விழிப்பூட்டும் விடுதலை – 2 திரைப்படம் !- வழக்குரைஞர் துரை.அருண்

“இந்தப் போராட்டம் எங்களால் தொடங்கப்படவுமில்லை, எங்களோடு முடியப்போவதுமில்லை. மனிதனை மனிதன் சுரண்டும் சமூக அமைப்பு மாறும் வரை இப்போராட்டம் தொடரும் பாலுக்கு அழாத குழந்தையும் கல்விக்கு ஏங்காத மாணவனும், வேலைக்கு அலையாத இளைஞனும் உள்ள நாடே என் கனவு இந்தியா” என்றார் பகத்சிங். பகத்சிங் கண்ட கனவு தமிழ்நாட்டில் ஓரளவிற்கு நனவாகியுள்ளது என்றே சொல்லலாம். ‘விடுதலை’ திரைப்படம் முழுக்க முழுக்க கற்பனைக் கதை என்று அதன் இயக்குநர் வெற்றிமாறன் அறிவித்ததாலும், சிலர் மார்க்சியத்தை விடுதலை திரைப்படத்தில் தேட […]

மேலும்....

லப்பர் பந்து…

கிராமத்திலும் அதையொட்டிய சிறு நகரத்திலும் நடக்கும் அசலான கிரிக்கெட் போட்டிகள் – அப்படியே நம்மைக் கிராமத்திற்கே அழைத்துச் செல்கிறார் இயக்குநர். படத்தின் முதல் காட்சியில் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிந்து திட்டக்குடியில் நடக்கும் போட்டியில் தனது ஊர் சார்பாகக் கலந்துகொள்ளும் ஜாலிபாய்ஸ் அணிக்காக விளையாடச் செல்வார் அன்பு. அப்போது அன்புவைக் கடந்து செல்லும் ஒரு சிறுவன் தனது சக நண்பனிடம் ’டேய் இந்த அண்ணண் எங்க ஸ்கூல்ல தாண்டா படிக்குது. செம்மையா யார்க்கர் போடும்டா’ எனச் சொல்லி… […]

மேலும்....

பேச வேண்டியதைப் பேசும் ‘அஞ்சாமை’!- திருப்பத்தூர் ம.கவிதா

“அப்பா எக்ஸாம் எழுத முடியாதாப்பா…” “ச்சே ச்சே…அப்பா இருக்கேன் பா… நீ ஏன்பா கவலைப்படுற… நாம போவோம் பா…” இந்த உரையாடல்களில் உள்ளிருக்கும் சிக்கல்களுக்குள் சிக்கிக் கொண்டது பூக்கள் பயிரிடும் ஓர் எளிய விவசாயக் குடும்பம். கூத்துக் கட்டும் தந்தை போல மகனும் வந்து விடக்கூடாது, கல்வி கற்க வேண்டும் என்று கவனமாக இருந்த துணைவி… அரசுப் பள்ளியில் பயின்று மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண் எடுத்த மகன்… அண்ணனின் படிப்பிற்காக தொலைக்காட்சியைச் சற்றுத் தள்ளி வைக்கக் கேட்டுக்கொள்ளப்பட்ட […]

மேலும்....

வாழைத் தோட்டம் சென்று வந்தோம்… – வழக்குரைஞர் துரை. அருண்

கண்டதாவது… “காலுக்கு செருப்புமில்லை கால் வயிற்றுக்கு கூழுமில்லை பாழுக்கு உழைத்தோமடா என்தோழனே பசையற்றுப் போனோமடா என் தோழனே” என்ற முதுபெரும் பொதுவுடைமை இயக்க தலைவர் ஜீவாவின் பாடலுக்கு ‘வாழை’ திரைக்காவியத்தில் பதவுரை எழுதி இருக்கிறார் மாரி செல்வராஜ். உழைப்பாளி மக்கள் அதிகார வர்க்கத்தால் எப்படி சுரண்டப்படுகிறார்கள் – அதற்கெதிரான தன்னெழுச்சியான மக்கள் போராட்டம் – வெறும் உடல் உழைப்பைச் செலுத்தும் உழைப்பாளிகள் இறுதிவரை வாழைத் தார் சுமக்கும் கூலிகளாகவே இருக்க நிர்பந்திப்பதும் – ஒரு தாருக்கு ஒரு […]

மேலும்....

வரவேற்கப்பட வேண்டிய “லாபட்டா லேடிஸ்!” திருப்பத்தூர் ம.கவிதா

ஒரு பெண் தன் ஏக்கங்களை தன் கணவனிடம்கூட வெளிப்படையாகப் பேசாமல் கமுக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்; தன் கோபதாபங்களையும், சுற்றுச்சூழல் ஏற்படுத்தும் அழுத்தங்களையும் குடும்பத்திலோ பொதுவெளியிலோ உடைத்துப் பேசாமல் இருப்பது தான் நல்ல பெண்ணுக்கான அழகு!இப்படியாகிய குப்பைச் சிந்தனைகளைக் கூட்டிப் பெருக்கி தூரக் கொட்டி, தனக்கானதைத் தயக்கமற பெண்கள் உரக்கப் பேசுகிற காலம் தற்காலம்! முக்காடுக்குள் முகம் மறைத்து மூச்சு முட்டிக் கொண்டிருக்கும் வட இந்திய திருமணச் சடங்குகளின் கேலிக்கூத்து திறம்பட திரைப்படமாகி வெளிவந்திருப்பது தான் ”லாபட்டா […]

மேலும்....