நமது இலக்கியம் அழிந்த விதம் – தந்தை பெரியார்

ராமாயணம், பாரதம், பாகவதம், கந்தபுராணம், பெரிய புராணம், திருவிளையாடல் புராணம் இவைகள் தமிழில் செய்யப்பட்டிருக்கின்றன என்பதல்லாமல் இவற்றுள் ஒழுக்கமோ, தமிழர் உணர்ச்சியோ ஏதாவது இருக்கிறதாக சொல்ல முடியுமா? நமது சமயம் பண்டிகை உற்சவம், கடவுள், வாழ்வு நாள், கோள் எல்லாம் இவைகளில் அடங்கியவை அல்லாமல் வேறு ஏதாவது ஆதாரம் வைத்திருக்கிறோமா? ஒரு நண்பர் சொன்னார்_ “இந்த நவராத்திரி பண்டிகையும், ஆடிப்பெருக்கு பண்டிகையும் பழைய இலக்கண இலக்கியங்களையும் கலைகளையும் ஒழிப்பதற்கும் பயன்பட்டு வந்திருக்கின்றன” என்று. நம் வீட்டில் உள்ள […]

மேலும்....

அறிவுக்கு முழு சுதந்திரம் தேவை

… தந்தை பெரியார் … ஜாதி என்பது இன்றைக்கு நமது சமுதாயத்தில் இருந்து வருகிற ஒரு மாபெரும் கேடாகும். இது இன்று நேற்றிலிருந்து வரவில்லை. சுமார் 2000, 3000 ஆண்டுகாலம் தொடங்கி இருந்து வருகிறது. நமது நாட்டில் எத்தனையோ முனிவர்கள், மகான்கள், மகாத்மாக்கள் தோன்றி வந்திருக்கிறார்கள். அவர்கள் யாராலும் ஜாதி ஒழிக்கப்படவில்லை. ஆகவே, இனி ஒரு மகான் தோன்றி, ஜாதியை ஒழிப்பார் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. ஜாதியின் காரணமாகத்தான் 100க்கு 97 பேராக உள்ள திராவிட […]

மேலும்....

கட்டுரை – தந்தை பெரியாரும் ஜாதி ஒழிப்பும்

– வழக்குரைஞர் பூவை புலிகேசி தந்தை பெரியார் ஒரு பிறவிச் சிந்தனையாளர். ஆனால், தந்தை பெரியார் ஒரு கடவுள் மறுப்பாளர் என்றும் நாத்திகர் என்றும் எதிர்மறை அடையாளமே அதிகம் அடையாளப்படுத்தப்பட்டது. ஆனால், பெரியார் ஓர் அறிவியல் பார்வை கொண்ட மனித சமத்துவ சிந்தனையாளர். அதற்கான களப் போராளி. மனித சமத்துவத்திற்குத் தடையாக இந்திய மண்ணில் குறிப்பாக தமிழ்மண்ணில்  ‘ஜாதி’ என்னும் கொடிய நோய் கடவுள், மதம், வேதம், சாஸ்திரம், புராணம் ஆகியவற்றின் பேரால் நியாயம் என்று கற்பிக்கப்பட்டு […]

மேலும்....

தந்தை பெரியார் 145ஆம் ஆண்டு பிறந்தநாள்

பகுத்தறிவுப் பகலவனாகவும், பார் வியக்கும் சுயமரியாதைச் சிங்கமாகவும், உயர் சிந்தனையாளராகவும் விளங்கியவர் என்றென்றும் காலத்தை வென்ற தலைவர் அறிவு ஆசான் தந்தை பெரியார் ஆவார். ஒப்பாரும் மிக்காரும் இல்லாத புரட்சியாளர். தமது அறிவாயுதத்தின் மூலமே தனது லட்சிய வெற்றிகளை அமைதி வழியில் துளி ரத்தம் கூடச் சிந்த விடாமல் லட்சியப் போரில் வெற்றி கண்டு, அதைத் தமது வாழ்நாளிலேயே கண்ட வியத்தகு தலைவர் ! – கி.வீரமணி

மேலும்....

சமதர்மம் – தந்தை பெரியார்

சமதர்மம் என்றால், சாதாரணமாக பாரபட்சமற்ற நீதி, சமத்துவம், பேதமற்ற அதாவது உயர்வு, தாழ்வு இல்லாத நிலை என்பதாகும். ஆனால், இன்றைய வாழ்க்கையில் ஒவ்வொரு அம்சத்திலும், அதாவது ஜாதியில், கல்வியில், செல்வத்தில், வாழ்க்கை அந்தஸ்து நிலையில் மேல் கீழ் நிலை இருந்து வருகிறது. இவற்றை ஒழித்து யாவற்றிலும் சமத்துவத்தை நிறுவுவதற்கு சமதர்மக் கொள்கை ஆட்சி அவசியம் என்றால், மதக்காரர்களுக்கும், கடவுள் நம்பிக்கை கொண்ட ஆஸ்திகர்களுக்கும் கஷ்டமாயிருக்கிறது. உழைப்பாளி மக்கள் உடல் வருந்தியுழைத்த பின்னும் குடிக்கக் கூழ் இன்றியும், கட்டக் […]

மேலும்....