வண்டிக்கு முன்னால் குதிரையா? குதிரைக்கு முன்னால் வண்டியா?

1. கே: சம்பல் பகுதியில் நடைபெற்ற வன்முறைக்கு ராகுல் கண்டனம் தெரிவித்திருப்பது- இஸ்லாமியர்களின் வாக்குகளைப் பெறுவதற்கான நாடகம் என்று மாயாவதி விமர்சனம் செய்துள்ளதைப் பற்றித் தங்கள் கருத்து என்ன? – க.காசி, தூத்துக்குடி. ப: நமது அன்பிற்குரிய மாயாவதி  அவர்கள் அரசியலில், கான்ஷிராம்  அவர்களது மறைவிற்குப் பின் திசை மாறிய- – தவறான பாதையில் பயணமாகி அதுவே அவரது செல்வாக்கு அரசியலிலும் சரி, பொது வாழ்விலும் சரி, மிகவும் கீழே இறங்கி வருகிறது நாளும் என்பது, அவரது […]

மேலும்....

குறள் அறிந்தவர் எழுச்சித் தமிழர்!

1. கே: ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டால், அதை நடைமுறைப்படுத்தாமல் தடுக்க நீதிமன்றம் செல்ல முடியுமா? மக்கள் மன்றம்தான் தீர்வா? -சுதே.தேவேந்திரன்,  தூத்துக்குடி. ப: மக்கள் மன்றமே- எப்போதும்- இறுதித் தீர்ப்புக்கான சரியான இடம்; பற்பல நேரங்களில் உச்ச,  உயர்நீதிமன்றங்களின் போக்கு, ‘அசல் அநியாயம்;  அப்பீலில் அதுவே காயம்’ என்ற கிராமத்துப்  பழமொழியை நினைவூட்டு வதாகவே இருக்கின்றனவே! 2. கே: அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவை அரசியலாக்கிக் கேவலப்படுத்திய ஆனந்தவிகடன் நிறுவனத்திற்கு அறம், […]

மேலும்....

(யானை படுத்தால்கூட குதிரை மட்டம் )கேள்வி – பதில்கள்

1. கே: மராட்டிய மாநில தேர்தல் முடிவிலிருந்து இந்தியா கூட்டணி கற்க வேண்டிய பாடம் என்ன? – கே.பாபு, தாம்பரம். ப: போதிய ஒருங்கிணைப்பு இன்மையும், அசாத்திய மெத்தனமும், சில போலிக் கருத்துக் கணிப்புகளால் உண்டாகும் மிதப்பும் கூடாது என்பதை உணரவேண்டும். 2. கே: தனித்து நின்றால் தி.மு.க.வோ, அ.தி.மு.க.வோ ஆட்சியமைக்க முடியாது என்று கூட்டணிக் கட்சித் தலைவர்களே கூறுவது சதிகாரர்களின் சூழ்ச்சிக்கு இடம் தருவதாகாதா? -இ.பெருமாள், தி.நகர். ப: யானை படுத்தால்கூட குதிரை மட்டம் என்பதை […]

மேலும்....

நிதீஷ்குமாரின் பேச்சு நீரின் மேல் எழுத்து !

1. கே: ஒருமித்த கருத்து கொண்டவர்களுடன் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ள நிலையில் பி.ஜே.பி.யுடன் எக்காலத்திலும் கூட்டணி கிடையாது என ஜெயக்குமார் கூறியிருப்பது குறித்து தங்கள் கருத்து என்ன? – அ.தியாகு, புதுச்சேரி. ப : குழப்பம்தான் அங்கேயே என்பதும் அதனால் ’முன்னே பார்த்தால் நாயக்கர் குதிரை; பின்னே பார்த்தால் ராவுத்தர் குதிரை’ என்று சாட்சியம் சொன்ன கதைதான்! அய்யோ- பதவி அரசியலே! 2. கே: ‘‘விடுதலைச் சிறுத்தைகள் […]

மேலும்....

அறநிலையத்துறைக்கு அதிகாரம் உண்டு…

1. கே: ஷிண்டே அவர்களின் மகன் கோயில் கருவறைக்குள் சென்றதைப் பெரும் பிரச்சினையாக்கும் சங்கிகளின் செயல் ஏற்புடையதா? – த.பாபு, தாம்பரம். ப: அவர்களுக்கு வாதாட, போராட வேறு பிரச்சினைகள் கிடைக்காததால் இப்படி என்பது இதன் மூலம் புரிகிறது. 2. கே: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் அவர்கள், கடவுள் வழிகாட்டலில் பாபர் மசூதி பிரச்சினையில் தீர்ப்பு எழுதியதாய்க் கூறியபின், அத்தீர்ப்பையே மறுஆய்வுக்கு உட்படுத்த சட்டப்படி இடம் உண்டா? – கே.தாமோதரன், செங்கல்பட்டு. ப: அவர் இப்படி […]

மேலும்....