அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (323) – காளாஞ்சிமேட்டில் பெரியார் படிப்பகம் திறப்பு!

காளாஞ்சிமேட்டில் பெரியார் படிப்பகம் திறப்பு! – கி. வீரமணி வழக்குரைஞர் தஞ்சை அ. இராமமூர்த்தி – சரசுவதி ஆகியோருடைய செல்வனும் போரூர் இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் பணிபுரிபவருமான இரா.அப்புவும், நல்லூர் மு.துரைராஜ் அவர்களின் மகனும் திருப்பெரும்புதூர் பொறியியல் கல்லூரியில் பணிபுரிபவருமான து.நித்யாவும் வாழ்க்கைத் துணையேற்கும் நிகழ்ச்சி கடந்த 23.1.2004 அன்று காலை தஞ்சாவூர் சிவசிதம்பரம் பிள்ளை திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் தலைமையேற்றுப் பேசினார். துளசி அய்யா வாண்டையார் மணமக்களுக்கு […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (322)

இலண்டனில் பிரபுக்கள் சபையில் பொங்கல் விழா! – கி. வீரமணி லண்டனில் நடக்க இருந்த தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, ஜி.யு. போப் நினைவுச் சொற்பொழிவு, பொங்கல் விழாக்களில் பங்கேற்க சனவரி 14ஆம் தேதியன்று லண்டன் புறப்பட்டுச் சென்றோம். லண்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றோம். மிக முக்கியமாக சனவரி 18 (2004) அன்று பெரியார் பன்னாட்டு மய்யம் (Periyar International – U.K. Chapter) அமைக்கப்பட்டது குறிப்பிடத் தகுந்ததாகும். இலண்டன் ஆக்ஸ்போர்டு தமிழ்ச் சங்கத்தின் பிரபுக்கள் […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (321)

சத்தியராஜுக்கு நாத்திக நன்னெறிச் செம்மல் விருது! – கி. வீரமணி திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் சென்னை பெரியார் திடலில், திராவிடர் கழகத் தலைமை நிலைய அலுவலகத்தில் மானமிகு துரை. சக்ரவர்த்தி நிலையத்தில் எமது தலைமையில் 3.1.2004 சனி முற்பகல் 11:00 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது. தொடக்கத்தில் திராவிடர் கழகத் தலைமை நிலையத்தில் மறைந்த திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் துரை. சக்ரவர்த்தி அவர்களின் உருவப் படத்தைத் திறந்து வைத்தோம். சத்யராஜுக்கு ‘நாத்திக நன்னெறிச் செம்மல்’ விருது […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (319)

முரசொலிமாறன் மறைவு! – கி. வீரமணி மத்திய அமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும் தி.மு.க., தலைவர் கலைஞர் அவளால் தனது ‘மனசாட்சி’ என்று அழைக்கப்பட்டவருமான, சகோதரர் ‘முரசொலி’ மாறன் அவர்கள் 23.11.2003 மாலை இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து வருந்தினோம். “அவரது மறைவு, தி.மு.க.விற்கும், அதன் தலைவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மாத்திரம் இழப்பு அல்ல; திராவிடர் இயக்கத்திற்கும் இது ஓர் ஈடுசெய்ய இயலாத இழப்பாகும். மாறன் அவர்கள் ஒரு பல்துறை ஆற்றலாளர். […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (318)

தலைமைப் பொறுப்பை ஏற்கச் செய்த தோழர்களின் பாசம்! – கி. வீரமணி திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் 17.11.2003 அன்று திங்கள் காலை 10 மணிக்கு எமது தலைமையில் நடைபெற்றது. 8.11.2003 சனியன்று திருச்சியில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்றைத் தவிர மற்றத் தீர்மானங்களை திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் வரவேற்று, கழக அமைப்பில் செய்யப்பட்ட மாறுதல்களையும் ஒருமனதாக ஏற்றுச் செயல்படுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. […]

மேலும்....