய கலாச்சாரம் எது என்று அறிவது கூட மிக மிகக் கடினமான காரியமாகிவிட்டது! தமிழனின் கலாச்சாரப் பண்புகள் அழித்து ஒழித்து மறைக்கப்பட்டன என்பது மாத்திரமல்லாமல், […]

மேலும்....

ஜப்பானில் ‘‘ஈரோட்டுப் பூகம்பம்!’’

ஜப்பான் நாட்டின் வரலாற்றிலிருந்து மற்ற உலக நாட்டு மக்கள் கற்றறிந்து பயன் பெறும் பல்வகைப் பாடங்கள் ஏராளம் உண்டு. ‘‘மனிதர்களே மனிதர்களை அழிக்கும் போரின் அழிவுகளிலிருந்து மீள பல தலைமுறைகள் ஆகும்’’ என்ற பொது உண்மையை, தங்களது தன்னம்பிக்கையாலும், தளரா உழைப்பினாலும், அடக்கம்மிகு அறிவு, அறவாழ்வியல் முறையாலும் மாற்றியது அந்நாடு! அழிவுகளிலிருந்து மீண்டு ஆக்கப்பூர்வத்திற்குரிய அடிக்கட்டுமானத்தை அமைத்து, அறிவுப்பூர்வமான சாதனைகளைத் தங்களது விடா முயற்சியினால் உலகுக்குத் தங்கள் வெற்றியை இன்றும் என்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கும் சிறப்புமிகுந்த நாடு […]

மேலும்....

கல்விக் கூடங்களில் மூடநம்பிக்கைப் பிரச்சாரமா?

உடனடி நடவடிக்கை எடுத்த கல்வி அமைச்சருக்குப் பாராட்டு! சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஊக்க உரை (Motivational Speech) என்ற பெயரில் ‘‘பரம்பொருள் பவுண்டேஷன் மகாவிஷ்ணு’’ என்பவர் மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் ஆற்றிய உரையும், அது மாணவிகளிடம் ஏற்படுத்திய தாக்கமும் அந்த நிறுவனமே வெளியிட்ட காணொளியால் நேற்று (5.9.2024) சமூக ஊடகங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்குச் சில நாள்களுக்கு முன்பே சைதாப்பேட்டை மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடந்த இதே போன்ற நிகழ்விலும், […]

மேலும்....