சமூக நீதியின் வெற்றி ! நீதிபதி சிறீபதி !

தமிழ்நாட்டில் நடைபெற்ற பெண்ணுரிமை, சமூகநீதிக்கான சுயமரியாதை இயக்கத்தின் போராட்டங்களின் விளைவாக பெண்கள் கல்வி கற்று முன்னேறி வருகின்றார்கள். தந்தை பெரியார் காண விரும்பிய புரட்சிப் பெண்கள், ஒடுக்கு முறைகளை உடைத்து எழுச்சி பெற்று வருகின்றனர். அத்தகைய சாதனையைப் புரிந்த சாதனையாளர்களில் ஒருவர்தான் சிறீபதி. திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த 23 வயதான சிறீபதி எனும் பழங்குடி வகுப்பைச் சார்ந்த பெண், அண்மையில் நடைபெற்ற சிவில் நீதிமன்ற நீதிபதிகள் தேர்வில் வெற்றி பெற்று […]

மேலும்....

மரப்பொருள்கள் தயாரிப்பில் சாதனை புரியும்

கடலூர் மாவட்டம் பாதிரிக்குப்பத்தில் இயங்கிவரும் ‘உட் லிட்டில் டாய் & கிராஃப்ட்ஸ்’ என்னும் தொழிற்கூடத்தின் உரிமையாளர் சுதா, சுற்றுச்சூழல் மேலாண்மைப் பட்டதாரி. தன் குழந்தைகள் விளையாட மரத்துண்டுகளில் பொம்மைகள் செய்ய ஆரம்பித்தவர், இன்று முதல் தலைமுறை தொழில் முனைவோராக உயர்ந்துள்ளார். பண்ருட்டியிலிருக்கும் கீழக்கொல்லை கிராமம் சுதாவின் சொந்த ஊர்.D.T.Ed., B.Sc., B.Ed., TET எல்லாம் முடித்து, ஆசிரியர் பணிக்காக காத்திருந்த போது திருமணம் நடந்தது. சுதா குழந்தையாக இருந்தபோது, அழும்போதெல்லாம் இவரின் தாத்தா மரத்தில் பொம்மை செய்து […]

மேலும்....

தடகளத்தில் சாதனை புரிந்துவரும் விளையாட்டு வீராங்கனை வித்யா!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 2023இல் தமிழ்நாட்டின் தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ், தேசிய சாதனையைச் சமன் செய்துள்ளார். சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார். இதுமட்டுமில்லாமல், இறுதிப்போட்டிக்கு முந்தைய அரையிறுதியில் பி.டி. உஷாவின் சாதனையையும் அவர் சமன் செய்துள்ளார். கோவையைச் சேர்ந்த வித்யாராம்ராஜ், கொரோனா பொது முடக்கத்திற்குப் பின் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். இவரின் தந்தை ராம்ராஜ் தாணி(ஆட்டோ) ஓட்டுநர். வித்யாவிற்கு ஒரு சகோதரி உள்ளார். […]

மேலும்....

ஆட்டோ ஓட்டுநர் தோழர் பவானி!

ஈரோடு மாவட்டத்தில் 13 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டும் பவானி, எத்துறையிலும் பெண்களால் பணிபுரிய முடியும். சாதிக்க முடியும் _ என முன்னுதாரணமாகத் திகழ்பவர் 50 வயதான இவர் எவர் சார்பும் இன்றி, தன் கடின உழைப்பால் வாழ்ந்து வருகிறார். ஈரோடு மாவட்டம் சூரம்பட்டிவலசு ஊரைச் சேர்ந்தவர் பவானி. இவரின் கணவர் 2010இல் சாலை விபத்தில் இறந்துவிட்டார். அப்போது இவருக்கு 37 வயது. கணவரின மரணத்தால் இவரின் வாழ்க்கையே மாறிப்போனது. கட்டட வேலை, மருத்துவமனையில் ஆயா வேலை எனப் […]

மேலும்....

பெண்ணால் முடியும் – ஈட்டி எறிதல் போட்டியில் சாதனை புரிந்துவரும் விளையாட்டு வீராங்கனை கோமதி !

நேபாளில் நடைபெற்ற ஈட்டி எறிதல் சர்வதேச அளவிலான போட்டியில் தங்கம் வென்று சாதித்துள்ளார் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டத்தைச் சேர்ந்த சோழவரம் கிராமத்தில் வசித்துவரும் கோமதி அவர்கள். இவரின் அம்மா சாவித்திரி, அப்பா முனிசாமி, இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு அஸ்வினி, ஆனந்தி, கோகிலா மற்றும் கோமதி என நான்கு மகள்கள். கோகிலாவும், கோமதியும் இரட்டை சகோதரிகள். கோமதி இரண்டு வயதாக இருக்கும் போதே இவரின் அப்பா இறந்துவிட்டார். 4 பெண் குழந்தைகளை வளர்க்க […]

மேலும்....